விலையை மீறிய அம்சங்கள் கொண்ட சியோமி ஏ1-க்கு ரூ.2000/- விலைகுறைப்பு.!

|

வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கும் ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டே விற்பனை திருவிழாவில் சியோமி நிறுவனத்தின் மி ஏ1 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.12,999/-க்கு கிடைக்கவுள்ளது. இது பிளாஷ் விற்பனை அல்ல, மூன்று நாட்கள் நீடிக்கும் விற்பனை என்பதும் குறிப்பிடத்தக்கது

விலையை மீறிய அம்சங்கள் கொண்ட சியோமி ஏ1-க்கு ரூ.2000/- விலைகுறைப்பு.!

நிகழப்போகும் பிக் பில்லியன் டே விற்பனையிலேயே சிறந்த சலுகையாக இது பார்க்கப்படுகிறது. சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.14,999/-க்கு அறிமுகமானதென்பதும், தற்போது ரூ.2,000/- விலைகுறைக்கப்பட்டு வாங்க கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவொரு வரையறுக்கப்பட்ட காலகட்ட சலுகையாகும் - டிசம்பர் 7-ஆம் தேதி முதல் டிசம்பர் 9 வரை மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். இக்கருவியின் அம்சங்களை பொறுத்தமட்டில்..

கூகுள் மூலம் சான்றளிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்

கூகுள் மூலம் சான்றளிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்

சியோமி மி ஏ1 என்பது ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும். அதாவது, செயல்திறன் மற்றும் பாதுகாப்பிற்காக கூகுள் மூலம் சான்றளிக்கப்பட்ட மற்றும் சரியான நேரத்தில் ஆண்ட்ராய்டு பதிப்பு புதுப்பிப்புகளை உறுதி செய்யும் ஒரு ஸ்மார்ட்போனாகும்.

மி கேமரா, மி ரிமோட் மற்றும் மி ஸ்டோர்

மி கேமரா, மி ரிமோட் மற்றும் மி ஸ்டோர்

மி ஏ1 அமைப்புகளில் (செட்டிங்ஸ்) உள்ள சேவைகள் பிரிவைத் தவிர்த்து, மி கேமரா, மி ரிமோட் மற்றும் மி ஸ்டோர் போன்ற பயன்பாடுகள் "கவனமாக கையாளப்பட்ட ப்ரீஇன்ஸ்டால்ட்டு ஆப்ஸ்"களாக வருகிறது. உடன் இக்கருவியில் கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் கூகுள் போட்டோஸ் ஆதரவும் கிடைக்கும்.

இரட்டை சிம் (நானோ சிம்) ஆதரவு

இரட்டை சிம் (நானோ சிம்) ஆதரவு

மற்ற அம்சங்களி பொறுத்தமட்டில், இக்கருவி ஒரு உலோக யூனிபாடி வடிவமைப்பு, 2.5டி வளைந்த கண்ணாடி, மற்றும் பின்புறத்தில் ஒரு கைரேகை சென்சார் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. இரட்டை சிம் (நானோ சிம்) ஆதரவு கொண்ட சியோமி மி ஏ1 ஆனது ஆண்ட்ராய்டு 7.1.2 கொண்டு இயங்கும்.

கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு

கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு

இது கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு கொண்ட 5.5 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டுள்ளது. இது ஒரு ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 எ0ஸ்ஓசி மற்றும் 4 ஜிபி ரேம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது.

இரண்டு 12 எம்பி சென்சார்

இரண்டு 12 எம்பி சென்சார்

இதன் இரட்டை பின்புற கேமரா அமைப்பை பொறுத்தமட்டில், இதன் இரண்டு 12 எம்பி சென்சார்களில் ஒன்று - 1.25 மைக்ரான் பிக்சல் சென்சார் மற்றும் எப் / 2.2 துளை மற்றும் ஒரு டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகிய அம்சங்களையும் மற்றொன்று ஒரு மைக்ரான் பிக்சல் சென்சார், ஒரு எப் / 2.6 துளை மற்றும் 2X ஆப்டிகல் ஜூம் ஆகிய அம்சங்களும் கொண்டுள்ளது. முன்பக்க கேமராவை பொறுத்தமட்டில், ரியல் டைம் பியூட்டிப்பை மோட் கொண்ட ஒரு 5-மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டிருக்கிறது.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்ட இக்கருவி 64ஜிபி என்ற உள்ளடக்கிய சேமிப்பை கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், 4ஜி வோல்ட், டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5மிமீ ஹெட்போன் ஜாக் ஆகியவைகளை வழங்குகிறது.

சென்சார்

சென்சார்

உடன் அக்ஸலரேமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், கைராஸ்க்கோப், இன்ஃப்ராரெட், மேக்னோமீட்டர், பிராக்ஸிமிட்டி ஆகிய சென்சார்களை கொண்ட இக்கருவி 3080எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டுள்ளது. அளவீட்டில் 155.4x75.8x7.3 மிமீ மற்றும் 168 கிராம் எடையுள்ளதாக உள்ளது. சியோமி மி ஏ1 ஆனது கருப்பு, ரோஸ் தங்கம் மற்றும் தங்கம் என்ற வண்ண விருப்பங்கள் வருகிறது.

10 சதவீதம் உடனடி தள்ளுபடி

10 சதவீதம் உடனடி தள்ளுபடி

டிசம்பர் 7-ஆம் தேதி முதல் டிசம்பர் 9 வரை தொடரும் ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டே விற்பனை திருவிழாவில் ​கிடைக்கும் தள்ளுபடிகள் தவிர, எஸ்பிஐ கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi A1 to be available for Rs 12,999 on Flipkart, but only for limited period. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X