Home
Mobile

மார்க்கெட்டின் புது கேமரா கிங்.. புது VIVO போன்.. 100x ஜூமிங் 200MP கேமரா, 50MP செல்பீ, 16GB ரேம்.. என்ன விலை?

சீனாவில் அறிமுகமான இரண்டு வாரங்களுக்கு பிறகு விவோ (Vivo) நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களாக விவோ எக்ஸ்300 ப்ரோ (Vivo X300) மற்றும் விவோ எக்ஸ்300 ப்ரோ (Vivo X300 Pro) என்கிற 2 மாடல்கள் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே பிளாக்ஷிப் 3என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட்டால் இயக்கப்படுகின்றன மற்றும் இரண்டுமே ட்ரிபிள் ரியர் கேமராக்களை பேக் செய்கின்றன. இரண்டு மாடல்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் என்னென்ன? இவைகளின் விலை நிர்ணயம் என்ன? எப்போது இந்திய அறிமுகம்? இதோ விவரங்கள்:

மார்க்கெட்டின் புது கேமரா கிங்.. புது VIVO போன்.. 100x ஜூமிங் 200MP!

விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஒரிஜின் ஓஎஸ் 6
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1260 × 2800 பிக்சல்ஸ் உடனான 6.78 இன்ச் பிளாட் Q10+ LTPO AMOLED டிஸ்பி
- ஆக்டாகோர் 3என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்
- 16GB வரை LPDDR5X அல்ட்ரா ரேம்
- 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (எப்/1.57) ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 100x டிஜிட்டல் ஜூம் திறன் கொண்ட 200-மெகாபிக்சல் (எப்/2.67) பெரிஸ்கோப் கேமரா
- ரியர் கேமரா செட்டப்பில் 8கே வீடியோ ரெக்கார்டிங் திறன்
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) செல்பீ கேமரா

- 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- லேசர் ஆட்டோஃபோகஸ் சென்சார்
- ஹால் எஃபெக்ட் சென்சார்
- ஐஆர் பிளாஸ்டர்
- ஃப்ளிக்கர் சென்சார்
- மல்டிஸ்பெக்ட்ரல் சென்சார்
- வைஃபை 7, ப்ளூடூத் 5.4, என்எஃப்சி, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி 3.2 ஜென் 1 டைப்-சி போர்ட்

- 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- 5440 எம்ஏஎச் பேட்டரி
- டூயல் ஸ்பீக்கர் சிஸ்டம்
- எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார்
- ஆக்ஷன் பட்டன் மற்றும் சிக்னல் ஆம்ப்ளிஃபையர் சிப்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68 ரேட்டிங்
- அளவீட்டில் 161.98×75.48×7.99மிமீ
- எடையில் சுமார் 226 கிராம்

விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ப்ரோ மாடலில் உள்ள அதே ஓஎஸ், சிப், செல்பீ கேமரா, கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் மற்றும் செக்யூரிட்டி அம்சங்களை கொண்டுள்ளது
- சிறிய 6.31-இன்ச் பிளாட் Q10+ LTPO AMOLED டிஸ்பிளே
- ப்ரோ மாடலில் உள்ள 5,440mAh பேட்டரிக்கு பதிலாக 5,360mAh பேட்டரி

- ட்ரிபிள் ரியர் கேமரா தான் ஆனால் இது OIS உடன் 200-மெகாபிக்சல் பிரைமரி கேமரா + 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா + 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமராவை கொண்டுள்ளது
- அளவில் சிறியதாக இருப்பதால் இந்த போன் அளவீட்டில் 150.57×71.92×7.95மிமீ மற்றும் எடையில் சுமார் 190 கிராம் உள்ளது.

விவோ எக்ஸ்300, விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம், விலை நிர்ணயம், கலர் ஆப்ஷன்கள்: இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே 2025 டிசம்பர் மாதா தொடக்கத்திலேயே இந்தியாவிற்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,43,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

மறுகையில் உள்ள விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,08,000 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி உடனான ஹை-எண்ட் வேரியண்ட் ஆனது சுமார் ரூ.1,13,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இவ்விரு விவோ எக்ஸ்300 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுமே வருகிற நவம்பர் 3 ஆம் தேதி முதல் ஐரோப்பாவில், விவோ நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வரும். கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை விவோ எக்ஸ்300 ப்ரோ மாடலானது டூன் பிரவுன் மற்றும் பாண்டம் பிளாக் கலர்களிலும், விவோ எக்ஸ்300 மாடலானது ஹாலோ பிங்க் மற்றும் பாண்டம் பிளாக் கலர்களிலும் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X300 Pro and Vivo X300 Launched Globally Check Out Price Specifications India Launch Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X