Home
News

இதுக்கு தான் ஒரு ஐபோன் வேணும்: விமானத்தில் இருந்து தவறி கீழே விழுந்தும் பாதிப்படையாத ஐபோன்.!

ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் உலகம் முழுவதும் அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக தனித்துவமான இயங்குதளம் மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் ஆப்பிள் சாதனங்கள் வெளிவருவதால் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்நிறுவனம்
தொடர்ந்து அதிநவீன ஐபோன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த ஐபோன்கள் சிறந்த பாதுகாப்பு வசதி மற்றும் சிறப்பான செயல்திறனை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

 ஐபோன் எக்ஸ்

இந்நிலையில் விமானி ஒருவர் நடுவானில் பறக்கும் போது ஐபோன் எக்ஸ் சாதனத்தை தவற விட்டுள்ளார். பின்பு நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த ஐபோன் எக்ஸ் சாதனைத்தை அவர் கண்டுபிடித்துள்ளார். அதன்பின்பு அவர் கூறியது என்னவென்றால் ஐபோன் எக்ஸ் சாதனத்தின் டிஸ்பிளே அதிக கீறல் இல்லாமல் உள்ளது என்றும், சரியாக வேலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கவலின்படி அந்த விமானியின் பெயர்

வெளிவந்த தகவலின்படி அந்த விமானியின் பெயர் டேவிட் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இவர் Colorado Springs எனும் இடத்திலிருந்து Atlanta பகுதிக்கு டயமண்ட் டிஏ 40 விமானத்தை இயக்கியுள்ளார். அப்போது நடுவானில் பறக்கும் போது ஐபோன் எக்ஸ் சாதனத்தை பயன்படுத்தி புகைப்படங்களை எடுக்க முயன்றதாக கூறியுள்ளார்.

கைப்படங்களை எடுக்கும் போது அந்த

டேவிட் புகைப்படங்களை எடுக்கும் போது அந்த ஐபோனை கீழே தவற விட்டுள்ளார். பின்பு கீழே விழுந்த அந்த ஐபோன் எக்ஸ் சாதனத்தை ஒருவழியாக அந்த விமானி கண்டுபிடித்துள்ளார். சரியாக 11250 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தபோதும் அந்த ஐபோன் எக்ஸ் சாதனம் சரியாகவேலை செய்ததாக தெரிவித்துள்ளார் டேவிட். குறிப்பாக இதுபோன்ற ஐபோன் சாதனங்கள் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவருவதால் நல்ல வரவேற்பை பெறுகிறது. அதுபோல் இந்த சாதனங்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

 ஐபோன் எக்ஸ் சாதனம் ஆ

மேலும் இந்த ஐபோன் எக்ஸ் சாதனம் ஆனது 64 பிட் ஆர்கிடெக்சர், நியூரல் இன்ஜின், எம் 11 Motion Coprocessor பிராஸசர் கொண்ட ஏ11 பயோனிக் சிப் ஆதரவுடன் வெளிவந்தது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த ஐபோன் எக்ஸ் சாதனம் 64ஜிபி

குறிப்பாக இந்த ஐபோன் எக்ஸ் சாதனம் 64ஜிபி மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுகளை கொண்டுள்ளது. பின்பு ஐஒஎஸ் 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஐபோன் எக்ஸ் மாடல். இந்த சாதனத்தின் பின்புறம் 12எம்பி + 12எம்பி என இரண்டு கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு உள்ளது.

 5.8-இன்ச் Super Retina HD வடிவமைப்

ஐபோன் எக்ஸ் சாதனம் ஆனது 5.8-இன்ச் Super Retina HD வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 2436 x 1125 பிக்சல்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஐபோன் எக்ஸ் சாதனம்.

நிறுவனம் தனது ஐபோன் 13

விரைவில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 13 மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் இந்தியாவில்
அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

News Source: businesstoday

More from GizBot

Best Mobiles in India

English summary
Pilot Drops iPhone X From 11250 Feet Height Finds It Without A Scratch And Working Perfectly: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X