Home
Mobile

யாராச்சும் Realme-ஐ கண்ட்ரோல் பண்ணுங்களேன்! ரூ.9999 க்கு இப்படிலாம் போன் லான்ச் பண்ணா நாங்க எங்க போறது?

ஏற்கனவே ரூ.10,000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் போன்கள் (Best Phones Under Rs 10000) என்கிற பட்டியலில் பல ரியல்மி போன்கள் இருக்கும் நிலைப்பாட்டில், ரூ.9,999 க்கு இன்னொரு புதிய ரியல்மி போன், இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மற்ற நிறுவனங்கள் சற்றே கலக்கம் அடைந்துள்ளன!

இந்தியாவில், ரியல்மியின் லேட்டஸ்ட் போனாக ரியல்மி சி33 2023 எடிஷன் (Realme C33 2023 Edition) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு அறிமுகமாகி விற்பனையில் பட்டைய கிளப்பிய ரியல்மி சி33-யின் அப்கிரேடட் வெர்ஷனாகும் (Upgraded Version). ஆக இதுவும் கண்டிப்பாக நல்ல வரவேற்ப்பை பெறுமென்பதில் சந்தேகமே வேண்டாம்.

Realme C33 2023: இப்படிலாம் போன் லான்ச் பண்ணா நாங்க எங்க போறது?

ரியல்மி சி33 2023 எடிஷன் விலை: ரியல்மி சி33 மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டரோஜின் விலை ரூ.9.999 என்றும், மறுகையில் உள்ள 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் விலை ரூ.10,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி சி33 2023 எடிஷன் விற்பனை: ரியல்மியின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் - அக்வா ப்ளூ, நைட் சீ மற்றும் சாண்டி கோல்ட் - மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த போனின் இந்திய விற்பனை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இது ரியல்மி.காம் (Realme.com) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கிறது.

ரியல்மி சி33 2023 எடிஷன் டிஸ்பிளே & ஓஎஸ்: இந்த ஸ்மார்ட்போன் 88.7% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ (Screen-to-body Ratio) உடனான 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த ரியல்மி யுஐ (Realme UI) உடன் வருகிறது.

ரியர் மற்றும் செல்பீ கேமராக்கள்: கேமராக்களை பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா (Dual Rear Camera) செட்டப் உடன் வருகிறது. அதில் 50எம்பி மெயின் கேமராவும் ஒரு ஏஐ கேமராவும் (AI Camera) உள்ளது. கேமரா அம்சங்களை பொறுத்தவரை 50எம்பி மோட், பியூடிப்ஃபை, பில்டர், எச்டிஆர், பனோரமிக் வியூ, போர்ட்ரெய்ட், டைம்லேப்ஸ், எக்ஸ்பெர்ட், சூப்பர் நைட் மற்றும் பலவற்றை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 5எம்பி செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரி: பெரும்பாலான பட்ஜெட் விலை ரியல்மி போன்களில் இருப்பதை போலவே இதிலும் 5000mAh பேட்டரி உள்ளது. இது 10W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. மற்ற அம்சங்களை பொறுத்தவரை இதுவொரு டூயல் சிம் (Dual SIM) கார்டு ஸ்மார்ட்போனாகும்; 4ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது; மைக்ரோ எஸ்டி கார்டை (Micro SD Card) சேர்ப்பதற்கான ஆதரவும் உள்ளது.

ரியல்மி சி55: வருகிற மார்ச் 21 ஆம் தேதியன்று ரியல்மி நிறுவனம் இன்னொரு புதிய ஸ்மார்ட்போனையும் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அது ரியல்மி சி55 (Realme C55) மாடலாகும். இதுவும் ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாகவே (Budget Phone) இருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.14,000 க்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Silently Realme Launched New Phone Under Rs 10000 Check Realme C33 2023 Edition Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X