Subscribe to Gizbot

40-க்கும் மேற்பட்ட போலி 'பீம்' செயலிகள். ஒரிஜினலை கண்டுபிடிப்பது எப்படி?

Written By:

கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பார்த பிரதமரின் அறிவிப்புக்கு பின்னர் பொதுமக்கள் அனைவரும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து இந்திய மக்களும் மொபைல் மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு வசதியாக பீம் என்ற செயலியை அறிமுகம் செய்தார்.

40-க்கும் மேற்பட்ட போலி 'பீம்' செயலிகள். ஒரிஜினலை கண்டுபிடிப்பது எப்பட

Bharat Interface of Money என்பதன் சுருக்கமான இந்த BHIM செயலியை இதுவரை 3 மில்லியன் பேர்களூக்கும் அதிகமானோர் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுண்லோடு செய்து பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.

'இதெல்லாம்' இந்தியாவில் 2017-ஆம் ஆண்டிலாவது நிகழுமா.!?

தற்போது வங்கியிலும் ஏடிஎம்களிலும் பணம் பற்றாக்குறையாக உள்ள நிலையில் இந்த செயலி பொதுமக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றது. ஆனால் அதே நேரத்தில் இந்த செயலி மிக வேகமாக டவுன்லோடு செய்யப்படுவதால் இந்த பீம் செயலியை போலவே போலி செயலிகளை ஒருசிலர் தயார் செய்து கூகுள் ப்ளே ஸ்டோரில் உலவ விட்டுள்ளனர்.

40-க்கும் மேற்பட்ட போலி 'பீம்' செயலிகள். ஒரிஜினலை கண்டுபிடிப்பது எப்பட

ஒரிஜினல் அல்லாத இந்த போலி செயலிகளை டவுன்லோடு செய்பவர்களுக்கு இந்த செயலி செயல்படாமல் இருப்பதால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 40 போலி பீம் செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான புகைப்படம் பெறுவது எப்படி?

இந்த போலி செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை செய்யப்படும்போது ஹேக்கர்கள் உங்களுடைய முக்கிய விபரங்களை தெரிந்து கொண்டு முறைகேடு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே போலியை அடையாளம் கண்டு, ஒரிஜினல் பீம் ஆப்ஸ்களை தேர்வு செய்து பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து த?ற்போது பார்ப்போம்

1. கூகுள் ப்ளே ஸ்டோரில் பீம் என்று ஆங்கிலத்தில் நீங்கள் டைப் செய்தால் ஒரிஜினல் பீம் செயலில் முதலில் தோன்றும். அதனை தொடரந்துதான் போலிகள் தோன்றும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்

2. ஒரிஜினல் பீம் செயலில் NPCI அதாவது National Payments Corporation of India என்ற அமைப்பில் இருந்து வெளியிட்டுள்ளதை தெரிந்து கொள்ளுங்கள்

3. இந்த பீம் செயலியின் லோகோ இரண்டு முக்கோணங்களை கொண்டு இருக்கும். ஒன்று ஆரஞ்சு நிறத்திலும், இன்னொன்று பச்சை நிறத்திலும் இருக்கும்

4. பீம் செயலியின் லோகோவில் எந்தவித எழுத்துக்களும் இருக்காது.

5. லோகோவின் பெயரான பீம் என்பது BHIM என்று மட்டுமே இருக்கும். இதன் முன்னரோ, பின்னாலோ வேறு எந்த எழுத்துக்களும் இருக்காது.

மேற்கண்ட வழிகள் மூலம் போலியான பீம் செயலிகளை கண்டுபிடித்து அதை தவிர்த்துவிட்டு ஒரிஜினலை மட்டுமே டவுன்லோடு செய்து பயன்படுத்துங்கள். நாம் மேலே குறிப்பிட்டது போல பலவித வடிவங்களில், எழுத்துக்களில் போலி பீம் செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கின்றன. அவற்றை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இதில் ஒரு வருத்தத்திற்குரிய தகவல் என்னவெனில் போலியான பீம் செயலிகளை ஆயிரக்கணக்கானோர் டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்திருப்பதாக ப்ளே ஸ்டோரிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போலியான செயலியில் பண பரிவர்த்தனை செய்தால் நிச்சயம் பண இழப்பு ஏற்படுவதோடு, நம்முடைய ரகசிய விபரங்களும் களவாடப்படும் அபாயம் உள்ளது. மேலும் தற்போது போலி செயலிகள் குறித்து ஏராளமான புகார்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்பது மட்டும் ஒரு ஆறுதலான விஷயமாக கருதப்படுகிறது.

Download the BHIM App Here

Read more about:
English summary
Over 40 fake BHIM apps spotted on Google Play Store. Here's how to find the original one.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot