ஸ்டைலா., கெத்தா ஒரு ஸ்மார்ட்போன்- அறிமுகமானது டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி., 50 எம்பி கேமரா உட்பட நான்கு கேமராக்கள்!

|

டிசிஎல் ஸ்டைல்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது ஸ்டைஸ் ஆதரவுடன் வருகிறது. இந்த சாதனம் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி ஆதரவு மற்றும் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது.

TCL Stylus 5G என்ற புதிய ஸ்மார்ட்போன்

TCL Stylus 5G என்ற புதிய ஸ்மார்ட்போன்

TCL நிறுவனம், TCL Stylus 5G என்ற புதிய ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஸ்மார்ட்போனானது பெயர் குறிப்பிடுவது போன்று உள்ளமைக்கப்பட்ட ஸ்டைலஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. உயர் துல்லியமான அங்கீகாரத்துடனான Nebo பயன்பாட்டைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி ஆதரவுடன் இயக்கப்படுகிறது. TCL Stylus 5G ஸ்மார்ட்போனானது அமெரிக்காவில் வாங்குவதற்கு கிடைக்கிறது. இந்த சாதனம் டி-மொபைல் தளத்தில் $258 (தோராயமாக ரூ.20,000) என வாங்கலாம். இந்த டிசிஎஸ் ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது லூனார் பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது.

TCL ஸ்டைலஸ் 5ஜி சிறப்பம்சங்கள்

TCL ஸ்டைலஸ் 5ஜி சிறப்பம்சங்கள்

TCL ஸ்டைலஸ் 5ஜி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் 6.81 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080×2,460 பிக்சல்கள்) LCD டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி ஆதரவு கொண்ட 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக 2டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்ய முடியும்.

TCL ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

TCL ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

TCL ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் 50 எம்பி முதன்மை கேமரா, 5 எம்பி வைட் ஆங்கிள் சென்சார், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் ஆதரவுடனான குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என இந்த சாதனத்தின் முன்புறத்தில் 13 எம்பி செல்பி கேமரா வசதி இருக்கிறது.

4000 எம்ஏஎச் பேட்டரி

4000 எம்ஏஎச் பேட்டரி

TCL ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது 4000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் சாதாரண உபயோக நேரத்தில் 15.3 மணிநேர இயக்க ஆதரவைக் கொண்டிருக்கிறது. 18 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவுடன் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் வருகிறது. கூடுதலாகஇந்த சாதனத்தில் பேஸ் அன்லாக் ஆதரவு இருக்கிறது. இணைப்பு விருப்பங்களுக்கு என இந்த சாதனத்தில் ப்ளூடூத் 5.2, என்எஃப்சி, டூயல் பேண்ட் வைஃபை, யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் தி பாக்ஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Flex V என்ற மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

Flex V என்ற மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

TCL சமீபத்தில் Flex V என்ற மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. TCL Flex V என்பது சாம்சங் ஸ்மார்ட்ஃபோன் போன்ற ஒரு கிளாம்ஷெல் ஃபிளிப் ஆகும். இது ஃபோன் மூடப்பட்டிருக்கும் போது சிறிய இடைவெளியைக் கொண்டிருக்கும். இந்த புதிய போல்டப்பில் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பற்றிப் பேசுகையில், விகித விகிதம் Samsung Galaxy Z Flip போல உயரமாக இல்லை. வெளிப்புறக் காட்சியைப் பொறுத்தவரை, இது சிறியதாகத் தோன்றுகிறது. அறிவிப்புகளைக் காண்பிக்கவும் செல்ஃபிக்களுக்கான வ்யூஃபைண்டராகவும் இது பயன்படுகிறது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 765G சிப்செட்

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 765G சிப்செட்

TCL இன் இந்த முன்மாதிரி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 765G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இது 3545 mAh பேட்டரியில் இருந்து ஆற்றலைப் பெறுகிறது. மேலும், முன்புறத்தில் இந்த ஸ்மார்ட்போன் 44 எம்பி கேமராவும், பின்புறம் 48 எம்பி மற்றும் 16 எம்பி என இரண்டு கேமராக்களின் கலவையும் உள்ளது. மடிக்கக்கூடிய சாதனங்கள் உலகளவில் ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே கொண்டுள்ளது. ஆப்பிள் அதன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்த உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

Best Mobiles in India

English summary
TCL Launched its TCL Stylus 5G Smartphone with built in Stylus

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X