Home
Mobile

வாய் பிளந்த மார்க்கெட்.. 7500mAh பேட்டரி, 200MP கேமரா, 16GB ரேம் உடன் புதிய OPPO போன் அறிமுகம்!

ஒப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களாக ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ (Oppo Find X9 Pro) மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 (Oppo Find X9) ஆகிய மாடல்கள் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த அக்.16 சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட இவ்விரு ஸ்மார்ட்போன்களும் வரும் வாரங்களில் இந்திய சந்தைக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் AMOLED டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்
- TUV ரெயின்லேண்ட் இன்டெலிஜெண்ட் ஐ கேர் 5.0 சர்டிபிகேட்

7500mAh பேட்டரி, 200MP கேமரா உடன் புதிய OPPO போன் அறிமுகம்!

- 3nm மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட்
- 16GB வரை LPDDR5x ரேம் மற்றும் 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- எக்ஸ்-ஆக்சிஸ் ஹாப்டிக் மோட்டார்
- 36,344.4 சதுர மிமீ அட்வான்ஸ்டு வெப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம்

- Hasselblad ஆல் ட்யூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா
- 1/1.28-இன்ச் சென்சார், 23மிமீ குவிய நீளம் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.5) சோனி LYT-828 ப்ரைமரி கேமரா
- 15மிமீ குவிய நீளம் உடனான 50-மெகாபிக்சல் (எப்/2.0) சாம்சங் ISOCELL 5KJN5 அல்ட்ராவைடு கேமரா
- 200-மெகாபிக்சல் (எப்/2.1) டெலிஃபோட்டோ கேமரா (70மிமீ குவிய நீளம் மற்றும் ஓஐஎஸ்)

- 50-மெகாபிக்சல் (எப்/2.0) சாம்சங் 5KJN5 செல்பீ கேமரா
- 7500mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி
- 80W SuperVOOC வயர்டு மற்றும் 50W AirVOOC வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
- 3டி அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்

- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ் 16 ஓஎஸ்
- 5 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- SGS டிராப் ரெசிஸ்டன்ஸ் சர்டிபிகேட்

ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ப்ரோ மாடலில் உள்ள அதே சிப்செட், ஓஎஸ், ஐபி ரேட்டிங், டிராப் ப்ரொடெக்ஷன்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான சிறிய 6.59-இன்ச் AMOLED டிஸ்பிளே
- 32,052.5 சதுர மிமீ அட்வான்ஸ்டு வெப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம்

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- OIS உடன் 50-மெகாபிக்சல் (எப் /1.6) சோனி LYT-808 வைட் கேமரா
- 50-மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- OIS உடன் 50-மெகாபிக்சல் (எப்/2.6) சோனி LYT-600 டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் சோனி IMX615 செல்பீ கேமரா
- ப்ரோ மாடலைப் போலவே வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங், ஆனால் சிறிய 7,025mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி

ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள்: ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,34,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மறுகையில் உள்ள ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,03,000 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.

கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை புதிய ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ மாடல் ஆனது சில்க் ஒயிட் மற்றும் டைட்டானியம் சார்கோல் ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கும். ஸ்டாண்டர்ட் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 மாடல் ஆனது ஸ்பேஸ் பிளாக், டைட்டானியம் கிரே மற்றும் வெல்வெட் ரெட் ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும். இரண்டு மாடல்களுமே ஒப்போ நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் வழியாக உலகளவில் விற்பனை செய்யப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Find X9 Pro With 7500mAh Battery Find X9 With 7025mAh Battery Launched Globally Price Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X