Home
Mobile

விவோ Y21 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.! விலை மற்றும் விவரங்கள்.!

விவோ நிறுவனம் தனது புதிய விவோ Y21 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. இப்போது விவோY21 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ Y21 ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,490-ஆக உள்ளது. பின்பு விரைவில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ Y21 மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த விவோ Y21 ஸ்மார்ட்போனை அமேசான்,விவோ இந்தியா இ-ஸ்டோர்,பிளிப்கார்ட் தளங்களில் வாங்க முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனத்திற்கு குறிப்பிட்ட சில சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 6.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே

விவோY21 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

பின்புறம் 13எம்பி

விவோ Y21 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி secondary சென்சார் என மொத்தம் இரண்டுகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 4ஜிபி ரேம் மற்றும்

இந்த விவோ Y21 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

போனில் எப்போதும் போல

இந்த புதிய ஸ்மார்ட்போனில் எப்போதும் போல மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி உள்ளது. மேலும் FunTouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது விவோ Y21 ஸ்மார்ட்போன்.

இதுக்கு தான் ஒரு ஐபோன் வேணும்: விமானத்தில் இருந்து தவறி கீழே விழுந்தும் பாதிப்படையாத ஐபோன்.!

போனில் 5000 எம்ஏஎச்

புதிய விவோ Y21 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

போனில் கிட்டத்

இந்த விவோ Y21 ஸ்மார்ட்போனில் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களும் சிறப்பாகவே உள்ளது, ஆனால் இது 5ஜி ஸ்மார்ட்போன் கிடையாது. 4ஜி சேவையை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த விவோ Y21 சாதனம். பின்பு யூஎஸ்பி டைப்-சி போர்ட், டூயல் சிம் ஸ்லாட்டுகள்,
4ஜி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y21 With 5,000mAh Battery Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X