Home
Mobile

லெனொவா K6 பவர் ஸ்மார்ட்போனில் உள்ள ஷார்ட்கட் சிறப்பம்சங்கள்

லெனொவா K6 பவர் ஸ்மார்ட்போனில் யாரும் அறியாத ஒருசில ஷார்ட்கட் அம்சங்கள் இருக்கின்றன.

By Siva

கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்த லெனொவா K6 பவர் மாடல் ஸ்மார்ட்போன் சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. 5 இன்ஸ் டிஸ்ப்ளேவுடன், 3 ஜிபி ரேம், 32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ், 13 MP மறும் 8 MP கேமிரா என பலவிதமான வசதிகளுடன் வந்த இந்த போன் வாடிக்கையாளர்களை பெருமளவு கவர்ந்தது.

லெனொவா K6 பவர் ஸ்மார்ட்போனில் உள்ள ஷார்ட்கட் சிறப்பம்சங்கள்

மேலும் இந்த லெனொவா K6 பவர் மாடல் ஸ்மார்ட்போனில் 4000mAh பேட்டரி இருப்பதால் இரண்டு நாட்கள் வரை சார்ஜ் ஏற்றவேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆண்டின் மிகச்சிறந்த ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்று என அனைவராலும் ஏற்கப்பட மாடல் இந்த லெனொவா K6 பவர் மாடல் ஸ்மார்ட்போன்

ரிலையன்ஸ் லைஃப் எப்1எஸ் பிரத்தியேகமாக ரூ.10,999/-க்கு.!

இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனில் யாரும் அறியாத ஒருசில ஷார்ட்கட் அம்சங்கள் இருக்கின்றன. இவைகள் குறித்து தற்போது பார்ப்போம்

குவிக் ஸ்நாப்

குவிக் ஸ்நாப்

நீங்கள் திடீரென உடனடியாக ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்றால் கேமிரா ஆப்-ஐ ஓப்பன் செய்து பின்னர் ஸ்நாப் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஸ்மார்ட்போனில் உள்ள கீகளில் ஏதாவது ஒரு கீயை இரண்டு முறை அழுத்தினால் போதும் உங்கள் ஸ்மார்ட்போன் அஃப் நிலையில் இருந்தாலும் உடனே கேமிரா ஆன் ஆகிவிடும். இந்த வசதியை நீங்கள் பெற வேண்டும் என்றால் Settings>Feature>Quick Snap என்று செய்தால் போதும். மேலும் இந்த வசதி உங்கள் ஸ்மார்ட்போனில் மியூசிக் ஓடிக்கொண்டிருந்தால் செயல்படாது என்பதை ஞாபகம் வைத்து கொள்ளவும்

ஃபிங்கர் பிரிண்ட் ஸ்நாப்

ஃபிங்கர் பிரிண்ட் ஸ்நாப்

பேருந்துகளில் அல்லது வாகனங்களில் சென்று கொண்டிருக்கும் போது நீங்கள் எதிர்பாராத ஒரு சம்பவத்தை பார்க்கின்றீர்கள் என்றால் அதை உடனடியாக புகைப்படம் எடுக்க விரும்புவீர்கள். ஆனால் அதற்கு மிகக்குறைவான நேரமே இருக்கும்.

இதுமாதிரியான நேரங்களில் பிங்கர் பிரிண்ட் சென்சார் மீது உங்கள் விரலை வைத்து அழுத்தினால் போதும், உடனே கேமரா ஆன் ஆகி போட்டோவை எடுக்க தயாராகிவிடும். இந்த வசதியை நீங்கள் பெற வேண்டும் என்றால் Settings>Feature>Fingerprint Snap என்று செய்ய வேண்டும்

VR மொட்-க்கு மாற்ற என்ன செய்ய வேண்டும்?

VR மொட்-க்கு மாற்ற என்ன செய்ய வேண்டும்?

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவரும் விரும்புவது VR மொட். இந்த மோடுக்கு ஸ்மார்ட்போனை ஒருசில க்ளிக்குகளில் எளிமையாக மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது Settings>Feature>VR Mode Switch. இதை செய்து முடித்த பின்னர் பவர் பட்டனை சிறிது நேரம் அழுத்தி பிடித்து கொண்டே இருந்தால் போதும் உங்கள் ஸ்மார்ட்போன், VR மொட்-க்கு மாறிவிடும்

கேமிராவை ஓப்பன் செய்ய இதோ மேலும் ஒரு வழி

கேமிராவை ஓப்பன் செய்ய இதோ மேலும் ஒரு வழி

ஏற்கனவே கேமிராவை விரைவாக ஓப்பன் செய்ய இரண்டு வழிகளை பார்த்தோம். இதோ இன்னொரு வழி. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பவர் பட்டனை இரண்டு முறை மிகக்குறுகிய இடைவெளியில் அழுத்தினால் போதும், உங்கள் ஸ்மார்ட்போன் அன்லாக்கில் இருந்தாலும் கேமிரா ஓப்பன் ஆகி, நீங்கள் படமெடுக்க தயாராகிவிடும். இந்த வசதி உங்களுக்கு தேவை என்றால் Settings>Feature> செய்து பவர் பட்டனை இரண்டு முறை அழுத்த வேண்டும்

பிளாஷ் லைட்டை உடனே ஆன் செய்ய வேண்டுமா?

பிளாஷ் லைட்டை உடனே ஆன் செய்ய வேண்டுமா?

திடீரென கரண்ட் கட் ஆகிவிட்டால் உங்களுக்கு உடனடியாக உதவுவது ஸ்மார்ட்போனில் உள்ள பிளாஷ் லைட் தான். இதை நீங்கள் உடனடியாக செய்ய வேண்டும் என்றால் ஹோம் பட்டனை சிறிது நேரம் தொடர்ந்து அழுத்துங்கள். உடனே பிளாஷ் லைட் ஒளிர தோன்றும்

ஸ்மார்ட்போன் லைட்டை ஒளிர செய்ய இதோ இன்னொரு வழி

ஸ்மார்ட்போன் லைட்டை ஒளிர செய்ய இதோ இன்னொரு வழி

மிக விரைவாக உங்கள் ஸ்மார்ட்போனின் லைட்டை ஒளிர செய்ய வேண்டும் என்றால் உங்கள் ஸ்மார்ட்போன் செட்டிங் சென்று Knock to Light என்ற ஆப்சனுக்கு நேராக டர்ன் ஆன் பட்டனை அழுத்துங்கள். பின்னர் உங்கள் ஸ்மார்ட்போன் ஸ்க்ரீனை இரண்டு தடவை டேப் செய்தால் போதும்,. பளீரென லைட் எரியும்

 வால்யூமை உடனடியாக குறைப்பது எப்படி?

வால்யூமை உடனடியாக குறைப்பது எப்படி?

ஒருசில முக்கிய இடங்களுக்கு செல்லும்போது ஸ்மார்ட்போனை சைலண்ட் மோட்-ல் வைக்க சில சமயம் மறந்து விடுவோம். இதுபோன்ற நேரங்களில் வால்யூம் குறைவான செட்டிங் இருப்பது கைகொடுக்கும். Settings>Feature>Decrease tone volume சென்று அதை டர்ன் ஆன் செய்துவிட்டால் உங்கள் ரிங் டோன் வால்யூம் தானாக குறைந்துவிடும்.

Best Mobiles in India

English summary
Activate these shortcuts on the Lenovo K6 Power for better user experience.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X