2017-ல் சியாமி அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் குறித்து ஒரு பார்வை

Written By:

சீன நிறுவனத்தின் ஸ்மார்ட்போன தயாரிப்பு நிறுவனமான சியாமி நிறுவனம், ஆசிய நாடுகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படுகிறது. சியாமி ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் நிறைந்த டெக்னாலஜி அம்சங்களுடன் இருப்பதால் இந்நிறுவனத்துடன் பிறநாட்டு நிறுவனங்கள் போட்டி போடுவது கடினமாக உள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன் சந்தையின் மிகப்பெரிய நாடான இந்தியாவில் சியாமியின் வளர்ச்சி அபரீதமானது.

2017-ல் சியாமி அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் குறித்து ஒரு பார்வை

சியாமி நிறுவனத்தின் மி மற்றும் ரெட்மி மாடலுக்கு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்கள் இந்நிறுவனம் வெளியிடும் அடுத்தடுத்த மாடல்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

எக்ஸ்சேஞ்ச் சலுகையில் கிடைக்கும் மிகச் சிறந்த 10 ஸ்மார்ட்போன்கள்

இந்நிலையில் சியாமி வெளியிடவுள்ள 2017ஆம் ஆண்டின் ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சியாமி மி 6:

சியாமி மி 6:

சியாமி மி 6 ஸ்மார்ட்போன் சமீபத்தில் வெளிவந்த மி நோட் 2 மாடலைவிட சிறிதளவே வித்தியாசம் உள்ளது.மி நோட் 2 மாடலில் டூயல் எட்ஜ் கர்வ் டிஸ்ப்ளே இருந்தது போலவே இந்த சியாமி மி 6 ஸ்மார்ட்போன் மாடலிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த மாடலில் ஸ்னாப்டிராகன் 835 SoC, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆகிய அம்சங்களுடன் நீலம், கருப்பு மற்றும் வெள்ளை என மூன்று வண்ணங்களில் வெளிவரவுள்ளது.

நெகிழும் தன்மையுடய டிஸ்ப்ளே:

நெகிழும் தன்மையுடய டிஸ்ப்ளே:

கடந்த 2016ஆம் ஆண்டு சியாம் இநிறுவனம் மி மிக்ஸ் மாடலை செராமிக் பாடியில் வெளியிட்டு பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்நிறுவனம் ஃபிளக்சிபிள் என்று கூறப்படும் நெகிழும் தன்மையுடன் டிஸ்ப்ளேவை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த நெகிழும் தன்மையுடைய டிஸ்ப்ளேவுக்காக சியாமி குழுவினர் தயாராகி வருவதாக இதுகுறித்த 30 வினாடிகள் வீடியோ ஒன்று வெளீயாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த மாடலில் ஒருசில சென்சார்கள் மற்றும் செல்பி கேமிராவை மிஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சியாமி மி 6 S:

சியாமி மி 6 S:

சியாமி நிறுவனத்தின் மி 5 மற்றும் 5S மாடல் ஏற்கனவே கடந்த ஆண்டு வெளிவந்தது என்பது அனைவரும் அறிவோம். இந்நிலையில் சியாமி நிறுவனத்தின் மி 6 மாடல் விரைவில் வெளிவரவுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் இவ்வருடத்திற்குள் மி 6S மாடலும் வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சியாமி மி 6S பிளஸ்

சியாமி மி 6S பிளஸ்

சியாமி மி 6 S பிளஸ் மாடல் விரைவில் தயாராக உள்ளதாக வதந்திகள் வந்து கொண்டிருந்தாலும், சியாமி மி 6 வந்தபின்னர்தான் இதுகுறித்த உறுதியான தகவல் வெளிவரும். ஆனால் அதே நேரத்தில் மி 5 S மாடலுக்கு பின்னர் மி 5 பிளஸ் மாடல் வெளிவந்ததால், அதேபோல் 6 S மாடலும் வெளிவர வாய்ப்பு இருப்பதாக ஊகிக்கப்படுகிறது.

சியாமி மி 5 C

சியாமி மி 5 C

இவ்வருடத்தில் சியாமி நிறுவனத்தின் சியாமி மி 5 C குறித்த அறிவிப்பு கண்டிப்பாக வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த மாடல் 5.2 HD 1080P டிஸ்ப்ளேவாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 6.0 மாடலில் ஆக்டோகோர் பிராஸசரில் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த மாடலில் 13 MP பின் கேமிராவும், 5 MP செல்பி கேமிராவும் அமைந்திருக்கும் என்றும் யூஎஸ்பி டைப்பில் C போர்ட் ஒன்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது

சியாமி ரெட்மி நோட் 5:

சியாமி ரெட்மி நோட் 5:

சியாமி நிறுவனத்தின் ரெட்மி மாடல்கள் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக ரெட்மி நோட் 3 அபாரமாக விற்பனை ஆகியது. இந்நிலையில் சியாமி நிறுவனம் தற்போது ரெட்மி நோட் 5 மாடலை தயாரிக்க தயாராகி வருகிறது.

கடந்த ஆண்டு வெளியான ரெட்மி 4 மாடலுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக தற்போது ரெட்மி 5 மாடலின் தயாரிப்பு பணிகளில் சியாமி ஈடுபட்டுள்ளது. டெக்கா கோர் பிராஸசருடன் 3GB மற்றும் 4 GB ரேம் உடன் இந்த மாடல் வரலாம். இதுகுற்த்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது

சியாமி மி நோட் 3:

சியாமி மி நோட் 3:

சியாமி நிறுவனத்தின் மி நோட் 2 கடந்த ஆண்டு வெளிவந்து உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றது. டூயல் கர்வ் எட்ஜ் டிஸ்ப்ளேவுடன் வந்த இந்த மாடல் சாம்சங் எட்ஜ் மாடலுக்கு சவாலாக இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு மி நோட் 3 மாடல் விரைவில் வரவுள்ளதாகவும் இதிலும் டூயல் கர்வ் எட்ஜ் டிஸ்ப்ளே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சியாமி ரெட் மி 5:

சியாமி ரெட் மி 5:

கடந்த ஆண்டு சியாமி ரெட்மி 4 வெளியாகி உலகம் முழுவதும் பயனாளிகளின் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றது. இதனை அடுத்து இந்த ஆண்டு ரெட் மி 5 மாடலையும் இதே நிறுவனம் வெளியிடுவது குறித்த அறிவிப்பை விரைவில் அறிவிக்கவுள்ளது. அதிக விலையில் நவீன டெக்னாலஜி ஸ்மார்ட்போன்கள் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த மாடல் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Already, the upcoming flagship smartphone, Xiaomi Mi 6 is in the rumor mills. Xiaomi is rumored to launch a slew of smartphones in 2017 including the flagship Mi 6 and a flexible display phone.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot