Home
Mobile

ரூ.10,000 பட்ஜெட் பத்திக்கிச்சு.. புது VIVO போன் அறிமுகம்.. 5ஜி, 6000mAh பேட்டரி, 6GB ரேம், 2TB வரை மெமரி!

ஆமாம் இந்த ஸ்மார்ட்போன் "நவம்பர் 2025 லான்ச்" லிஸ்ட்லேயே இல்லீயேப்பா.. ஆனாலும் செம்ம சர்பிரைஸா இருக்கே என்று ஆச்சரியப்பட வைக்கும் விலை மற்றும் அம்சங்களுடன் விவோ (Vivo) நிறுவனமானது ஒரு புதிய பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது.

அது விவோ ஒய்19எஸ் 5ஜி (Vivo Y19s 5G) ஸ்மார்ட்போன் ஆகும். இது 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட், எல்இடி ஃபிளாஷ் உடன் இணைக்கப்பட்ட டூயல் ரியர் கேமரா செட்டப், அண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட பன்டச்ஓஎஸ் 15, 6000mAh பேட்டரி மற்றும் 5ஜி ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

ரூ.10,000 பட்ஜெட் பத்திக்கிச்சு.. புது VIVO போன் அறிமுகம்!

வேறு என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? முன்னரே குறிப்பிட்டபடி இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அடிப்படையிலான பன்டச்ஓஎஸ் 15 (FunTouchOS 15) கொண்டு இயங்குகிறது. இது டூயல் சிம் ஆதரவு (Dual SIM Support) கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 720 × 1600 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 70 சதவீதம் NTSC கலர் கேமட், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.74-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இந்த பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனை இயக்குவது ஆக்டா கோர் 6 என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப் ஆகும். இது இரண்டு பெர்பார்மென்ஸ் கோர்கள் மற்றும் ஆறு ஏஃபியன்சி கோர்களை கொண்டுள்ளது. இது 2.4GHz பீக் கிளாக் ஸ்பீடை வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி வரை LPDDR4X ரேம் மற்றும் 128ஜிபி வரை eMMC5.1 இன்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. இதை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 2டிபி வரை விரிவாக்கவும் முடியும். கேமராக்களை பொறுத்தவரை விவோ ஒய்19எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது

அதில் 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா (எப்/2.2) மற்றும் குறிப்பிடப்படாத 0.8-மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா (எப்/3.0) உள்ளது. முன்பக்கத்தில், இது 5 மெகாபிக்சல் (எப் /2.2) செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இதன் ரியர் கேமரா செட்டப்பில் நைட், போர்ட்ரெய்ட், லைவ் ஃபோட்டோ, ஸ்லோ-மோ மற்றும் டைம்-லேப்ஸ் மோட்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் உள்ளன.

பேட்டரியை பொறுத்தவரை இது 15W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவணிகப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் ஆகியவைகளும் உள்ளன. கடைசியாக அளவீட்டில் இது 167.3×76.95×8.19மிமீ மற்றும் எடையில் சுமார் 199 கிராம் உள்ளது.

என்ன விலை? இந்தியாவில் விவோ ஒய்19எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இன்னும் விவோ நிறுவனத்தால் அறிவிக்கப்படவில்லை. ஆனால் கிஸ்மோ சீனா வலைத்தளமானது இந்தியாவில் விவோ ஒய்19எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.10,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறது

இதே ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. அவைகள் முறையே ரூ.11,999 மற்றும் ரூ.13,499 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் மெஜஸ்டிக் கிரீன் மற்றும் டைட்டானியம் சில்வர் ஆகிய 2 கலர்களில் வெளியாகியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y19s 5G New Budget Price 5G Phone With 6000mAh Battery Launched in India See Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X