மோட்டோ ஜி க்கு போட்டியாக களம் இறங்கியுள்ள புது மொபைல்...!
ஆன்லைன் ஷாப்பிங் தளமான ப்ளிப்கார்ட் மோட்டோ ஜி மற்றும் மோட்டோ இ மொபைல்களை தனது தளத்தில் மட்டும் விற்று இலாபம் பார்த்தது இன்று அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் தளங்களின் கண்களிலும் புகை வந்து கொண்டிருக்கிறது.
இதையடுத்து மற்றொரு பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஸ்னேப்டீல்(Snapdeal) நிறுவனம் புதிதாகவே ஒரு ஸ்மார்ட் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்தவாரம் தான் ப்ளிப்கார்ட் Digiflip Pro என்ற டேப்லட்டை வெளியிட்டது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்னேப்டீல் இந்த மொபைலை வெளியிட்டுள்ளது.
ஸ்னேப்டீல் வெளியிட்டுள்ள இந்த ஸ்மார்ட் போனின் பெயர் Alpha Feather என்பதாகும் இதோ அந்த மொபைலில் என்னென்ன இருக்கறது என்பதை பார்க்கலாம்.

5 இன்ச்சில் இந்த மொபைலை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது மேலும் இதில் ஆண்ட்ராய்டு கிட்கேட் ஓ.எஸ் உள்ளது.
மேலும் 13MP க்கு கேமரா மற்றும் 8MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்றை கொண்டு இந்த மொபைலை இந்நிறுவனம் வெளியிடுகிறது.
1.3GHz கோட் கோர் பிராஸஸர் மற்றும் 2GB க்கு ரேம் ஆகியவை இந்த மொபைலில் உள்ளது மேலும் இதன் இன்பில்ட் மெமரி 4GB மட்டும் தான் 32GB க்கு மெமரி கார்டு ஆப்ஷனையும் வழங்குகிறது இந்த மொபைல் வாங்கும் அனைவருக்கும் 8GB மெமரி கார்டை இலவசசமாக தருகிறது ஸ்னேப்டீல்.
இந்த மொபைலின் முக்கிய அம்சம் எது என்றால் இதன் எடை வெறும் 125கிராம் மட்டுமே எனவே பாக்கெட் பிரெண்ட்லி மொபைல் இது என்று கூறலாம் இதன் பேட்டரி திறன் 2500mAh ஆகும்.
இதன் விலை ரூ.12,999 ஆகும் மோட்டோ ஜி க்கு போட்டியாக களம் இறங்கியுள்ள இந்த மொபைல் விற்பனையில் எனன செய்ய இருக்கின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் பிளிப்கார்ட் வெளியிட்ட 7 இன்ச் கொண்ட குறைந்த விலையில் உள்ள புது டேப்லட்டை பற்றி படிக்க இங்க கிளிக் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications