மீ திருவிழா : ரூ.1/-க்கு ரெட்மீ நோட் 4 கருவியை வாங்குவது எப்படி.?

Written By:

ஏப்ரல் ஆறாம் தேதி அதாவது வரும் வியாழன் அன்று மற்றொரு மி ரசிகர் திருவிழா நிகழ்ச்சியை நடத்த சியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளது ஆக சியோமி நிறுவன கருவிகள் மற்றும் சாதனங்கள் மீது பேரார்வம் கொண்ட வாடிக்கையாளர்கள் தயாராகிக் கொள்ளுங்கள்.

மீ திருவிழா : ரூ.1/-க்கு ரெட்மீ நோட் 4 கருவியை வாங்குவது எப்படி.?

மி.காம் தளத்தில் நடக்கும் இந்த விற்பனையில் சியோமி நிறுவனத்தின் பல சாதனங்கள் மற்றும் பாகங்கள் கிடைக்கும். எல்லாவற்றிக்கும் மேலாக பிளாஷ் விற்பனை ஒன்றில் வெறும் ரூ.1/-க்கு சாதனைகளை விற்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பிளாஷ் விற்பனை

பிளாஷ் விற்பனை

குறிப்பாக சியோமி ரெட்மீ நோட் 4 கருவியானது பிளாஷ் விற்பனையின் கீழ் ரூ.1/-க்கு கிடைக்கும். ஆக பயனர்கள் இப்போதே மி பயன்பாட்டை பதிவிறக்கி தயாராக வைத்துக்கொள்ளுங்கள், ஏனெனில் இந்த பிளாஷ் விற்பனை மி ஆப்பில் மட்டுமே தான் நிகழ்கிறது.

காலை 10 மணி

காலை 10 மணி

இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த விற்பனையில் சுமார் 20 ரெட்மீ நோட் 4 கருவிகள் மி ஸ்டோர் பயன்பாட்டில் உங்களுக்காக காத்திருக்கும்.

10000எம்ஏஎச் மி பவர் பேங்க்

10000எம்ஏஎச் மி பவர் பேங்க்

அதுமட்டுமின்றி 40 மி பேண்ட் 2 மற்றும் 50 10000எம்ஏஎச் மி பவர் பேங்க்குகளை 1 ரூபாய்க்கு உங்களால வாங்க முடியும். இந்த விற்பனை இந்திய நேரப்படி மதியம் 2 மணிவரை நிகழும்.

ரெட்மீ 4ஏ

ரெட்மீ 4ஏ

இது தவிர்த்து ஒருநாள் மி ரசிகர் திருவிழாவில் ரெட்மீ 4ஏ கருவியின் கோல்ட் ரோஸ் மாறுபாடு மற்றும் ரெட்மீ நோட் 4 கருவிகள் முறையே ரூ.5,999/- மற்றும் ரூ.9,999/-க்கு கிடைக்கும்.

ரெட்மீ 4ஏ கோல்ட் ரோஸ்

ரெட்மீ 4ஏ கோல்ட் ரோஸ்

ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போன் ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் 1 மில்லியனை தாண்டிவிட்ட நிலையில் றுவனம் மார்ச் 31 முதல் இந்த ஸ்மார்ட்போன் முன்பதிவை எடுக்க தொடங்கியது என்பதும், தற்போது ஏப்ரல் 6-ஆம் தேதி இந்திய நேரப்படி 12 மணிக்கு மீண்டும் கிடைக்க செய்யும். உடன் ரெட்மீ 4ஏ கோல்ட் ரோஸ் கருவியும் அதே நேரத்தில் கிடைக்க செய்யப்படும்.

20000எம்ஏஎச் மி

20000எம்ஏஎச் மி

மி பேண்ட் 2 மற்றும் மி கேப்ஸ்யூல் ஹெட்செட்ஸ் ஆகிய இரண்டையும் ரூ.2,998/- இல்லாமல் ரூ.2,598/-க்கு வாங்க முடியும். மறுபக்கம் ஒரு 20000எம்ஏஎச் மி பவர் பேங்க் ஆனதை ரூ.2,797/- பதிலாக ரூ.2,497/-க்கு வாங்க முடியும்.

மி இன்-இயர் ஹெட்போன்கள் புரோ

மி இன்-இயர் ஹெட்போன்கள் புரோ

மற்றும் இறுதியாக, மி இன்-இயர் ஹெட்போன்கள் புரோ எச்டி மற்றும் 10000எம்ஏஎச் பவர்பேங்க் ஆகிய இரண்டையும் ரூ.3,998/- பதிலாக ரூ.3,498/-க்கு வாங்கலாம்.

ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500/-

ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500/-

விற்பனைக்கு ஒரு நாளைக்கு முன்பு அதாவது ஏப்ரல் 5-ஆம் தேதியன்று சியோமி தள்ளுபடி கூப்பன்களை பெற முடியும். இந்திய நேரப்படி காலை 10 தொடங்கும் இதில் ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500/- ஆகிய கூப்பன்கள் கிடைக்கும். இதனை கொண்டு மி ரசிகர் திருவிழாவின் போது பொருட்கள் மேலும் தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

ஷிப்பிங் மற்றும் அட்டை

ஷிப்பிங் மற்றும் அட்டை

இந்த சிறப்பு விற்பனையில் பங்குகொள்ள மி வலைத்தளம் மற்றும் பயன்பாட்டில் பதிவு செய்துகொள்ளுமாறு உங்களை பரிந்துரைக்கிறோம் மற்றும் பிளாஷ் விற்பனை கச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முன்னதாகவே அனைத்து ஷிப்பிங் மற்றும் அட்டை விவரங்களை நிரப்பி வைத்துக்கொள்ளவும் கேட்டுக் கொள்கிறோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Xiaomi Redmi Note 4 at Rs. 1 and Other Deals on Offer at Mi Fan Festival. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot