சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ரிலீஸ்!

By Super
|
சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ரிலீஸ்!

சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வெற்றிகரமாக வெளியிடப்பட்டுவிட்டது. புயல் கரையை கடந்துவிட்டதா என்ற செய்தியை தெரிந்து கொள்ள மக்கள் எவ்வளவு ஆர்வமாக இருப்பார்களோ, அந்த அளவு ஆர்வமாக வாடிக்கையாளர்கள் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகிவிட்டதா என்று தெரிந்து கொள்ள காத்திருந்தனர்.

இந்த காத்திருப்புக்கு நேற்று பதில் கிடைத்துள்ளது. நேற்று மதியத்திற்கு மேல் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் இந்திய மொபைல் சந்தையில் வெளியிடப்பட்டது. இது சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு சந்தோஷத்தினை ஏற்படுத்தும் செய்தி தான்.

இனி இந்திய மொபைல் மார்கெட்களில் இந்த ஸ்மார்ட்போனை பெறலாம். இதில் உள்ள 4.8 இஞ்ச் சூப்பர் அமோலெட் திரை வசதியின் மூலம் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும்.

8 மெகா பிக்ஸல் கேமரா மட்டும் அல்லாமல் 1.9 மெகா பிக்ஸல் கொண்ட முகப்பு கேமராவும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. அனைவரும் எதிர்பார்க்கும் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.

16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்று மூன்று மாடல்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 2,100 எம்ஏஎச் பேட்டரி வசதியினை கொண்டது.

கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் ரூ.42,500 விலை கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் 43,180 விலையில் கிடைக்கும் என்று அதிகார பூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X