ரூ.20,000க்கு கீழ் இந்தியாவில் விற்பனையாகும் 5 சிறந்த செல்பி ஸ்மார்ட்போன்கள்
கடந்த சில வருடங்களாக செல்பி மோகம் இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களுக்கு அதிகரித்து வருகிறது.
கடந்த சில வருடங்களாக செல்பி மோகம் இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களுக்கு அதிகரித்து வருகிறது.

அன்லிமிடட் ஏர்டெல் வாய்ஸ் வெறும் ரூ.148/-க்கு பெறுவது எப்படி.?
எனவே தற்போது ஸ்மார்ட்போன்கள் வாங்குபவர்கள் சிறந்த செல்பி எடுக்கும் மொபைல் எது என்று தேட ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் இந்தியாவில் ரூ.20,000க்கு கீழ் விற்பனையாகும் 5 சிறந்த செல்பி ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்களை தற்போது பார்ப்போம்

விவோ V5 (Vivo V5 Rs.17,980)
செல்பி எடுக்க சிறந்த ஸ்மார்ட்போன்களில் நம்பர் ஒன் என்று கூறப்படுவது விவோ V5 மாடல் ஸ்மார்ட்போன்கள்தான். இந்தியாவில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் 20எம்பி முன் கேமிரா உள்ள இது ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் கேமிராவில் சோனி IMX 376 சென்சார் மற்றும் 5P லென்ஸ் அமைந்துள்ளதால் மிகச்சிறந்த செல்பியை கொடுக்கும் தன்மை உடையது.
நாம் சோதனை செய்து பார்த்த வகையில் விவோ V5 ஸ்மார்ட்போன் மிகச்சிறந்த செல்பி ரிசல்ட்டை தருகிறது. இந்த மொபைல் போன் ரூ.17980 என்ற விலையில் நவம்பர் 26 முதல் வெளியாகிறது. சிறந்த செல்பி ரிசல்ட்டை பெற விரும்புபவர்கள் தற்போது இந்த மொபைலுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஓப்போ F1s (Oppo F1s Rs.17,999)
செல்பி ஸ்மார்ட்போன்களில் விவோ வி5 மாடலுக்கு பின்னர் அடுத்த சிறந்த செல்பி ஸ்மார்ட்போன் ஓப்போ F1s மாடல்தான். 16 எம்பி முன் கேமிரா உள்ள இந்த ஸ்மார்ட்போனில் வைட் ஆங்கிள் லென்ஸ் உள்ளதால் மிகத்தெளிவான, ஷார்ப்பான செல்பி இமேஜ்கள் உருவாகின்றது. இந்த ஸ்மார்ட்போனின் செல்பி கேமிரா ISOCELL டெக்னாலஜியில் உருவாகியுள்ளது. இந்த மாடலில் LED பிளாஷ் இல்லை என்றாலும், ஸ்க்ரீன் பிளாஷ் இருப்பதால் நாம் எடுக்கும் செல்பி புகைப்படங்கள் பிரைட் ஆக இருக்கும்
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஜியான் S6s (Gionee S6s Rs.17,999)
இந்த வரிசையில் நாம் மூன்றாவது சிறந்த செல்பி ஸ்மார்ட்போனாக கருதுவது ஜியான் S6s மாடல் ஸ்மார்ட்போன் தான். இதில் 8 எம்பி செல்பி கேமிரா LED பிளாஷ் உடன் உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5P லென்ஸ் மற்றும் ஸ்க்ரீன் பிளாஷ் உள்ளதால் செல்பி புகைப்படங்கள் அசத்தலாக இருக்கும்

ஆசஸ் ஜென்போன் செல்பி (Asus Zenfone Selfie Rs.12,970)
கடந்த ஆண்டு வெளியான ஆசஸ் ஜென்போன் செல்பி ஸ்மார்ட்போன் இன்றளவும் மிகச் சிறந்த ஸ்மார்ட்போனாக சந்தையில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றது. இதில் இரண்டு 13எம்பி கேமிரா உள்ளது. மேலும் இதில் தோஷிபா சென்சார் மற்றும் டூயல் டோன், டூயல் LED பிளாஷ் ஆகியவை உள்ளது. மேலும் இந்த் போனின் கேமிராவில் ஆசஸ் நிறுவனத்தின் பிக்சல் மாஸ்டர் இமேஜிங் டெக்னாலஜி உள்ளது.

சாம்சங் கேலக்ஸி J7 பிரைம் (Samsung Galaxy J7 Prime Rs.18,790)
சாம்சங் கேலக்ஸி J7 பிரைம் ஸ்மார்ட்போன் மற்றொரு சிறந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆகும். இதில் 8 எம்பி செல்பி கேமிராவு உள்ளதால் இதில் எடுக்கப்படும் செல்பி இமேஜ்கள் நல்ல ரிசல்ட்டுடன் உள்ளது. வைட் ஆங்கிள் ஃபங்கசன் இருப்பதால் குரூப்பாக இருக்கும்போது கூட குரூப் செல்பி எடுக்க வசதியாக உள்ளது
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications