Home
Mobile

4 லட்சம் ரெட்மீ 5 யூனிட்கள் ரெடி; 4ஜிபி ரேம் மாறுபாட்டை வாங்க வேண்டாம்.! ஏன்?

நிறுவனத்தின் ரெட்மி 5 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையானது நாளை (மார்ச் 20) மதியம் 12 மணிக்கு, பிராண இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியாவில் நடக்கும்.

By Muthuraj

முதல் லட்டு என்னவென்றால் - நீங்களொரு சியோமி பிரியர் என்றாலும் சரி அல்லது பட்ஜெட் வாசி என்றாலும் சரி - நாளை நடக்கும் சியோமி பிளாஷ் விற்பனையில் வாங்க கிடைக்கும் ரெட்மீ 5 ஆனது உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யுமொரு "ட்ரீம் ஸ்மார்ட்போனாக" இருக்கும் என்பதில் சந்தேகமுமே வேண்டாம்.

இரண்டாவது லட்டும் என்னவென்றால் - ஒவ்வொரு பிளாஷ் விற்பனையின் போதும், மிகவும் குறைவான எண்ணிக்கையிலான கருவிகளையே சியோமி நிறுவனம் விற்பனைக்கு திறந்து விடுகிறதென்ற குற்றச்சாட்டு இம்முறை எழப்போவதில்லை. ஏனெனில் முதல் முறையாக, சீன நிறுவனமான சியோமி நாளை நடக்கவுள்ள பிளாஷ் விற்பனையில் கற்பனைக்கு எட்டாத 4 லட்சம் ரெட்மீ 5 யூனிட்களை விற்பனைக்கு திறந்துவிடவுள்ளது.

இன்று மதியம் 12 மணிக்கு.!

இன்று மதியம் 12 மணிக்கு.!

நிறுவனத்தின் ரெட்மி 5 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையானது இன்று (மார்ச் 20) மதியம் 12 மணிக்கு, பிராண இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியாவில் நடக்கும். இந்த விறபனையில் சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது ரூ.7999/-க்கும், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது ரூ.8999/-க்கும் மற்றும் இறுதி மாறுபாடான 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது ரூ.10,999/-க்கும் வாங்க கிடைக்கும்.

4ஜிபி ரேம் மாறுபாடு வாங்க வேண்டாம் ஏன்.?

4ஜிபி ரேம் மாறுபாடு வாங்க வேண்டாம் ஏன்.?

வாங்கும் விருப்பம் கொண்ட வாசகர்கள், ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் 2ஜிபி அல்லது 3ஜிஇ ரேம் மாறுபாட்டை தேர்வு செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள். ஏனெனில் 4ஜிபி ரேம் மாறுபாடுடன் ஒப்பிடுகையில் இதர 2 மாறுபாடுகளும் பணத்திற்கான முழுமையான மதிப்பை பெறுகின்றன என்றே கூறலாம்.

ரெட்மீ 5 அம்சங்கள்

ரெட்மீ 5 அம்சங்கள்

சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், இக்கருவி 1440 x 720 பிக்சல்கள் என்கிற அளவிலான தீர்மானம், 18: 9 என்கிற திரை விகிதம் மற்றும் 450நிட்ஸ் பிரைட்னஸ் லெவல்ஸ் கொண்ட ஒரு 5.7 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. க்வால்காம் ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி உடனாக 2ஜிபி / 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி / 32 ஜிபி மற்றும் 64ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ள இக்கருவி துரதிருஷ்டவசமாக அதன் பேட்டரித்திறனை 3300எம்ஏஎச் என்று குறைந்துக்கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்.!

ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்.!

ஒருகையில் பேட்டரித்திறன் குறைக்கப்பட்டாலும், மறுகையில் ஸ்மார்ட்போனின் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் ஆனது ஒரு சக்தி திறன் மிகுந்த சிப்செட் ஆக பணியாற்றும் என்பதில் சந்தேகமில்லை. முன்னர் வெளியான சியோமி ரெட்மீ 4 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது சுமார் 800 எம்ஏஎச் அளவிலான பேட்டரித்திறன் குறைக்கப்பட்டுள்ளது.

12எம்பி பின்புற கேமரா.!

12எம்பி பின்புற கேமரா.!

கேமராத்துறையை பொறுத்தமட்டில், ரெட்மீ 5 ஆனது எப் / 2.2 துலையுடனான 12எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது. இது சிறந்த செயல்திறனை வழங்குவதாகக் கூறப்படுகிறது. முமுன்பக்கம் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 5எம்பி சென்சார் உள்ளது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
மற்றொரு பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன்.!

மற்றொரு பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன்.!

கைரேகை ஸ்கேனர் இரட்டை சிம் ஸ்லாட் மற்றும் ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழங்கும் ரெட்மீ 5 ஆனது ரெட்மீ நோட் 4 போன்றே இந்திய நுகர்வோர்களை பெரிதளவில் கவர்ந்து மற்றொரு பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போனாக உருவெடுக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆண்ட்ராய்டு நௌவ்கட்.!

ஆண்ட்ராய்டு நௌவ்கட்.!

பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் ஒன்று பொருத்தப்பட்டுள்ள இந்த சாதனம் ஆண்ட்ராய்டு நௌவ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் மியூஐ 9 கொண்டு இயங்குகிறது. ரெட்மீ 5 மட்டுமின்றி சியோமி நிறுவனத்தின் பட்ஜெட் விலையிலான சியோமி மி டிவி 4 மற்றும் மி டிவி 4ஏ டிவிக்களும் நாளை நடக்கும் பிளாஷ் விற்பனையின் போது வாங்க கிடைக்குமென்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Xiaomi Stocks Over 4 Lakh Redmi 5 Units For Sale Tomorrow. Read more about this in Tamil GizBogt.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X