ப்ரீ-ஆர்டர் ஆரம்பம் : சியோமி ரெட்மீ நோட் 4 (விலை & அம்சங்கள்).!

Written By:

மி இந்தியா நிறுவனம் சமீபத்தில் அதன் நுகர்வோர்கள் உடன் ரசிகர்களுக்கான ஒரு ப்ரீ-ஆர்டரை நிகழ்த்துவதாக அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், ப்ரீ-ஆர்டர் நிகழும் போது வாடிக்கையாளர்கள் நேரடியாக கருவிகளை முன்பதிவு செய்யலாம்.

ப்ரீ-ஆர்டர் ஆரம்பம் : சியோமி ரெட்மீ நோட் 4 (விலை & அம்சங்கள்).!

நிறுவனத்தின் படி, இந்த முன்பதிவில் ரெட்மீ நோட் 4 விநியோகம் செய்யப்படும் மற்றும் நிறுவனத்தின் ஆஃப்லைன் கடையில் முன்பதிவிற்கு வரும் முதல் ஸ்மார்ட்போனும் இதுவாகத்தான் இருக்கும். இந்த ப்ரீ ஆர்டர் சேவையானது அனைத்து மி பொருட்களுக்கு முழுவதும் விரிவுபடுத்தப்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
விலை

விலை

ஆஃப்லைனில் சற்று அதிக விலையில் அதவாது ரூ.11,499/- என்ற விலையில் விற்பனைக்கு வரும் இக்கருவி ஆன்லைனில் ரூ.9,999/- என்ற ஆரம்ப விலை கொண்டுள்ளது. இக்கருவியின் அம்சங்கள் என்று பார்க்கும் போது..

பேட்டரி

பேட்டரி

மெலிந்த வடிவமைப்பு கொண்ட இக்கருவியின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாக எளிதாக பயன்படுத்தி ஒரு முழு நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு பாரிய 4,100எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

வெறும் 146 கிராம் எடையுள்ள ரெட்மீ நோட் 4 கருவியின் மென்மையான 2.5டி கண்ணாடி மேற்பரப்பில் ஒரு சுத்தமான மற்றும் மென்மையான டிஸ்ப்ளே விளிம்பை உருவாக்குகிறது. இரட்டை 4ஜி சிம் ஆதரவு கொண்ட இக்கருவி ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே மற்றும் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

செயலி

செயலி

முன்னேறிய 14 நானோமீட்டர் பின்எப்இடி (FinFET) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திறமையான ஸ்னாப்டிராகன் 625 அக்டா கோர் செயலி மூலம் ஆற்றல் பெறுகிறது. இதனால் ரெட்மீ நோட் கருவியை விட 20% அதிக சக்தியை இது வழங்கும்.

ரேம்

ரேம்

4ஜிபி ரேம் உடனான 64ஜிபி உள்ளடக்க சேமிப்பும் 128ஜிபி அளவிலான சேமிப்புத்திறன் நீட்டிப்பு ஆதரவும் கொண்டுள்ள இக்கருவி 13-மெகா பிக்சல் சிஎம்ஓஎஸ் பின்புற சென்சார் கொண்ட கேமரா, 5 எம்பி கொண்ட செல்பீ கேமராவும் கொண்டுள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரூ.7000/- பட்ஜெட்டில் மைக்ரோமேக்ஸின் 4ஜி, வோல்ட் ஸ்மார்ட்போன்கள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Xiaomi Redmi Note 4 pre-order service now open for all. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot