SBI பயனர்களே! இந்த ஆவணங்களை உடனே அப்டேட் செய்யவும் அல்லது வங்கி சேவை ரத்து..
உங்கள் நிரந்தர கணக்கு எண் (பான்) மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால் , விரைவில் வங்கி சேவைகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகளில் தொந்தரவை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள் என்று SBI தெரிவித்துள்ளது. வருமான வரித் துறை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஆதார் கொண்டு நிரந்தர கணக்கு எண் இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. ஆதார் உடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் பயனற்றவையாகி, காலக்கெடுவுக்குப் பிறகு "செயல்படாதவை" என்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை PAN உடன் இணைக்கத் தவறினால் வங்கி சேவை ரத்தா?
வருமான வரித் துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, "ஒரு நபர் ஆதார் எண்ணை PAN உடன் இணைக்கத் தவறினால், அத்தகைய நபருக்கு ஒதுக்கப்பட்ட நிரந்தர கணக்கு எண் அறிவிக்கப்பட்ட தேதிக்குப் பிறகு, சட்ட பிரிவு 139AA இன் பிரிவு 41-ன் படி செயல்படாது" என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட நிரந்தர கணக்கு எண் என்பது பத்து இலக்க தனித்துவமான எண்ணெழுத்து எண்களாகும்.

SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வரி ஏய்ப்பு மற்றும் மோசடிகளைத் தடுக்க வரி அதிகாரிகளுக்கு பான் உதவுகிறது, ஏனெனில் இது ஒரு தனிநபரால் செய்யப்படும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு முக்கியமான ஆவணத்தின் செயலிழப்பைத் தவிர்க்க, வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பான் மற்றும் ஆதார் விவரங்களை விரைவில் இணைக்குமாறு SBI வங்கி தனது வாடிக்கையாளர்களைக் கேட்கத் தொடங்கியுள்ளது.

SBI தனது பதிவில் கூறியது என்ன?
"எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு அசவுகரியத்தையும் தவிர்க்கவும், தடையற்ற வங்கி சேவையைத் தொடர்ந்து அனுபவிக்கவும் தங்கள் பான் விபரத்தை ஆதார் உடன் இணைக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்" என்று ட்விட்டரில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) குறிப்பிட்டுள்ளது. குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை நடத்துவதற்கும் இது மிகவும் முக்கியமானது என்று SBI வங்கியால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

PAN அட்டையின் அவசியம் என்ன? எப்போதெல்லம் இது நமக்கு தேவைப்படும்?
வங்கிக் கணக்கைத் திறக்கும்போது, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, மற்றவற்றுடன் டிமேட் கணக்கைத் தொடங்கும்போது பான் கார்டு அவசியமாகிறது. ஒரு நபர் ஒரு நாளில் ரூ. 50,000 க்கு மேல் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால், பான் கட்டாயமாகும். ரூ. 50,000-க்கும் அதிகமான மதிப்புள்ள பரஸ்பர நிதிகள், கடன் பத்திரங்கள், பத்திரங்கள் போன்றவற்றை வாங்கும் போதும் PAN அவசியம். இது போல் நிதி தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு PAN கட்டாயமாகும்.

ஆதார் மற்றும் PAN அட்டையை இணைக்காவிட்டால் அபராதமா?
எஸ்.பி.ஐ பயனர்கள் வருமான வரி துரையின் மின்-தாக்கல் போர்ட்டலுக்குச் சென்று பான் மற்றும் ஆதார் ஆகியவற்றை இணைத்து "தடையற்ற வங்கி சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்று SBI தெரிவித்துள்ளது. காலக்கெடு முடிந்ததும் பான் மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால் ஒரு தனிநபர் ரூ .1,000 அல்லது அதற்கு மேலாக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

உடனே அப்டேட் செய்யுங்கள்.. இல்லையென்றால் வங்கி சேவை ரத்து செய்யப்படும்
"ஆதார் உடன் பான் இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும், இந்த இணைப்பை முடிந்தவரை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. பான் மற்றும் ஆதார் ஆகியவற்றின் இணைப்பு, பணத்தைத் திரும்பப் பெறுவது போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது "என்று சமீபத்திய அறிக்கை வெளியீடு குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications