ஐபோன் எக்ஸ்-ஐ குறைசொல்லும் சாம்சங் வாசிகளுக்கு ஷாக் கொடுத்த கீக்பெஞ்ச்.!

|

சமீபத்தில் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் கருவி மீதான ஏகப்பட்ட புகார்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஆனால் உண்மையில் ஐபோன் எக்ஸ் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு தைரியமான நடவடிக்கை ஆகும். ஏன்.?

ஐபோன் எக்ஸ்-ஐ குறைசொல்லும் சாம்சங் வாசிகளுக்கு ஷாக் கொடுத்த கீக்பெஞ்ச்

2018-ஆம் ஆண்டை குறிவைக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 போன்ற அடுத்த தலைமுறை கேலக்ஸி கருவிகளால் கூட ஐபோன் எக்ஸ் கருவிக்கு ஈடாக முடியாது. ஐபோன் எக்ஸ் அம்சங்களின்முன் தாக்குபிடிக்காது என்றால் கூறினால் நம்புவீர்களா.?

மொத்தம் மூன்று மாடல்களில் சாம்சங் கேலக்ஸி.!

மொத்தம் மூன்று மாடல்களில் சாம்சங் கேலக்ஸி.!

அதுவும் 2018-ஆம் ஆண்டில் பாதியில் மொத்தம் மூன்று மாடல்களில் சாம்சங் கேலக்ஸி வெளியாக தயாராக உள்ளது, அந்த மூன்று கருவிகளும் கூட ஐபோன் எக்ஸ் கருவியை ஒன்றும் செய்திட முடியாது என்று கூறினால் நம்புவீர்களா.? நம்பித்தான் ஆக வேண்டும்.

இரண்டாவது தலைமுறை 10என்எம் எக்ஸிநோஸ் சிப்செட்.!

இரண்டாவது தலைமுறை 10என்எம் எக்ஸிநோஸ் சிப்செட்.!

தொழில்நுட்ப உலகில் கடந்த சில மாதங்களிலேயே நிறைய கேலக்ஸி எஸ்9 வதந்திகள் வெளியானது. அவைகள் அனைத்துமே அடுத்ததாக வெளிவரும் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 மற்றும் சாம்சங் நிறுவனத்தின் சொந்தமான இரண்டாவது தலைமுறை 10என்எம் எக்ஸிநோஸ் சிப்செட் ஆகிய அம்சங்கள் பெரும்பாலான நுகர்வோர்களின் மத்தியில் உற்சாகத்தை தூண்டியது.

அதனுடன் போட்டிபோட இது போதாது.!

அதனுடன் போட்டிபோட இது போதாது.!

கேலக்ஸி எஸ்9 அறிவிக்கப்படும் போது, உலகின் மிக சக்தி வாய்ந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக அது இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், ஒரு புதிய கசிவின்படி சாம்சங் நிறுவனத்தின் முயற்சிகள் இன்னும் ஆப்பிள் ஐபோன் எக்ஸ் திறமையை எட்டவில்லை, அதனுடன் போட்டிபோட இது போதாது என்று பரிந்துரைக்கிறது.

இந்த ஒப்பீட்டின் அடித்தளம் என்ன.?

இந்த ஒப்பீட்டின் அடித்தளம் என்ன.?

ஐபோன் எக்ஸ் மற்றும் வெளியாகாத கேலக்ஸி எஸ்9 ஆகிய கருவிகளுக்கு இடையிலான இந்த ஒப்பீடு, மாடல் எண் எஸ்எம்-ஜி960எப் என்ற பெயரின் கேள் கீக்பெஞ்சில் காணப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போனின் அம்சங்களின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டதென்பது குறிப்பிடத்தக்கது.

புதிய எக்சிஸிநோஸ் 9 தொடர் 9810 செயலி

புதிய எக்சிஸிநோஸ் 9 தொடர் 9810 செயலி

கீக்பெஞ்ச் வலைதளத்தில், ​​மாதிரி எண் எஸ்எம்-ஜி960எப் என்ற பெயரின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஆனது சாம்சங் நிருவாண்டின் புதிய எக்சிஸிநோஸ் 9 தொடர் 9810 செயலி கொண்டு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

மேலும் இந்த சிப்செட் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் உலகளாவிய பதிப்பிலும் இணைக்கப்பட்டிருக்கும் என்றும் நம்பப்படுகிறது. மேலும் கீக்பெஞ்ச் பட்டியலானது, எஸ்எம்-ஜி960எப் கைபேசியானது ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ உடன்இணைந்த 4ஜிபி ரேம், ஆக்டா-கோர் எக்ஸிநோஸ் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பதை வெளிப்படையாக அறிவிக்கிறது.

பல மைய சோதனை மதிப்பெண்கள்

பல மைய சோதனை மதிப்பெண்கள்

மேலும் வெளியான விரவாரங்களின் படி, உலகளாவிய கேலக்ஸி எஸ்9 மாடல் ஆனது ஒற்றை-மைய கீக்பெஞ்ச் சோதனையில் 2680 மதிப்பெண்களும், பல மைய சோதனையில் 7787 மதிப்பெண்களும் எடுத்துதுள்ளது. இந்த மதிப்பெண்கள், எதிர்வரும் கருவியானது மிகவும் சக்தி வாய்ந்த ஆண்ட்ராய்டு சாதனங்களில் ஒன்றாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.

இன்னும் சொல்லப்போனால்.!

இன்னும் சொல்லப்போனால்.!

என்றாலும் கூட அது இன்னும் ஐபோன் எக்ஸ் அருகில் எங்கும் வர முடியாது என்பது வெளிப்படை. ஏனெனில் ஐபோன் எக்ஸ் சாதனத்தின் ஒற்றை மைய சோதனையின் மதிப்பெண் 4198 என்பது, பல மைய சோதனைக்கான மதிப்பெண் 10056 என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக ஐபோன் எக்ஸ் ஆனது மிக எளிதாக கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனை பின்னுக்கு தள்ளுகிறது. இன்னும் சொல்லப்போனால், ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் கருவிகள் கூட வரப்போகும் சாம்சங் தலைமை ஸ்மார்ட்போனை விட அதிக பலமான முடிவுகளை கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S9 won't be a match for Apple iPhone X if these benchmarks are accurate. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X