Home
Mobile

ஆண்ட்ராய்டு ஓ' OS-ல் இணையும் சோனி. உயர்தர வயர்லெஸ் ஆடியோவுக்கு உத்தரவாதம்

இசை விரும்பிகள் சோனிக்கு நன்றி சொல்லும் காலம்

By Siva

ஆண்ட்ராய்டு நெளகட், பயனாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ள நிலையில் இதன் அடுத்த ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட் ஓ' விரைவில் ரிலிஸ் ஆகவுள்ளது. இந்த ஓஎஸ் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் இதுவரை இதன் ஆடியோ சிஸ்டம் குறித்த தகவல்கள் வெளிவராமல் இருந்தது.

ஆண்ட்ராய்டு ஓ' OS-ல் இணையும் சோனி. உயர்தர வயர்லெஸ் ஆடியோவுக்கு உத்தரவா

அதற்போது அதுவும் வெளிவந்துவிட்டது. ஆண்ட்ராய்டு பயனாளிகள் இந்த புதிய ஆபரேட்டிங் சிஸ்டத்திற்காக காத்திருக்கின்றனர்.

கூகுள் நிறுவனம் டெக்னாலஜி தரத்தின் மேம்பாட்டிற்காக இதுவரை பல நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அடுத்த ஆபரேட்டிங் சிஸ்டத்தில் அமையவுள்ள அபாரமான ஆடியோ தரத்திற்காக சோனி நிறுவனத்துடன் அது கைகோர்த்துள்ளது.

இதற்காக கூகுள் நிறுவனம் சோனி நிறுவனத்திற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளது. ஜப்பானின் சோனி நிறுவனம் ஆண்ட்ராய்டின் அடுத்த ஓஎஸ்-க்காக 30க்கும் அதிகமான அம்சங்களை வழங்கவுள்ளது.

மீ திருவிழா : ரூ.1/-க்கு ரெட்மீ நோட் 4 கருவியை வாங்குவது எப்படி.?

கூகுள் நிறுவனத்தின் அடுத்த ஆபரேட்டிங் சிஸ்டத்திற்காக சோனி நிறுவனம் தனது LDAC வயர்லெஸ் ஆடியோ பார்பேட்டை அளிக்கவுள்ளது. இதன் மூலம் இதன் மூலம் டேட்டாக்களை புளூடுத்தை விட மூன்று மடங்கு வேகத்தில் பரிமாறி கொள்ளலாம். அதாவது 990kpbs விதத்தில் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்

மேலும் எந்தவிதமான வயர்லெஸ் உபகரணமும் இன்றி மிகச்சிறந்த தரமான ஆடியோவை இனிமேல் பெற்றுக் கொள்ளலாம். இதன் தரம் குறித்து நீங்கள் சோனியின் அதிகாரபூர்வமான வலைத்தளத்தில் மேலும் தெரிந்து கொள்ளலாம்

இன்றைய தேதியில் சோனி நிறுவனம் மட்டுமே LDAC டெக்னாலஜியை தனது தயாரிப்புகளில் பயன்படுத்தி வருகிறது. சோனியின் வாக்மேன் பிளேயர்ஸ், வயர்லெஸ் ஹெட்போன்கள், ஸ்பீக்கர்கள், ஹோம் தியேட்டர்கள் மற்றும் எக்ஸ்பீரியா போன்கள் ஆகியவற்றில் இந்த LDAC டெக்னாலஜி செய்யும் மாயஜாலத்தை பலர் அனுபவித்து இருப்பீர்கள்.

இந்த டெக்னாலஜியை மற்ற நிறுவனம் பெற வேண்டும் என்றால் அதற்காக அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த மாயஜால டெக்னாலஜி, கூகுளில் ஆண்ட்ராய்டு ஓ என்ற ஆபரேட்டிங் சிஸ்டத்தில் கிடைக்க இருப்பதால் ஆண்ட்ராய்டு பயனாளிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் இதன் பயனாளிகள் இந்த டெக்னாலஜிக்காக எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.எனவே இன்னும் ஒருசில வாரங்களில் உயர் தர ஆடியோ அனுபவத்தை பெற அனைவரும் தயாராகுங்கள்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Google has partnered with many companies to bring out various exciting features in their next Android update.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X