Home
Mobile

32எம்பி செல்பீ கேமரா, தரமான சிப்செட் வசதியுடன் டெக்னோ ஸ்பார்க் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

டெக்னோ நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் 9 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தற்போது ஆப்பிரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது டெக்னோ ஸ்பார்க் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 சிறந்த பாதுகாப்பு வசதி

சிறந்த பாதுகாப்பு வசதி

டெக்னோ ஸ்பார்க் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 1080 × 2460 பிக்சல்தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிமைப்பு மிகவும்அருமையாக உள்ளது.

 மீடியாடெக் சிப்செட்

மீடியாடெக் சிப்செட்

இப்போது வரும் போன்களில் அதிகமாக இடம்பெறும் சிப்செட் என்றால், அது மீடியாடெக் தான். அதேபோல் இந்த டெக்னோ ஸ்பார்க் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த சாதனம் கேமிங் உட்பட அனைத்து வசதிகளுக்கும் மிக அருமையாக இருக்கும்என்றே கூறலாம். இதனுடன் மாலி 52 ஜிபியு வசதியும் உள்ளது.

 கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு

குறிப்பாக HiOS v8.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 9 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுகொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி சென்சார்

50எம்பி பிரைமரி சென்சார்

டெக்னோ ஸ்பார்க் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி ஏஐ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

இந்த டெக்னோ ஸ்பார்க் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் மற்றும் பல அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

புரானோ ப்ளூ, ஹோலி ஒயிட், ஹேக்கர் ஸ்டார்ம்

புரானோ ப்ளூ, ஹோலி ஒயிட், ஹேக்கர் ஸ்டார்ம்

டெக்னோ ஸ்பார்க் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 9 ப்ரோ ஸ்மார்ட்போன். புரானோ ப்ளூ, ஹோலி ஒயிட், ஹேக்கர் ஸ்டார்ம் மற்றும் குவாண்டம் பிளாக் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ஸ்டைலா., கெத்தா ஒரு ஸ்மார்ட்போன்- அறிமுகமானது டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி., 50 எம்பி கேமரா உட்பட நான்கு கேமராக்கள்!

ஸ்பார்க் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை

ஸ்பார்க் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை

டெக்னோ ஸ்பார்க் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவலை வெளியிடவில்லை அந்நிறுவனம். டெக்னோ நிறுவனம் தற்போது பட்ஜெட் விலையில் தரமான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. எனவே இந்நிறுவனத்தின் சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Tecno Spark 9 Pro Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X