ஐபோன் அளவில் கேலக்ஸி எஸ்9 & எஸ்9+ உடன் வெளியாகும் கேலக்ஸி எஸ்9 மினி.!

கூறப்படும்அ 4 இன்ச் கருவியானது கேலக்ஸி எஸ்9 மினி ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்பது எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிறது.

|

அடுத்த தலைமுறை சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வெளியாகும் எதிர்பார்க்கப்படும் நிலைப்பாட்டில், சாம்சங் நிறுவனம் அதன் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய சர்ப்ரைஸ் ஒன்றை தயார்ஒ செய்யறகு வரும் விடயம் வெளியாகியுள்ளது.

ஐபோன் அளவில் கேலக்ஸி எஸ்9 & எஸ்9+ உடன் வெளியாகும் கேலக்ஸி எஸ்9 மினி.!

அதாவது, சாம்சங் நிறுவனம் 4 இன்ச் அளவிலான டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன் ஒன்றையும் சேர்த்தே சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஸ்மார்ட்போன்களை வெளியிடவுள்ளது. கூறப்படும் 4 இன்ச் கருவியானது கேலக்ஸி எஸ்9 மினி ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்பது எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிறது.

5 அங்குல திரையை விட அளவில் சிறியதாக இருக்கலாம்.!

5 அங்குல திரையை விட அளவில் சிறியதாக இருக்கலாம்.!

கேலக்ஸி எஸ்9 மினி ஸ்மார்ட்போனின் வன்பொருள் அம்சங்கள் பற்றிய எந்த விவரங்களையும் தற்போது கணிக்கமுடியாத அளவிற்கு இருப்பினும், தொலைபேசி வட்டமான அல்லது வளைந்த விளிம்புகளுடன் 5 அங்குல திரையை விட அளவில் சிறியதாக இருக்கலாம் என்பது உறுதி.!

தக்கவைத்துக்கொள்ளும்.!

தக்கவைத்துக்கொள்ளும்.!

சாம்சங் கேலக்ஸி எஸ்9 மினி ஸ்மார்ட்போனில் எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்பிளே இடம்பெறாவிட்டாலும் கூட ஒரு அசாதாரணமான 18.5: 9 என்ற திரை விகிதத்தை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். இந்த மினி ஸ்மார்ட்போன் தவிர்த்து, அடுத்த ஆண்டு வெளியாகும் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள்கே தற்போதைய கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8+ கருவிகளின் இன்பினிட்டி டிஸ்பிளே மற்றும் திரை அளவை) தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேடிக்கையான போட்டி.!

வேடிக்கையான போட்டி.!

இந்த காரணத்தினால் தான் சாம்சங் நிறுவனம், சிறிய அளவிலான மொபைல்களை விரும்பும் மக்களுக்காக ஒரு மினி பதிப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கூறப்படும் மினி கேலக்ஸி எஸ்9 ஆனது ஐபோன்களின் அளவில் வெளியாகும் மறுகையில், 2018-ஆம் ஆண்டில் வெளியாகும் ஐபோன்கள், சாம்சங் கருவிகளை போன்ற 6 இன்ச் அளவில் வெளியாகலாம் என்ற தகவல் நேற்று வெளியானது. இதுவொரு வேடிக்கையான போட்டியாக காணப்படுகிறது.

நிச்சயமாக கூற முடியாது.!

நிச்சயமாக கூற முடியாது.!

திரை அளவுகளில் ஒற்றுப்போனாலும், கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஆனது அதன் முந்தைய கருவிகளுடன் வன்பொருள் துறையடன் ஒற்றுப்போக அதிக வாய்ப்பில்லை. ஆக, நிச்சயமாக மினி பதிப்பு ஒன்று வெளியாகுமென கூற முடியாது. கடந்த காலங்களில் கூட சாம்சங் அதன் பிரதான தொலைபேசிகளின் மினி பதிப்பு அறிமுகப்படுத்தலாம் என்ற வதந்திகள் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி எஸ்8 மினி பதிப்பு.!

கேலக்ஸி எஸ்8 மினி பதிப்பு.!

இதேபோன்றதொரு மினி பதிப்பு கேலக்ஸி எஸ்8 உடன் இணைந்து வெளியாகும் என்று வதந்திகள் வெளியாகின. அவ்வளவு ஏன்.? முன்பு கேவெளியான கேலக்ஸி எஸ்7 உடன் இணைந்தும் ஒரு மினி பதிப்பு வெளியாகுமென வதந்திகள் தெரிவித்தன. ஆக இந்த குறிப்பிட்ட தகவலை, உப்பின் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.

Best Mobiles in India

English summary
Samsung reportedly working on a 4-inch Galaxy S9 Mini, to launch alongside Galaxy S9, S9 plus. Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X