8 ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி 8 ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்

By Siva
|

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 பேட்டரி காரணமாக தோல்வி அடைந்துவிட்டாலும் மாற்று ஸ்மார்ட்போன்கள் கொடுப்பதன் மூலமும், திரும்ப பெறுவதன் மூலமும் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

8 ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி 8 ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்

அதுமட்டுமின்றி இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளுக்கு எவ்வித நெகட்டிவ் கருத்துக்களும் ஏற்படவில்லை. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் முதல்முறையாக கேலக்ஸி 8 மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. 8 GB LPDDR4 பவரில் ஒரு ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளது.

வாட்ஸ்ஆப் வீடியோ கால் செய்வது எப்படி?

அல்ட்ரா HD மற்றும் பெரிய ஸ்க்ரீனில் வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போன் குறித்த சிறப்பு அம்சங்களை தற்போது பார்ப்போம்ன்

8 ஜிபி ரேமில் வரும் முதல் ஸ்மார்ட்போன்

8 ஜிபி ரேமில் வரும் முதல் ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி 8 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேமில் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறுகிறது. 8 ஜிபி ரேம் ஸ்மார்ட்போனை உபயோகித்து புதிய அனுபவம் பெற அனைவரும் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேலிகளுக்கு மத்தியில் கெத்து காட்டுமா கேலக்ஸி கிராண்ட் ப்ரைம் +.!?கேலிகளுக்கு மத்தியில் கெத்து காட்டுமா கேலக்ஸி கிராண்ட் ப்ரைம் +.!?

இரண்டு விதங்களில் வெளியாகும் சாம்சங் கேலக்ஸி 8 ஸ்மார்ட்போன்

இரண்டு விதங்களில் வெளியாகும் சாம்சங் கேலக்ஸி 8 ஸ்மார்ட்போன்

விரைவில் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி 8 ஸ்மார்ட்போன் இரண்டு விதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று வழக்கமாக வெளிவரும் 4 ஜிபி அல்லது 6 ஜிபி வடிவத்திலும் இன்னொன்று சிறப்பு அம்சங்களுடன் கூடிய 8 ஜிபி ரேம் அம்சத்திலும் வெளிவரவுள்ளது.

8 GB LPDDR4 என்ற புதிய அம்சத்தில் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி 8 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை தருவதோடு உபயோகப்படுத்த ஸ்மூத்தாக இருக்கும். 4K HD வீடியோக்களை பிளே செய்வதில் எவ்வித பிரச்சனையும் இருக்காது. 4K வீடியோ சப்போர்ட் செய்யும் வகையில் இந்த ஸ்மார்ட்போனில் 2160 x 3840 பிக்சல் ரெசலூசன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி 8 ஸ்மார்ட்போனில் முக்கியமன ஸ்பெஷல் என்ன?

சாம்சங் கேலக்ஸி 8 ஸ்மார்ட்போனில் முக்கியமன ஸ்பெஷல் என்ன?

சாம்சங் கேலக்ஸி 8 ஸ்மார்ட்போனில் உள்ள முக்கிய சிறப்பு அம்சங்கள் என்னவெனில் புதிய 16 Gb LPDDR4 மெமரி மற்றும் அட்வான்ஸ் 10- நானோ மீட்டர் பிராசஸ் டெக்னாலஜியை கொண்டது. மேலும் புதிய 8GB LPDDR4 ரேம் வினாடிக்கு

4,266 மெகா பைட்ஸ் வேகத்தில் இயங்கும். இது டெக்ஸ்க்டாப் கம்ப்யூட்டரின் வேகத்தை விட இருமடங்கு வேகம் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி 8 ஸ்மார்ட்போன் குறித்து என்ன சொல்கிறது?

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி 8 ஸ்மார்ட்போன் குறித்து என்ன சொல்கிறது?

சாம்சங் நிறுவனத்தின் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் தலவர் ஜோ சன் சூயி இதுகுறித்து கூறும்போது, 'இந்த ஸ்மார்ட்போனில் அமைக்கப்பட்டுள்ள 8GB LPDDR4 ரேம் அடுத்த தலைமுறையினர்களுக்கு கிடைத்த வரம். உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களை இந்த ஸ்மார்ட்போன் நிச்சயம் கவரும். அட்வான்ஸ் மெமரி, 4K HD வீடியோ மற்றும் விஷுவல டிரீட் தரும் வகையில் சாம்சங் நிறுவனம் தரத்தை அதிகரித்து கொண்டே வரும் என்பது நிச்சயம்

சாம்சங் கேலக்ஸி 8 ஸ்மார்ட்போன் சக்தி மிகப்பெரியது

சாம்சங் கேலக்ஸி 8 ஸ்மார்ட்போன் சக்தி மிகப்பெரியது

8GB LPDDR4 ரேம் சக்தி கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி 8 ஸ்மார்ட்போன் இதுவரை வெளியான ஸ்மார்ட்போன்களில் மிக அதிக பவர் உள்ள போன் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த பவர் சர்க்யூட்டில் டிசைன் செய்யப்பட்டுள்ள இந்த போன் 10nm பிராசஸ் டெக்னாலஜியை கொண்டது. குறைந்த மின்சக்தியை எடுத்து கொண்டு இருமடங்கு சக்தியை வெளிப்படுத்தும் இந்த புதிய டெக்னாலஜி நிச்சயம் அனைத்து தரப்பினர்களை கவரும் என்பதே அனைவரின் நம்பிக்கையாக உள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Samsung Galaxy S8 might be the first smartphone from the company to utilize the latest 8GB LPDDR4 DRAM Package.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X