வேற போன் ஆர்டர் போட்டு இருந்தா கேன்சல் பண்ணிடுங்க.. ஏன்னா இந்த புது Realme போனின் விலை அப்படி!
ரியல்மியின் (Realme) இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சொன்னால்.. இதே விலைப்பிரிவின் கீழ் வாங்க கிடைக்கும் மற்ற போன்களை எல்லாம் கண்டுகொள்ளவே மாட்டீர்கள். அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் விலை என்ன? அது என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!
நாம் இங்கே பேசுவது ரியல்மி சி55 (Realme C55) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இம்மாத தொடக்கத்தில் இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி சி55, வருகிற மார்ச் 21 ஆம் தேதியன்று மதியம் 12.30 மணிக்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று ரியல்மி இந்தியா (Realme India) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரியல்மி சி55 ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டதால் இதன் இந்திய விலை நிர்ணயம் மற்றும் அம்சங்கள் குறித்து எந்த குழப்பமும் இல்லை. இந்தோனேசிய சந்தையில் அறிமுகமானதை போலவே இந்தியாவிலும் இது இரண்டு கலர் ஆப்ஷன்கள் மற்றும் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்களின் கீழ் அறிமுகம் செய்யப்படும்.
ரியல்மி சி55 அம்சங்கள்: இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் சொந்த ரியல்மி யுஐ (Realme UI) மூலம் இயக்கப்படும். மேலும் இதில் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.72 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும்.
8ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் ஹெலியோ ஜி88 (MediaTek Helio G880) ப்ராசஸர் உடன் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. அதில் 64 மெகாபிக்சல் மெயின் கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் இருக்கும். முன்பக்கத்தை பொறுத்தவரை ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் உள்ள ஹோல்-பஞ்ச் கட்அவுட் டிசைனிற்குள் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறும்.
256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும் ரியல்மி சி55 ஸ்மார்ட்போனானில் மைக்ரோ எஸ்டி கார்டிற்கான ஆதரவும் உள்ளது. அதன் மூலம் போனின் மெமரியை 1டிபி வரை விரிவாக்க முடியும். கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, இது 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் போன்றவைகளை வழங்குகிறது.
189.5 கிராம் எடையுள்ள ரியல்மி சி55 ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி யூனிட் உள்ளது. அது 33W சூப்பர்வூக் (SUPERVOOC) சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. கடைசியாக பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட இதன் பக்கவாட்டில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Finger Print Sensor) ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.
ரியல்மி சி55 விலை: இந்தோனேஷிய விலை விவரங்களின்படி ரியல்மி சி55 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் சுமார் ரூ.13,300 க்கும், 8ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.16,000 க்கும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் இது ரெய்னி நைட் (Rainy Night) மற்றும் சன்ஷவர் (Sunshower) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








