6.9 இன்ச் டிஸ்ப்ளேவுடன் களமிறங்கும் சியோமி எம்ஐ மேக்ஸ் 3 ப்ரோ.!
எம்ஐ மேக்ஸ் 3 முழு எச்டி+ 18: 9 விகிதத்துடன் ஐபிஎஸ்(IPS) 2.5டி கர்வுடு கிளாஸ் கொண்ட 6.9 இன்ச் பெரிய திரை அளவு கொண்டுள்ளது.
சமீபத்தில் சியோமி நிறுவனம் தங்களது எம்ஐ மேக்ஸ் 3 ஃபாபிலட்களை அறிமுகம் செய்தது. ஒரு பெரிய இகாமர்ஸ் சீன இணைய தளத்தில் காணப்படுவதால் எம்ஐ மேக்ஸ் 3 ப்ரோ விரைவில் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது. மிக விரைவில் சியோமி வாடிக்கையாளர்களின் கைகளில் எட்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய சியோமி எம்ஐ மேக்ஸ் 3 மாடல் போன்களில் இரண்டு வேறுபாட்டுடன் சந்தைக்கு வந்தது 6 ஜிபி ரேம் மற்றும் 64GB உள் சேமிப்பு மாடல் 1699 யுவான் இந்திய மதிப்பின்படி ரூ 17,320 யாகவும், 4GB ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு கொண்ட மாடல் 1999 யுவான், இது ரூ 20,370 யாகவும் இருக்கும்.

எம்ஐ மேக்ஸ் 3 ப்ரோ
ஜிங்டோங் நிறுவன பட்டியலில் எம்ஐ மேக்ஸ் 3 ப்ரோ இடம்பெற்றுள்ளதால் விரைவில் சந்தைக்கு வருமென்ற செய்தி வாடிக்கையாளர்களை குஷியடைய செய்துள்ளது, இருப்பினும் எம்ஐ மேக்ஸ் 3 மாடல் இன்னும் வெளிவரவில்லை. சியோமி எம்ஐ மேக்ஸ் 3 ப்ரோ குயல்காம் ஸ்னாப்டிராகன் 710 ஆக்டாகோர் சிப்செட்டுடன் வருகிறது மற்றும் சியோமி எம்ஐ மேக்ஸ் 3 ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 பிராசசருடன் வருகிறது.

ஸ்னாப்டிராகன் 710
மேலும் சியோமி எம்ஐ மேக்ஸ் 3 ப்ரோ 18: 9 விகிதத்துடன் 6.9 இன்ச் டிஸ்ப்ளேயுடன், ஸ்னாப்டிராகன் 710 ஆக்டாகோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. சியோமி எம்ஐ மேக்ஸ் 3 ப்ரோ 6 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள் சேமிப்புடன், அசத்தலான 5,400 எம்எஎச் பேட்டரியுடன் அண்ட்ராய்டு 8.1 ஓரியோ மூலம் இயக்கப்படுகிறது. சியோமி எம்ஐ மேக்ஸ் 3 ப்ரோ 12 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் சென்சார்கள் கொண்ட இரட்டை கேமரா அமைப்புடன், 8 மெகாபிக்சல் முன் கேமரா அமைப்புடன் செல்பி மற்றும் வீடியோ சாட் வசதியுடன் வருகிறது.

6.9 இன்ச் பெரிய திரை
எம்ஐ மேக்ஸ் 3 முழு எச்டி+ 18: 9 விகிதத்துடன் ஐபிஎஸ்(IPS) 2.5டி கர்வுடு கிளாஸ் கொண்ட 6.9 இன்ச் பெரிய திரை அளவு கொண்டுள்ளது. இது 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 அட்ரீனோ 509 ஜிபீயுடன் செயல்திறன் மூலம் இயங்குகிறது. 4 ஜிபி / 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி சேமிப்பு 128ஜிபி விரிவாக்க நினைவகம் கொண்டுள்ளது. சியோமி எம்ஐ மேக்ஸ் 3, அட்டகாசமான 5,500 எம்எஎச் பேட்டரியுடன் 3.0 அதி வேக சார்ஜிங் திறன் கொண்டது. முந்தைய எம்ஐ மேக்ஸ் 2 அதி வேக சார்ஜிங் திறன் ஆதரவு இல்லாமல் சிறிய 5,300 எம்எஎச் பேட்டரியுடன் வந்தது குறிப்பிடத்தக்கது.

இரட்டை கேமரா வசதி
எம்ஐ மேக்ஸ் 3 இரட்டை கேமரா வசதியுடன் 12 மெகாபிக்சல் கொண்ட சோனி IMX363 சென்சார், 1.4μm பிக்சல் அளவுடன், f/1.9 அபெர்ச்சருடன், இரட்டைப் பிடி போக்கஸ் கொண்ட எல்இடி ஃப்ளாஷ் மற்றும் 5 மெகாபிக்சல் சென்சார்கள் கொண்ட இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஒரு 8 மெகாபிக்சல் முன் கேமரா மற்றும் மென்மையான எல்இடி ப்ளாஷ் கொண்ட 1.12μm பிக்சல் அளவுடன் f / 2.0 அபெர்ச்சருடன் கூடிய செல்பி கேமராவுடன் வருகிறது. எம்ஐ மேக்ஸ் 3, இது எம்ஐயுஐ(MIUI) நிறுவனத்தின் அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது.


Click it and Unblock the Notifications