கேலக்ஸி நோட் 7 வாங்க காசு இல்லையா.? பரவாயில்ல மச்சி.!!

சாம்சங் கேலக்ஸி 7 மாடலுக்கு பதில் எந்த மாடல் போனை வாங்கினால் முழு திருப்தி கிடைக்கும்

By Siva
|

சாம்சங் நிறுவனத்திற்கு 2016ஆம் ஆண்டு என்பது ஒரு சோதனையான ஆண்டு என்றே சொல்லலாம். அந்நிறுவனத்தின் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி 7, திடீர் திடீரென வெடித்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல நாடுகளின் விமான நிறுவனங்கள் கேலக்ஸி 7 மாடலை விமானத்தில் எடுத்து செல்ல கூடாது என்று அறிவுறுத்தியது.

இந்நிலையில் நீங்கள் இன்னும் சாம்சங் கேலக்ஸி 7 மாடலை வைத்திருந்தாலோ அல்லது சாம்சங் கேலக்ஸி 7 மாடலுக்கு பதில் எந்த மாடல் போனை வாங்கினால் முழு திருப்தி கிடைக்கும் என்று நினைக்கின்றீர்கள் என்பதை தெரிந்து கொள்ளவே ஒரு சிறு ஆய்வு.

2016-ல் வெளியான 5 சிறந்த பெஸல் லெஸ் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்கள்

சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ்

சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ்

சாம்சங் கேலக்ஸி 7 மாடல் மிகவும் கவர்ந்தது என்றாலும் ஒருசில பிரச்சனைகளுக்காக அந்த மாடலை தவிர்த்தே ஆக வேண்டும் என்று விரும்புபவர்கள், கிட்டத்தட்ட அதே மாடலை பயன்படுத்தும் உணர்வை பெற வேண்டுமானால் நீங்கள் தாராளமாக சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ் ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

என்னதான் சாம்சங் கேலக்ஸி 7 மாடலில் உள்ள ஐரிஸ் ஸ்கேனர் மற்றும் எஸ் பென் அம்சங்கள் சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ் மாடலில் இல்லை என்றாலும் இந்த மாடல்தான் சாம்சங் கேலக்ஸி 7 மாடலுக்கு சரியான இணையாக இருக்கும்.12 MP கேமிரா, ஷார்ப்பான ஸ்க்ரீன் ரெசலூசன் மற்றும் டிசைன் திருப்திகரமாக இருக்கும். மேலும் தண்ணீர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட் இதில் இருப்பது கூடுதல் சிறப்பு.

ஒன் ப்ளஸ் 3T:

ஒன் ப்ளஸ் 3T:

ஒன் ப்ளஸ் 3T மாடல் ஸ்மார்ட்போன் வாங்குவது உண்மையிலேயே அதற்காக செலவிடும் தொகைக்கு பயனுள்ளதாக இருக்கும். ரூ.34999 முதல் ஆரம்பமாகும் இந்த மாடல் போன்களில் நாம் கொடுக்கும் தொகைக்கு அதிகமாக வசதிகள் இருப்பதால் மற்ற மாடல்களை விட வாடிக்கையாளர்கள் இந்த மாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

5.5 இன்ச் HD ஆப்டிக் அமோல்ட் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ், 6 GB ரேம், அதிகளவிலான இண்டர்னல் ஸ்டோரேஜ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர் உள்பட பல முக்கிய அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மோட்டோ Z ஃபோர்ஸ் டிராய்டு

மோட்டோ Z ஃபோர்ஸ் டிராய்டு

சாம்சங் கேலக்ஸி 7 மாடலுக்கு கிட்டத்தட்ட இணையான போன்களில் இதுவும் ஒன்று. ஷேட்டர் புரூப் ஸ்க்ரீன், பெரிய பேட்டரி, சிறப்பான கேமிரா ஆகியவை இந்த போனின் சிறப்பு அம்சங்கள். மேலும் மோடோ மோட்ஸ் என்னும் அம்சம் கனெக்ட் செய்யும் வகையில் இந்த மாடல் அமைந்துள்ளதால் பேட்டரியின் லைப் அதிகமாக உள்ளது. மேலும் பெரிய ஸ்பீக்கரில் இணைத்து அதிரும் வகையில் பாடல்களை கேட்கலாம். மேலும் மொபைல் புரஜொக்டராகவும் இந்த மாடல் போன் உதவுகிறது.

கூகுள் பிக்சல்:

கூகுள் பிக்சல்:

கூகுள் நிறுவனத்தின் அற்புதமான தயாரிப்புகளில் ஒன்றாகிய கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு உலகில் ஒரு அதிசயம் என்றே கூறலாம்.

அனைவருக்கும் பிடிக்கும் டிஸ்ப்ளே, பயன்படுத்துவதற்கு எளிமை, அசர வைக்கும் கேமிராவின் பவர் ஆகியவை குறித்து பேசாதவர்களே இருக்க முடியாது. இந்த போனின் விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் கண்டிப்பாக கொடுக்கும் விலைக்கு ஏற்ப சிறப்பு அம்சங்களை பெற்றிருக்கும் மாடல் போன் தான் கூகுள் பிக்சல்.

ஆண்ட்ராய்டு போன்களில் உயர்தர வகையான இந்த போன் கூகுள் சாப்ட்வேர்களை மிக பொருத்தமாக கையாளும் வகையில் உள்ளது இந்த போன் இருந்தால் ஒரு கூகுள் அசிஸ்டெண்ட் உங்களுடன் இருப்பது போன்ர உணர்வு ஏற்படும்.

மேலும் இந்த போனின் கேமிரா பவருக்கு அனேகமாக எந்த போனும் ஈடு இணை இல்லை என்றே கூறலாம்.

எல்.ஜி. V20:

எல்.ஜி. V20:

கேலக்ஸி நோட் 7 மாடலுக்கு இன்னொரு சரியான மாற்று ஸ்மார்ட்போனாக விளங்குவது தான் இந்த எல்.ஜி V20. சாம்சங் கேலக்ஸி நோட் 7 மாடலில் இருப்பது போன்றே பெரிய சைஸ், பயனுள்ள பல சிறப்பு அம்சங்கள், கேலக்ஸில் இருப்பது போன்றே அபாரமான கேமிரா ஆகியவற்றை ஒருங்கே பெற்றே கிட்டத்தட்ட கேலக்ஸி நோட் வைத்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் போன்.

நோட் சீரியஸில் இருக்கும் எஸ் பென் அம்சம் இந்த மாடலில் இல்லை என்றாலும் அதற்கு இணையான அம்சங்கள் அமைந்துள்ளது. மேலும் இதில் உள்ள டூயல் கேமிராவில் வைட் ஆங்கில் உள்ளதால் பெரிய சைஸ் புகைப்படங்களை எளிதில் எடுக்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நெளகட் அம்சம் அமைந்துள்ள ஒருசில போன்களில் இதுவும் ஒன்று

நீங்கள் கேலக்ஸி நோட் 7 மாடலை மிஸ் செய்வதாக உணர்ந்தீர்கள் என்றால் கண்டிப்பாக மேற்கண்ட ஐந்து மாடல்களில் ஒன்றை தேர்வு செய்து அதே உணர்வை பெற்று கொள்ளுங்கள்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Phones you can consider instead of the Galaxy Note 7.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X