நல்ல மாசம் பொறக்குது.. நவம்பர் 2025 இல் இந்தியாவில் அறிமுகமாகும் 6 புதிய போன்கள்.. OnePlus தொடங்கி Lava வரை!
நவம்பர் 2025 (November 2025) ஆனது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் பரபரப்பான மாதமாக இருக்கப்போகிறது. ஏனென்றால் சீன நிறுவனங்கள் ஆன ஒன்பிளஸ், ஐக்யூ, ரியல்மி, ஒப்போ மற்றும் இந்திய மொபைல் பிராண்ட் ஆன லாவா ஆகிய அனைத்துமே தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை (மொத்தம் 6 மாடல்கள்) நவம்பரில் அறிமுகம் செய்யவுள்ளன.
1. ஒன்பிளஸ் 15 (OnePlus 15): கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது வருகிற நவம்பர் 13 ஆம் தேதி அன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.50,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும், இந்தியாவில் இது ரூ.65,000 - ரூ.75,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 16
- 165ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1.5கே (1272 x 2772 பிக்சல்கள்) ரெசல்யூஷன்
- 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 6.78-இன்ச் மூன்றாம் தலைமுறை பிஓஇ பிளெக்சிபில் அமோஎல்இடி டிஸ்பிளே
- அட்ரெனோ 840 ஜிபியு
- குவால்காமின் ஆக்டா கோர் 3 என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- 16 ஜிபி வரையிலான LPDDR5X ரேம் மற்றும் 1 டிபி வரையிலான UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்
- 24மிமீ குவிய நீளம் கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி ஷூட்டர்
- இது 50-மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 50-மெகாபிக்சல் (எப்/1.8) டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா
- 7300mAh பேட்டரி
- 120W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் வயர்டு சார்ஜிங்
- 50W வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு
- ப்ராக்ஸிமிட்டி சென்சார், கைரோஸ்கோப், ஹால் சென்சார், லேசர் ஃபோகஸ் சென்சார், ஸ்பெக்ட்ரம் சென்சார், ஐஆர் பிளாஸ்டர்
- இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
2. ஐக்யூ 15 (iQOO 15): கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் ஆனது வருகிற நவம்பர் 26 ஆம் தேதி அன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.60,000 க்குள் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.85-இன்ச் சாம்சங் M14 AMOLED டிஸ்பிளே
- 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- 16ஜிபி வரை LPDDR5X அல்ட்ரா ரேம் மற்றும் 1டிபி வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50-மெகாபிக்சல் (f/1.88) ப்ரைமரி சென்சார், 50-மெகாபிக்சல் (f/2.65) பெரிஸ்கோப் சென்சார், 100x டிஜிட்டல் ஜூம் வரை வழங்கும் 50-மெகாபிக்சல் (f/2.05) வைட்-ஆங்கிள் லென்ஸ்
- 32-மெகாபிக்சல் (f/2.2) செல்பீ கேமரா
- 7,000mAh பேட்டரி
- 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
3. ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro): கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது வருகிற நவம்பர் 11 ஆம் தேதி அன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.55,000 க்குள் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.79-இன்ச் QHD+ AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- 16GB வரை LPDDR5X RAM மற்றும் 1TB UFS ஸ்டோரேஜ்
- ரிக்கோ-என்ஜினீயர்டு ட்ரிபிள் ரியர் கேமா செட்டப்
- OIS மற்றும் 22mm ஃபோகல் லென்த் கொண்ட 50MP ஜிஆர் ஆன்டி-க்ளேர் ப்ரைமரி கேமரா
- 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ்
- 120x டிஜிட்டல் ஜூம் வரை ஆதரிக்கும் 200MP டெலிஃபோட்டோ சென்சார்
- 32MP செல்பீ கேமரா
- 120W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7,000mAh பேட்டரி
4. ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரீஸ் (Oppo Find X9 Series): இந்த சீரிஸின் கீழ் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ (Oppo Find X9 Pro) மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 (Oppo Find X9) என மொத்தம் 2 மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகும். சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது நவம்பர் 18 ஆம் தேதியன்று ரூ.75,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5. லாவா அக்னி 5 (Lava Agni 4): இது அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை லாவா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் FHD+ டிஸ்பிளே, UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட டைமன்சிட்டி 8350 சிப்செட், 7,000mAh க்கும் அதிகமான பேட்டரி, டூயல் 50MP கேமரா செட்டப் ஆகிய அம்சங்களுடன் ரூ. 25,000 க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








