தரமான 5G போன் வாங்க ஐடியா இருக்கா? வெயிட் பண்ணுங்க வருது சாம்சங் 5ஜி போன்.!

|

சாம்சங் நிறுவனம் விரைவில் இந்தியாவில் Samsung Galaxy M54 5G எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் Samsung Galaxy M53 5G போன் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி எம்54 5ஜி

கேலக்ஸி எம்54 5ஜி

மேலும் விரைவில் கேலக்ஸி எம்54 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த கேலக்ஸி எம்54 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஆப்பிளை ஓரங்கட்டிய புது Lenovo Tab P11 Pro 2nd Gen: இன்று விற்பனை.! நம்பி வாங்கலாமா? வேண்டாமா?ஆப்பிளை ஓரங்கட்டிய புது Lenovo Tab P11 Pro 2nd Gen: இன்று விற்பனை.! நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

அதாவது விரைவில் அறிமுகமாகும் கேலக்ஸி எம்54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தரமான ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் கொடுக்கும். அதேபோல் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும் இந்த
ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும் இந்த கேலக்ஸி எம்54 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி இதில் உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.

5G ஸ்பீட் டெஸ்ட் மட்டும் செஞ்சுடாதீங்க.! விளைவு ரொம்ப மோசமா இருக்கும்.! அலெர்ட் மக்களே.!

 AMOLED டிஸ்பிளே

AMOLED டிஸ்பிளே

6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்54 5ஜி போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 6000 எம்ஏஎச் பேட்டரி,25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட சிறப்பான வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

அலெர்ட்! எக்காரணத்தை கொண்டும் இந்த 4 பொய்களையும் நம்பிடாதீங்க.. ஆரம்பமானது 5G ஊழல்!அலெர்ட்! எக்காரணத்தை கொண்டும் இந்த 4 பொய்களையும் நம்பிடாதீங்க.. ஆரம்பமானது 5G ஊழல்!

64எம்பி மெயின் கேமரா

64எம்பி மெயின் கேமரா

இந்த கேலக்ஸி எம்54 5ஜி போன் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த சாம்சங்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Infinity-O Super AMOLED + டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.

ரூ.10,000 முதல் 5G போன் வாங்கலாமா? இந்த ஆஃப்பரை கவனிக்காம போய்டாதீங்க.! பீல் பண்ணுவீங்க.!ரூ.10,000 முதல் 5G போன் வாங்கலாமா? இந்த ஆஃப்பரை கவனிக்காம போய்டாதீங்க.! பீல் பண்ணுவீங்க.!

108எம்பி பிரைமரி கேமரா

108எம்பி பிரைமரி கேமரா

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா (f/1.8 aperture lens) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற குவாட் கேமராஅமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன்.

5G சேவையில் அந்தர்பல்டி: டெலிகாம் துறையில் நுழையும் Adani.. ஜியோ, ஏர்டெல் பிளான் என்ன?5G சேவையில் அந்தர்பல்டி: டெலிகாம் துறையில் நுழையும் Adani.. ஜியோ, ஏர்டெல் பிளான் என்ன?

Dimensity 900 சிப்செட்

Dimensity 900 சிப்செட்

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கும் இந்த ஸ்மார்ட்போன் மிக அருமையாக இருக்கும். பின்பு One UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்: கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய வசதி.!அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்: கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய வசதி.!

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது கேலக்ஸி எம்53 5ஜி போன்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
upcoming Samsung Galaxy M54 5G with Snapdragon 888 chipset: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X