Home
Mobile

இந்தியாவில் அசத்தலான விவோ Y72 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

விவோ நிறுவனம் இந்தியாவில் தனது புதிய விவோ Y72 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இன்று முதல் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட சில ஆன்லைன் தளங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

விவோ Y72 5G

விவோ Y72 5G

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட விவோ Y72 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,990-ஆக உள்ளது.மேலும் இதற்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து பார்க்கையில், எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் கோட்டக் வங்கி கிரெடிட் கார்டு மற்றும் ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகள் மூலம் 1,500 கேஷ்பேக் பெற முடியும். பின்பு இந்த சாதனத்திற்கு ஜியோ நிறுவனம் சார்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே

6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே

விவோ Y72 5G ஸ்மார்ட்போன் மாடல் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1,080x2,408 பிக்சல்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட்

விவோ Y72 5G ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் Funtouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி

விவோ Y72 5G ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

48எம்பி பிரைமரி சென்சார்

48எம்பி பிரைமரி சென்சார்

விவோ Y72 5G ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

SBI பயனர்களே! இந்த ஆவணங்களை உடனே அப்டேட் செய்யவும் அல்லது வங்கி சேவை ரத்து..

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

விவோ Y72 5G ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த அசத்தலான விவோ Y72 5G ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Y72 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X