ஸ்மார்ட்போன்களில் டூயல் கேமிரா லென்ஸ் தேவையா.? வேண்டாமா.?

டூயல் கேமிராவினால் எடுக்கப்படும் புகைப்படங்கள் அபாரமான அவுட்புட்களை தருவதால் இந்தா ஸ்மார்ட்போன்கள் டிரண்ட் ஆகிவிட்டன

By Siva
|

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே ஒரு கேமிராவுடன் ஸ்மார்ட்போன் வந்தது. அதன் பின்னர் செல்பி கேமிராவுடன் வந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் டூயல் கேமிரா ஸ்மார்ட்போன்களை தயாரிக்க தொடங்கிவிட்டன.

ஸ்மார்ட்போன்களில் டூயல் கேமிரா லென்ஸ் தேவையா.? வேண்டாமா.?

டூயல் கேமிராவினால் எடுக்கப்படும் புகைப்படங்கள் அபாரமான அவுட்புட்களை தருவதால் பின்பக்கம் இரண்டு கேமிராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் டிரண்ட் ஆகிவிட்டன

40-க்கும் மேற்பட்ட போலி 'பீம்' செயலிகள். ஒரிஜினலை கண்டுபிடிப்பது எப்படி?

ஒரு கண்ணால் பார்ப்பதற்கும் இரண்டு கண்களால் பார்ப்பதற்கும் எந்த அளவு வித்தியாசம் உள்ளதோ, அதேபோல் தான் இரண்டு லென்ஸ்களின் உதவியினால் ஒரு புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ படமாக்குவது மிகவும் எளிதானது

போகஸ்:

போகஸ்:

ஹூவாய் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஹூவாய் P9 மற்றும் ஹானர் 8 ஆகிய மாடல்கள் நல்ல டூயல் கேமிரா போன்களுக்கு உதாரணம். இதில் உள்ள ஒரு கேமிரா கருப்பு வெள்ளையிலும், இன்னொரு கேமிரா கலரிலும் படம் பிடிக்கின்றது. இரண்டு கேமிராக்களுமே வேகமான போகஸ் மற்றும் லேசர் உதவியுடன் ஆட்டோ போகஸ் தன்மை அடங்கியுள்ளது.

வேகமான போகஸ் காரணமாக புகைப்படங்கள் ஷார்ப் ஆக படமாகிறது. இரண்டு கேமிராக்களினால் படமாக்கப்படும்போது கருப்பு வெள்ளை மற்றும் கலர் புகைப்படங்கள் மெர்ஜ் ஆகி நமக்கு நல்ல ரிசல்ட்டை தருகின்றன. பெரிதாக வெளிச்சம் இல்லை என்றாலும் டூயல் கேமிராவினால் போகஸ் செய்த புகைப்படங்கள் தெளிவாக இருக்கும்

போக் எபெஃக்ட்

போக் எபெஃக்ட்

ஒரு புரபொசனல் போட்டோகிராபர் புகைப்படம் எடுக்கும்போது ஒரு புகைப்படத்தின் பின்பக்கம் அதாவது பேக்ரவுண்ட் சிறிதளவு மங்கலான ஒருவிதமான எபெக்ட் உடன் எடுப்பார்கள். இதற்கு பெயர்தான் போக் எபெக்ட். இந்த சொல ஜப்பானிய சொல்லில் இருந்து கொண்டு வரப்பட்டது.

ஸ்மார்ட்போனில் உள்ள லென்ஸ் மிகவும் சிறியதாக இருப்பதால், ஒரு புரபொசனல் கேமிராவில் எடுப்பது போன்று போக் எபெக்ட் உடன் எடுப்பது சிரமம். ஆனால் அதே நேரத்தில் டூயல் லென்ஸ் கேமிரா போன்களில் இதுபோன்ற போக் எபெக்ட் உடன் கூடிய புகைப்படங்களை எடுக்க முடியும்

12 MP பின் கேமிரா உள்ள ஐபோன் 7 பிளஸ் மாடலில் போக் எபெக்ட் உடன் கூடிய புகைப்படம் எடுக்க முடியும். ஹுவாய் போன்கள், ஐபோன்கள் ஆகிய இரண்டு வகை மாடல்களில் ஐபோன் 7 ப்ளஸ் மாடல் இந்த போக் எபெக்ட்டுக்கு சிறந்த போனாக கருதப்படுகிறது.

ஜூம்:

ஜூம்:

ஆப்பிள் மற்றும் லெஜி மாடல்களில் டூயல் கேமிரா லென்ஸ் உடன் ஜூம் லென்ஸ் உள்ளதால் இந்த மாடல் போன்களில் விதவிதமாக புகைப்படங்களை எடுத்து தள்ளலாம். ஒரு புரபொசனல் கேமிராவிற்கு கிட்டத்தட்ட இணையாக இந்த போன்களில் புகைப்படங்கள் எடுக்கலாம். அதேபோல் சாம்சங் K ஜூம் ஸ்மார்ட்போனும் ஜும் லென்ஸ் உள்ள போன் ஆகும். மேலும் எல்ஜி G5 மாடலும் நன்றாக ஜூம் செய்யக்கூடிய கேமிராக்களை கொண்டது.

ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்

ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்

எல்ஜி மற்றும் ஆப்பிள் ஐபோன் போன்ற மாடல்களில்

ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் வசதி இருப்பதால் புகைப்படம் எடுக்கும்போது கை ஷேக் ஆனாலும் மங்கலான ரிசல்ட்டை தராமல் புகைப்படத்தின் தரத்தை பாதுகாக்கும் தன்மை உடையது. ஆனால் ஹூவாய் டூயல் கேமிரா மாடலில் இந்த வசதி இல்லை. இதனால் இந்த போன்களில் புகைப்படம் எடுக்கும்போது கை ஷேக் ஆனாலோ அல்லது மங்கலான வெளிச்சத்தில் புகைப்படம் எடுத்தாலோ நல்ல ரிசல்ட்டை தராது

எனவே புதுப்புது வசதிகளை அதிகரிப்பதன் மூலம் ஒரு DSLR கேமிராவில் உள்ள வசதியை ஸ்மார்ட்போன் கேமிராக்களில் கொண்டு வந்து கொண்டு இருக்கின்றனர். டூயல் கேமிரா லென்ஸ் செட் அப் உள்ளதால் இது சாத்தியமாகிறது. மேலும் உங்கள் கற்பனைக்கும் எட்டாத வகையில் அசத்தலான புகைப்படங்களை எடுக்கும் கேமிராக்கள் இன்னும் புதிது புதிதாக வந்து கொண்டேதான் இருக்கும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Here is the reason why the dual camera lens setup on smartphones has become a trend now.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X