வரிசைக்கட்டும் விலைக்குறைப்பு: "கனவு விலை"யில் சியோமி மி மிக்ஸ் 2.!

|

சியோமி நிறுவனத்தின் பெஸல்லெஸ் ஸ்மார்ட்போன் ஆன மி மிக்ஸ் 2, சீனாவில் கடந்த செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. சியோமி மி மிக்ஸ் 2 ஆனது, மி மிக்ஸ் கருவியின் அடுத்தகட்ட அப்டேட் ஸ்மார்ட்போன் ஆகும்.

வரிசைக்கட்டும் விலைக்குறைப்பு:

சாம்சங் கேலக்ஸி எஸ்8 தொடர், எல்ஜி ஜி 6 உட்பட பல தொலைபேசிகள் பெஸல்லெஸ் வடிவமைப்பு கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலைப்பாட்டில், சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் அதற்கு போட்டியை களமிறங்கி சந்தையை ஆட்சிசெய்யத வண்ணம் உள்ளது. தற்போது இக்கருவிக்கு "தற்காலிகமான" அதிரடி விலைகுறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.3,000/- விலைக்குறைப்பு.!

ரூ.3,000/- விலைக்குறைப்பு.!

டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கும் ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டே விற்பனை திருவிழாவில் மி மிக்ஸ் ஸ்மார்ட்போனிற்கு ரூ.3,000/- விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ,32,999/-க்கு இக்கருவியை வாங்க முடியும். நிகழப்போகும் பிக் பில்லியன் டே விற்பனையில் சியோமி மி ஏ1 (ரூ.12,999/-க்கு கிடைக்கவுள்ளது) ஸ்மார்ட்போன் சலுகைக்கு அடுத்தபடியாக சிறந்த சலுகையாக இது பார்க்கப்படுகிறது.

மி.காம் வலைத்தளத்திலும் இதே தள்ளுபடி.!

மி.காம் வலைத்தளத்திலும் இதே தள்ளுபடி.!

இதுவொரு வரையறுக்கப்பட்ட காலகட்ட சலுகையாகும் - டிசம்பர் 7-ஆம் தேதி முதல் டிசம்பர் 9 வரை மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். சுவாரஸ்யமாக, சியோமியின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் சேனலான மி.காம் வலைத்தளத்திலும் இதே தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி மி மிக்ஸ் 2 அம்சங்கள்

சியோமி மி மிக்ஸ் 2 அம்சங்கள்

சாதனத்தின் அடிப்படையான குறிப்புகளை பொறுத்தமட்டில், இக்கருவி க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி, ஆக்டா-கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. 6ஜிபி மற்றும் 8ஜிபி என இரண்டு ரேம் விருப்பங்களில் வரும் இக்கருவியின் 6 ஜிபி ரேம் மாறுபாடானது மொத்தம் மூன்று சேமிப்பு விருப்பங்களில் - 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி - வருகிறது.

பேட்டரி

பேட்டரி

மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் சிறப்பு பதிப்பானது ஒரு பீங்கான் யூனிபாடி வடிவமைப்பு கொண்டு 8 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியாக வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 3400எம்ஏஎச் ஏன பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் இக்கருவி அதன் அசல் ஸ்மார்ட்போனின் 4400 எம்ஏஎச் என்ற பேட்டரியுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியதாக உள்ளது.

ஆண்ட்ராய்டு நௌவ்கட்

ஆண்ட்ராய்டு நௌவ்கட்

பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ள கைரேகை சென்சார் கொண்டுள்ளசியோமி மி மிக்ஸ் 2 ஆனது, ஆண்ட்ராய்டு நௌவ்கட் 7.1.2 அடிப்படையிலான நிறுவனத்திற்கு சொந்தமான மியூஐ 9 கொண்டு இயங்குகிறது.

கேமரா

கேமரா

கேமராவை பொறுத்தமட்டில், மி மிக்ஸ் 2 ஆனது எதிர்பார்த்தபடி ஒரு இரட்டை பின்புற கேமரா அம்சம் கொண்டு வரவில்லை என்பது ஏமாற்றம். ஒரு சோனி ஐஎம்எக்ஸ்386 சென்சார், 3-ஆக்சிஸ் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் கொண்ட ஒரு 12எம்பி பின்பக்க கேமராவும், மிக்ஸ் மிக்ஸ் ஸ்மார்ட்போனில் இருந்தது போலவே ஒரு 5எம்பி செல்பீ கேமராவும் கொண்டுள்து.

டிஸ்பிளே

டிஸ்பிளே

மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் ஆனது வெறும் பெஸல்லெஸ் வடிவமைப்பை மட்டுமே கொண்டிருக்கவில்லை. சியோமி மி மிக்ஸ் 2 அதன் 2 அசல் தொலைபேசியை விட 11.9 சதவீதம் சிறியதாக உள்ளது மற்றும் 18: 9 என்ற விகிதமுடன் ஒரு 5.99 அங்குல முழு டிஸ்பிளே கொண்டுள்ளது. முந்தைய மி மிக்ஸ் ஒரு பெரிய 6.4 அங்குல டிஸ்பிளே கொண்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

அசல் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்ட 'பைஸோஎலெக்ட்ரிக் ஸ்பீக்கர் சொல்யூஷன்' தவிர்க்கப்பட்டு மி மிக்ஸ் 2 சாதனத்தில் ஹிட்டன் ஸ்பீக்கர் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய கருவிகளில் காணப்பட்ட அல்டரா சோனிக் ப்ராக்ஸிமிட்டி சென்சார் அம்சத்தை கொண்டுள்ள இக்கருவி கருப்பு மற்றும் வெள்ளை என்ற இரண்டு வழக்கமான வண்ண மாதிரிகளில் அறிமுகமானாலும், இதன் ரெகுலர் வெர்ஷன் ஆனது பிளாக் வண்ண விருப்பத்தில் மட்டுமே தொடங்கப்படும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Mix 2 Gets a Temporary Price Cut of Rs 3,000 During Flipkart Big Shopping Days; Retailing for Just Rs 32,999. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X