சியோமி மி ஏ2 & மி ஏ2 லைட் சாதனங்களின் விலை மற்றும் அம்சங்கள் வெளியானது.!
சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனில் 12எம்பி +20எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 20எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ், கைரேகை சென்சார் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
சியோமி நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தவண்ணம் உள்ளது, அதன்படி சியோமி மி ஏ2 மற்றும் சியோமி மி ஏ2 லைட் என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் ஜூலை 24-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சியோமி நிறுவனம். தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் மற்றும் டூயல் ரியர் கேமரா அமைப்பு, கைரேகை சென்சார் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்திய சந்தையில் அதிக
எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

சேமிப்பு
சியோமி மி ஏ2 மற்றும் சியோமி மி ஏ2 லைட் ஸ்மார்ட்போன்கள் 4ஜிபி ரேம் மற்றம் 32ஜிபி/64ஜிபி மெமரி ஆதரவுடன் வெளிவரும். அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன்களில் ஆரம்ப விலை ரூ.16,200-முதல் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கருப்பு. சிவப்பு, நீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவரும்.

சியோமி மி ஏ2 :
சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.84-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்னர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி மி ஏ2 கேமரா:
சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனில் 12எம்பி +20எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 20எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ், கைரேகை சென்சார் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும்
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் 3010எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.

சியோமி மி ஏ2 லைட்:
சியோமி மி ஏ2 லைட் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 19:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்னர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

சியோமி மி ஏ2 லைட் கேமரா:
சியோமி மி ஏ2 லைட் ஸ்மார்ட்போனில் 12எம்பி +5எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ், கைரேகை சென்சார் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் 4000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications