ஐபோன் எக்ஸ் வடிவமைப்பில், அதேசமயம் மலிவான விலைக்கு 3 ஐபோன்கள்.!
6.1 இன்ச், 6.5 இன்ச் மற்றும் 5.8 இன்ச் டிஸ்பிளே.
கேஜிஐ (KGI) ஆய்வாளர் ஆன மிங்-சி கோவ் கணிப்பின் பிடி சுமார் 22 மில்லியன் ஐபோன் எக்ஸ் பதிப்புகளை, ஆப்பிள் நிறுவனம் விற்க முடிவு செய்துள்ளது. அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் அடுத்த ஆண்டு மேலும் பல ஐபோன் எக்ஸ் சாதனங்கள் வெளியாகும் என்ற தகவலின் மீதும் மிங்-சி கோவ் வெளிச்சம் பாய்ச்சியுள்ளார்.
அவர் கூற்றின்படி, ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அதன் அடுத்த ஆண்டு ஐபோன்கள் சார்ந்த பணிகளில் ஈடுபட தொடங்கிவிட்டது. மற்றும் அவற்றின் கணிப்புகள் படி எதிர்வரும் ஆண்டில், ஆப்பிள் நிறுவனம் மொத்தம் மூன்று ஐபோன்களை அறிவிக்கும். அதில் ஒன்று ஐபோன் எக்ஸ் பிளஸ் சாதனமாக இருக்குமென்றும் கூறியுள்ளார்.

சில கூடுதல் விவரங்கள்
கூறப்படும் அனைத்து ஐபோன்களுமே ஓஎல்இடி டிஸ்ப்ளேடன் இணைக்கப்படும் ( தற்போதைய ஐபோன் எக்ஸ்வை போன்று) என்று முன்னர் கூறிய கோவ், தற்போது அட்டவணையுடன் வரப்போகும் கருவிகளின் சில கூடுதல் விவரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

முன்பக்க ட்ரூடெப்த் கேமரா அமைப்பு
கோவ் கூற்றின்படி, 2018-ல் வெளியாகும் ஐபோன்கள், தற்போது வெளியாகியுள்ள ஐபோன் எக்ஸைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறார். அதாவது அவைகள் அனைத்துமே பெஸல்லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பை பெறப்போகின்றன. மேலும் அனைத்து 2018 ஐபோன்களுமே, ஐபோன் எக்ஸ் போன்றே முன்பக்க ட்ரூடெப்த் கேமரா அமைப்பும் கொண்டு வர அதிக வாய்ப்புள்ளது.

மொத்தம் மூன்று ஐபோன்கள்
ஆப்பிள் நிறுவனம் வருகிற 2018-ல் அறிவிக்கும் மூன்று ஐபோன்களில் ஒன்று, 5.8 இன்ச் டிஸ்ப்ளே (458 பிக்ஸல் தீர்மானம்) கொண்டதாக இருக்கும். இரண்டாவது ஐபோன் ஆனது 1125x2436 என்ற தீர்மானம் கொண்ட ஒரு 6.5 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கும் மற்றும் மூன்றாவது ஐபோன் ஆனது 6.1 அங்குல திரை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓஎல்இடி டிஸ்பிளே
முன்னர் வெளியான மேக் வதந்திகளின்படி, 6.1 மற்றும் 6.5 அங்குல ஐபோன்கள் ஓஎல்இடி டிஸ்பிளே கொண்டு வரும்; மறுபுறம், 5.8 அங்குல ஐபோன் ஆனது டிஎப்டி-எல்சிடி டிஸ்பிளே கொண்டு வரும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஓஎல்இடி டிஸ்பிளே ஐபோன்கள் உயர் இறுதியில் சந்தையை இலக்காகவும், டிஎப்டி-எல்சிடி டிஸ்பிளே கருவியானது மிட்ரேஞ்ச் சந்தையை குறிவைத்தும் களமிறங்கலாம்.

மலிவான விலையில் கிடைக்கும்.
மிங்-சி கோவ் வதந்திகளின்படி சென்றால், 6.5 அங்குல ஐபோன் ஆனது தற்காலிகமாக ஐபோன் எக்ஸ் பிளஸ் என்று அழைக்கப்படும். மறுபுறம், 6.1 அங்குல எல்சிடி மாடலானது ஐபோன் எக்ஸ் வடிவமைப்பை கொண்டு வரும், இருப்பினும் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும்.

கண்ணாடி மற்றும் எஃகு வடிவமைப்பு
5.8 அங்குல ஐபோன் அனைத்து கண்ணாடி மற்றும் எஃகு வடிவமைப்பு கொண்டு வரும். இருப்பினும், இந்த ஐபோன் மாடல் டச் ஐடி, டி.டி சென்சிங் மற்றும் இன்னும் சில அம்சங்கள் போன்ற அம்சங்களை உள்ளடக்குவதில்லை என்றும் கோவ் வியப்புடன் குறிப்பிடுகிறார்.

அதாவது சுமார் ரூ.50,000/- என்ற புள்ளி.!
விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், 6.1 அங்குல ஐபோன் ஆனது 649 மற்றும் 749 டாலருக்கும் இடையில் ஒரு புள்ளியை எட்டலாம் என்று தோராயமாகக் கூறிவிட்டார். அதாவது சுமார் ரூ.50,000/- ஆகும். மற்ற இரண்டு ஐபோன்கள் பற்றிய விலை விவரங்களை அவர் வெளிப்படுத்தவில்லை.


Click it and Unblock the Notifications