ரிலையன்ஸ் லைஃப் எப்1எஸ் பிரத்தியேகமாக ரூ.10,999/-க்கு.!
ரிலையன்ஸ் லைஃப் எப்1எஸ் அக்கருவி ஏஜியோ (AJIO.com) வலைத்தளத்தில் பிரத்தியேகமாக கிடைக்கின்றன, மற்றும் அந்த ஸ்மார்ட்போன் சார்ந்த குறிப்புகள் இங்கே.
ரிலையன்ஸ் லைஃப் ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆனது ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகளை உள்ளடக்கிய அதன் புதிய லைஃப் எப்1எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. லைஃப் எப்1எஸ் கருவியானது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 'ஃபேஷன் இ- காமர்ஸ் போர்டல் ஆன ஏஜியோ.காமில் (AJIO.com) பிரத்தியேகமாக கிடைக்கிறது.
இக்கருவியின் அசல் விலை ரூ.20,099/- ஆகும், இப்போது 50% விலைக்குறைப்பு நிகழ்த்தப்பட்டு ரூ.10,099/-க்கு விற்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மேலும் ஒரு பிரத்யேக வாய்ப்பை நிறுவனம் வழங்குகிறது அதாவது இக்கருவியை ஜியோமணி ஆப் மூலம் பதிவு செய்தல் ரூ.500/- கேஷ்பேக் சலுகை பெறலாம்.

மெமரி, செயலி
அம்சங்களை பொருத்தமட்டில், லைஃப் எப்1எஸ் ஆனது 423 பிபிஐ அடர்த்தி கொண்ட 5.2 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே (1080 தீர்மானம்), ஒரு வளைந்த கார்னிங் கொரில்லா கிளாஸ், 1.8ஜிகாஹெர்ட்ஸ், 3ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு, 32 ஜிபி உள்ளக சேமிப்பு, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 652, இரண்டாம் ஜென் 64 பிட் அக்டாகோர் செயலி ஆகியவைகளை கொண்டுள்ளது.

கேமிரா
கேமிரா துறையை பொருத்தமட்டில், பல விருப்ப தேர்வுகள், குறைந்த ஒளி புகைப்படம் முறை பிடிஏஎப், இரட்டை டோன் ஃபிளாஷ் மற்றும் வைட் அப்பெர்ஷர் கொண்ட ஒரு 16எம்பி பின்புற கேமிரா, 4கே வீடியோ பதிவு திறன், ஃப்ளாஷ் உடன் கூட குறைந்த ஒளி நிலைமைகளை கையாளும் நல்ல செல்ஃபிகளுக்கான 5எம்பி செல்பீ கேமிரா ஆகியவைகளை கொண்டுள்ளது.

பேட்டரி
உடன் இக்கருவி எல்டிஇ+, 3000எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி, யூஎஸ்பி டைப்-சி, ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ, லோக்கேஷன், டூடுல், படங்கள் போன்றவை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் உறுதியான கம்யூனிகேஷன் சர்வீசஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது.

இணைப்பு வசதி, சென்சார்
இணைப்பு வசதிகளை பொருத்தவரை ப்ளூடூத் 4.1, வைஃபை 802.11 பி/ஜி/என், மைக்ரோ யூஎஸ்பி 2.0, ஜிபிஎஸ் / எஜிபிஎஸ், மற்றும் யூஎஸ்பி ஓடிஜி ஆதரவு ஆகியவைகளை வழங்குகிறது. உடன் (சென்சார்கள்) உணரிகள் வசதிகளில், ஜி சென்சார், பி சென்சார், ஆம்பியண்ட் சென்சார், கைரோ, ஆக்சலேரோமீட்டர்,மற்றும் மேக்னட்டிக் ஆகிய சென்சார்களை வழங்குகிறது, உடன் இக்கருவி மைக்ரோஎஸ்டி உடனான ஹைபிரிட் நானோ சிம் ஸ்லாட் ஒன்றும் கொண்டுள்ளது.

மேலும் படிக்க
ஜியோ 4ஜி வாய்ஸ் வேலை செய்யவில்லையா..? இதோ எளிய தீர்வுகள்.!


Click it and Unblock the Notifications








