கேமரா கொம்பன் VIVO இறங்கிட்டான்.. இரண்டு 200MP கேமராக்களை கொண்ட முதல் போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனத்திற்கு, ஸ்மார்ட்போன் சந்தையில் "பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போன்களை" அறிமுகம் செய்வது ஒன்றும் புதிதல்ல. அதற்காகவே ஒரு சீரீஸை கொண்டுள்ளது. அதுதான் விவோ எக்ஸ் சீரீஸ். சமீபத்தில் தான் இந்நிறுவனம் விவோ எக்ஸ்300 சீரிஸின் கீழ் விவோ எக்ஸ்300 மற்றும் விவோ எக்ஸ்300 ப்ரோ மாடல்களை உலகளவில் அறிமுகம் செய்து இருந்தது.
ஆனால் இந்த சீரீஸ் இன்னும் முழுமையடையவில்லை. அதாவது இந்த சீரிஸின் லில் மூன்றாவது, இன்னும் பிரீமியம் அம்சங்களுடன் இன்னொரு ஸ்மார்ட்போன்க்கு அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அது விவோ எக்ஸ்300 அல்ட்ரா (Vivo X300 Ultra) மாடல் ஆகும். சுவாரசியமாக இது இந்த 2025 ஆம் ஆண்டிலேயே அல்லது 2026 தொடக்கத்திலேயே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் டூயல் 200எம்பி கேமராக்கள், அதாவது இரண்டு 200எம்பி கேமராக்கள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் - தொழில்துறையில் இதுவே முதல் முறையாக இருக்கும். இதன் மூலம் அதிநவீன இமேஜிங் தொழில்நுட்பத்திற்காக விவோ நிறுவனத்திற்கு இருக்கும் நற்பெயர் மேலும் வலுவடையும்
நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் கூற்றுப்படி ஒரு புதிய 'அல்ட்ரா' ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். மூன்று லென்ஸ்களும் பெரிய மற்றும் மேம்படுத்தப்பட்ட சென்சார்களை கொண்டிருக்கும் மற்றும் அதில் இரண்டு 200எம்பி சென்சார்கள் பயன்படுத்தப்படும். இது விவோ எக்ஸ் 300 அல்ட்ராவாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் "முன்னோடியான" விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 100x டிஜிட்டல் ஜூம் மற்றும் 3.7x ஆப்டிகல் ஜூம் கொண்ட 200எம்பி டெலிஃபோட்டோ கேமராவுடன் கூடிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இருந்தது
ஆக விவோ எக்ஸ்300 அல்ட்ராவில் சேர்க்கப்படும் 200 எம்பி கேமரா ஆனது பெரும்பாலும் ப்ரைமரி சென்சார ஆகவே இருக்கும். இரண்டாவது 200 எம்பி சென்சார் ஆனது டெலிஃபோட்டோ கேமராவாக செயல்படலாம். இந்த ஸ்மார்ட்போன் சீனாவிற்கு வெளியே அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விலை நிச்சயமாக ரூ.1 லட்சத்தை தாண்டும். ஏனென்றால் விவோ எக்ஸ்200 ப்ரோவின் இந்திய விலை ரூ.94,999 ஆகும்.
விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 2கே ரெசல்யூஷன் உடனான புதிய 6.8-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பெரும்பாலும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட்டால் இயக்கப்படும். கடைசியாக இது ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஒரிஜின்ஓஎஸ்6 கொண்டு இயங்கலாம்.
விவோ எக்ஸ்300 சீரிஸ் இந்திய அறிமுகம்: சமீபத்தில் உலகளவில் அறிமுகமான விவோ எக்ஸ்300 மற்றும் விவோ எக்ஸ்300 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போகளும் வருகிற 2025 டிசம்பர் மாத தொடக்கத்திலேயே இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இன்னும் சரியான வெளியீட்டு தேதி குறித்த விவரங்கள் இல்லை.
என்ன விலை? விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,43,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மறுகையில் உள்ள விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,08,000 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி உடனான ஹை-எண்ட் வேரியண்ட் ஆனது சுமார் ரூ.1,13,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








