5G ஸ்பீட் டெஸ்ட் மட்டும் செஞ்சுடாதீங்க.! விளைவு ரொம்ப மோசமா இருக்கும்.! அலெர்ட் மக்களே.!

|

இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 5G சேவைகள் இப்போது கிடைக்கின்றன. ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) ஆகியவை வரும் மாதங்களில் 5ஜி கவரேஜை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்த தருணத்தில், 5ஜி கிடைக்கும் நகரங்களில் இருக்கும் மக்கள் அவர்களின் போனில் 5ஜி என்ன வேகத்தில் கிடைக்கிறது என்று ஸ்பீட் டெஸ்ட் (5G Speed Test) செய்து பார்க்கிறார்கள். ஆனால், மக்கள் இந்த முயற்சியை டிரை செய்து பார்க்காமல் இருப்பது நல்லது.!

5ஜி ஸ்பீட் டெஸ்ட் செய்தால் பாதிப்பு ஏற்படுமா? எப்படி?

5ஜி ஸ்பீட் டெஸ்ட் செய்தால் பாதிப்பு ஏற்படுமா? எப்படி?

காரணம் என்ன என்பதை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். நீங்கள் 4ஜி நெட்வொர்க்கிற்கு ஸ்பீட் டெஸ்ட் (4G Network Speed Test) செய்து பார்ப்பது உங்களை எந்த விதத்திலும் பாதிக்காது.

ஆனால், 5ஜி நெட்வொர்க்கில் இணைந்த பின்பு, நீங்கள் 5ஜி இன்டர்நெட் ஸ்பீட் டெஸ்ட் (5G Internet Speed Test) செய்தால் என்ன நிகழும்? எதை வேகமாக இழப்பீர்கள் என்பதைப் பற்றித் தான் தெளிவாகப் பார்க்கப்போகிறோம் வாங்க.

உங்களுக்கு 5ஜி நெட்வொர்க் கிடைத்தால் உண்மையிலேயே நீங்கள் அதிர்ஷ்டசாலியா?

உங்களுக்கு 5ஜி நெட்வொர்க் கிடைத்தால் உண்மையிலேயே நீங்கள் அதிர்ஷ்டசாலியா?

இந்தியாவில் 5G கிடைக்கும் நகர பகுதியில் (5G Cities) நீங்கள் வசிக்கிறீர்களா என்றால், உண்மையிலேயே நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்.!

என்ன தான் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தாலும், 5ஜி நெட்வொர்க் (5G Network) உடன் இணைக்கப்பட்ட பிறகு, 5ஜி இன்டர்நெட் ஸ்பீட் டெஸ்ட்டை நீங்கள் சோதித்துப் பார்க்காமல் இருக்கும் வரை தான் அந்த அதிர்ஷ்டம் உங்களுடன் இருப்பதாக உணர்வீர்கள்.

இனி 3G / 4G போன் தயாரிக்க கூடாது.! ஒன்லி 5G போன் மட்டும் தானா? அரசு போட்ட கண்டிஷன்.!இனி 3G / 4G போன் தயாரிக்க கூடாது.! ஒன்லி 5G போன் மட்டும் தானா? அரசு போட்ட கண்டிஷன்.!

5G இன் உண்மையான வேகத்தை எப்படி கண்டறிவது?

5G இன் உண்மையான வேகத்தை எப்படி கண்டறிவது?

இந்தியாவில் இப்போது, ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்கள் தங்கள் பகுதியில் 5ஜி வேகம் எவ்வளவு வேகமாக உள்ளது என்பதைப் பார்க்க விரும்புகின்றனர்.

5ஜி வேகத்தைப் பார்ப்பதற்கான சிறந்த வழி, ஓக்லாவின் ஸ்பீட் டெஸ்ட் (Ookla Speed Test ) மற்றும் ஃபாஸ்ட் ஸ்பீட் டெஸ்ட் (FAST Speed Test) போன்ற இன்டர்நெட் ஸ்பீட் டெஸ்ட் சோதனை ஆப்ஸ்களை பயன்படுத்துவதாகும்.

இந்த ஸ்பீட் டெஸ்ட் ஆப்ஸ்களை (Speed Test Apps) யூஸ் செய்யும் போது எச்சரிக்கையாக இருங்கள்.!

5ஜி ஸ்பீட் டெஸ்ட் செய்தால் இப்படி ஒரு சிக்கலை சந்திக்க வேண்டுமா?

5ஜி ஸ்பீட் டெஸ்ட் செய்தால் இப்படி ஒரு சிக்கலை சந்திக்க வேண்டுமா?

காரணம், உங்கள் போனில் உள்ள டேட்டா பேலன்ஸ் (Data Balance) மிக வேகமாக நொடியில் தீர்ந்துவிடும்.

ஆம், உங்கள் ஸ்மார்ட்போனில் 5G நெட்வொர்க்கின் வேகத்தைச் சோதிக்க, நீங்கள் ஸ்பீட் டெஸ்ட் செய்யும் போது, சில நிமிடங்களில் உங்கள் தினசரி டேட்டா பேலன்ஸ் (Daily Data Balance) ஆனா 1ஜிபி அல்லது 2ஜிபி அல்லது 3ஜிபி டேட்டா ராக்கெட் வேகத்தில் தீர்ந்துவிடும்.

சரியாகச் சொன்னால், ஸ்பீட் டெஸ்ட் செய்தால் உங்கள் டேட்டா காலி.!

ஏன் 5G ஸ்பீட் டெஸ்ட் செய்தால் டேட்டா வேகமாக தீர்ந்துவிடுகிறது?

ஏன் 5G ஸ்பீட் டெஸ்ட் செய்தால் டேட்டா வேகமாக தீர்ந்துவிடுகிறது?

5G ஸ்பீட் டெஸ்ட் சோதனைகளைச் செய்யும் போது, உங்கள் தினசரி டேட்டா வரம்பில் இருக்கும் மொத்த டேட்டாவையும் 5ஜி டெஸ்டிங் (5G Testing) ஒரு நொடியில் தீர்ந்துவிடுகிறது.

காரணம், 5ஜி சேவையின் வேகம் அத்தகையது.

ஆம், 4ஜி நெட்வொர்க்கில் உங்களுடைய டேட்டா "Mbps" அல்லது "Kbps" இல் இயங்கும். ஆனால், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட நெக்ஸ்ட் ஜெனெரேஷன் 5ஜி நெட்வொர்க் (Next Generation 5G Network) அப்படியானதில்லை.

Jio 5G & Airtel 5G யூஸ் பண்ண புது சிம் கார்டு வாங்க வேண்டுமா? உடனே படிங்க.!Jio 5G & Airtel 5G யூஸ் பண்ண புது சிம் கார்டு வாங்க வேண்டுமா? உடனே படிங்க.!

உங்கள் டேட்டா முழுமையாக தீர்ந்துவிட இதுவே காரணம்.!

உங்கள் டேட்டா முழுமையாக தீர்ந்துவிட இதுவே காரணம்.!

5ஜி நெட்வொர்க் "Gbps" என்ற வேகத்தில் இயங்குவதால், நீங்கள் அதை ஸ்பீட் டெஸ்ட் செய்ய கிளிக் செய்தவுடன் 1ஜிபிக்கு அதிகமான டேட்டாவை 1 நொடிக்குள் 5ஜி உட்கொள்கிறது.

இதனால், உங்கள் ரீசார்ஜ் திட்டத்துடன் கிடைக்கும் ஒட்டுமொத்த டேட்டாவும் சில நிமிடங்களில் தீர்ந்துவிடுகின்றன.

குறிப்பாக, இந்த சிக்கலுக்கான மற்றொரு காரணம் என்னவென்றால், ஏர்டெல் மற்றும் ஜியோ தற்போதுள்ள 4ஜி டேட்டா திட்டங்களுடன் 5ஜியை வழங்குகிறது.

இப்போது கிடைக்கும் ரீசார்ஜ் திட்டத்தில் 5ஜி பயன்படுத்த முடியாதா?

இப்போது கிடைக்கும் ரீசார்ஜ் திட்டத்தில் 5ஜி பயன்படுத்த முடியாதா?

அதாவது, உங்கள் ரீசார்ஜ் திட்டத்துடன் கிடைக்கும் தினசரி டேட்டா வரம்புகளான (daily data limit) 1ஜிபி, 2ஜிபி அல்லது 3ஜிபி டேட்டாவை நீங்கள் 5ஜி நெட்வொர்க்கில் பயன்படுத்தும் போது, அது 5ஜி நெட்வொர்க்கிற்கு போதாத டேட்டாவாக இருக்கிறது.

5G நெட்வொர்க்கில் விளையாடுவதற்கு அதிகமான டேட்டா தேவைப்படுகிறது. இப்போது, உங்கள் திட்டங்களுடன் கிடைக்கும் டேட்டா அளவுகள் சில நிமிடங்களுக்கு மட்டுமே உங்களால் 5ஜியில் தாக்குப்பிடிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

5ஜி டேட்டா தீர்ந்தவுடன் டேட்டா வேகம் டெட் ஸ்லோவாக குறையுமா?

5ஜி டேட்டா தீர்ந்தவுடன் டேட்டா வேகம் டெட் ஸ்லோவாக குறையுமா?

ஜியோ தனது வெல்கம் ஆஃபரில் "அன்லிமிடெட் 5ஜி டேட்டா" (Unlimited 5G Data) என்று குறிப்பிட்டிருந்தாலும், பயனர்கள் தினசரி டேட்டா கோட்டா தீரும் வரை மட்டுமே 5ஜி வேகத்தைப் பயன்படுத்த முடியும்.

உங்கள் 1ஜிபி, 2ஜிபி அல்லது 3ஜிபி டேட்டாவை நீங்கள் பயன்படுத்தியவுடன், உங்கள் நெட்வொர்க் மீண்டும் 64Kbps என்ற வேகத்திற்கு மாறிவிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இது 5ஜி இன் வேகத்தை நீங்கள் அனுபவித்த பிறகு, டெட் ஸ்லோ வேகமாக (dead slow speed) உணரச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தா நீங்க லக்கி.! இல்லனா 5G யூஸ் பண்ண வாய்ப்பே இல்லை.!இந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தா நீங்க லக்கி.! இல்லனா 5G யூஸ் பண்ண வாய்ப்பே இல்லை.!

ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபர் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபர் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபர் (Jio 5G Welcome Offer) தற்போது டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய நான்கு நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது.

ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபர் அழைப்பைப் பெற, நீங்கள் இந்த நான்கு நகரங்களில் ஒன்றில் இருக்க வேண்டும். 5ஜி திறன் கொண்ட சாதனத்தை வைத்திருக்க வேண்டும்.

மேலும் உங்கள் எண்ணில் ரூ.239 மற்றும் அதற்கு மேற்பட்ட அடிப்படைத் திட்டத்தை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Airtel 5G Plus அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?

Airtel 5G Plus அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?

மறுபுறம், ஏர்டெல் 5ஜி பிளஸ் (Airtel 5G Plus) 8 நகரங்களில் கிடைக்கிறது. இதில் ஏதேனும் ஒரு இடத்தில் நீங்கள் வசிக்கும் பயனராக இருந்தால் 5ஜியை அனுபவிக்கலாம்.

குறிப்பாக, நீங்கள் OTA அப்டேட் மூலம் 5G வசதியுடன் கூடிய 5G ஸ்மார்ட்போன் வைத்திருந்தால் மட்டுமே 5G நெட்வொர்க்கை அனுபவிக்க முடியும்.

பெரும்பாலான OEMகள் 5G ஐ செயல்படுத்தும் OTA அப்டேட்களை (5G OTA Update) வெளியிட்டன, ஆனால் Samsung மற்றும் Apple ஆகியவை தங்கள் சாதனங்களுக்கான அப்டேட்டை இன்னும் வெளியிடவில்லை.

ஆகையால், இந்த பிராண்ட் பயனர்கள் அப்டேட் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Alert Smartphone Users Don't Run 5G Speed Test - Your Phone Data Will Exhaust Quickly

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X