நண்பா நண்பிஸ்.. சூப்பர் சான்ஸ் விட்றாதீங்க.. 4 Samsung 5ஜி போன்கள் மீது ரூ.9000 வரை தள்ளுபடி.. எந்த மாடல்கள்?
சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் எம் சீரிஸ் மற்றும் எப் சீரீஸின் கீழ் உள்ள 7 ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்திய வேகத்தில்.. எஸ் சீரீஸ் மற்றும் ஏ சீரீஸின் கீழ் வாங்க கிடைக்கும் 4 ஸ்மார்ட்போன்களின் மீது திடீர் தள்ளுபடியை அறிவித்துள்ளது.
டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ், சாம்சங் கேலக்ஸி S26 சீரிஸ் மற்றும் கேலக்ஸி ஏ37, ஏ57 மாடல்களுக்கான தள்ளுபடி பட்டியலை பகிர்ந்துள்ளார். இந்த சலுகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்றும், மே 27 ஆம் தேதி வரை மட்டுமே நீடிக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், அமேசான் இந்தியா (Amazon India), குரோமா மற்றும் பிற சில்லறை விற்பனையாளர்களிடம் இந்த தள்ளுபடிகளை சரிபார்த்துள்ளதாக 91மொபைல்ஸ் வலைத்தளம் அறிக்கை வெளியிட்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. சரி என்னென்ன மாடல்கள் மீது எவ்வளவு தள்ளுபடி? இதோ லிஸ்ட்:
1. சாம்சங் கேலக்ஸி எஸ்26 5ஜி (12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்) - ரூ.8,000 தள்ளுபடிக்கு பின்ரர் ரூ.79,999
2. சாம்சங் கேலக்ஸி எஸ்26 5ஜி (12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ்) - ரூ.8,000 தள்ளுபடிக்கு பின்ரர் ரூ.99,999
3. கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா 5ஜி (12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்) - ரூ.9,000 தள்ளுபடிக்கு பின்ரர் ரூ.1,30,999
4. கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா 5ஜி (12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ்) - ரூ.9,000 தள்ளுபடிக்கு பின்ரர் ரூ.1,50,999
5. கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா 5ஜி (6ஜிபி ரேம் + 1டிபி ஸ்டோரேஜ்) - ரூ.9,000 தள்ளுபடிக்கு பின்ரர் ரூ.1,80,999
6. கேலக்ஸி ஏ37 5ஜி (8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்) - ரூ.5,000 தள்ளுபடிக்கு பின்னர் ரூ.36,999
7. கேலக்ஸி ஏ37 5ஜி (8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்) - ரூ.5,000 தள்ளுபடிக்கு பின்னர் ரூ.42,999
8. கேலக்ஸி ஏ37 5ஜி (12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்) - ரூ.5,000 தள்ளுபடிக்கு பின்னர் ரூ.47,999
7. சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி (8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்) - ரூ.7,000 தள்ளுபடிக்கு பின்னர் ரூ.49,999
8. சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி (12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்) - ரூ.7,000 தள்ளுபடிக்கு பின்னர் ரூ.55,999
இங்கே கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்.. மேற்கண்ட மாடல்கள் எல்லாம் தள்ளுபடியை பெறும் பழைய மாடல்கள் அல்ல. இவைகள் சாம்சங்கின் மிக சமீபத்திய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆகும் என்பதால், ஒரு வழக்கமான விற்பனை சுழற்சியின் இறுதி விற்பனையை விட இந்த தள்ளுபடி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
எந்தெந்த சாம்சங் கேலக்ஸி எம் சீரீஸ் மற்றும் எப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன?
1. சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி - ரூ.16,499 இல் இருந்து ரூ.21,999
2. சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி - ரூ.16,499 இல் இருந்து ரூ.21,999
3. சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி - ரூ.12,499 இல் இருந்து ரூ.16,999
4. சாம்சங்கேலக்ஸி எம்17இ - ரூ.13,999 இல் இருந்து ரூ.15,499
5. சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி - ரூ.13,999 இல் இருந்து ரூ.15,499
6. சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி - ரூ.11,499 இல் இருந்து ரூ.12,499
7. சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி - ரூ.9,499 இல் இருந்து ரூ.12,499


Click it and Unblock the Notifications