மச்சான்.. Samsung சாய்ச்சு புட்டான் மச்சான்.. ரூ.1000 - ரூ.5,500 வரை விலை ஏறிய 7 Galaxy போன்கள்.. இதோ லிஸ்ட்!
மே 1 ஆம் தேதி முதல் ஒன்பிளஸ், நத்திங், ரியல்மி மற்றும் ரெட்மி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயர்த்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது சாம்சங் (Samsung) நிறுவனம் ஆனது ஒரே நேரத்தில் மொத்தம் 7 கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின் விலைகளை ரூ.1000 முதல் ரூ.5,500 வரை உயர்த்தி.. சாம்சங் ரசிகர்களை மற்றும் வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விலை உயர்வுகள் சாம்சங் நிறுவனத்தின் எம் சீரீஸ் (M Series) மற்றும் எப் சீரீஸ்களில் (F Series) உள்ள பழைய மாடல்களில் செய்யப்பட்டு உள்ளன. அப்படியாக எந்தெந்த சாம்சங் கேலக்ஸி எம் மற்றும் எப் சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலைகள் எவ்வளவு உயர்த்தப்பட்டு உள்ளது? இதோ லிஸ்ட்:

1. சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி (Samsung Galaxy M36 5G) ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,499 இல் இருந்து ரூ.21,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ 5,500 விலை அதிகரிப்பை பெற்றுள்ளது.
2. சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி (Samsung Galaxy F36 5G) ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,499 இல் இருந்து ரூ.21,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.5,500 விலை அதிகரிப்பை பெற்றுள்ளது.
3. சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி (Samsung Galaxy M17 5G) ரூ.12,499 இல் இருந்து ரூ.16,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.4,500 விலை அதிகரிப்பை பெற்றுள்ளது.
4. சாம்சங்கேலக்ஸி எம்17இ (Samsung Galaxy M17e) ரூ.13,999 இல் இருந்து ரூ.15,499 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.1,500 விலை அதிகரிப்பை பெற்றுள்ளது.
5. சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி (Samsung Galaxy F70e 5G) ரூ.13,999 இல் இருந்து ரூ.15,499 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.1,500 விலை அதிகரிப்பை பெற்றுள்ளது.
6. சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி (Samsung Galaxy M06 5G) ரூ.11,499 இல் இருந்து ரூ.12,499 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.1,000 விலை அதிகரிப்பை பெற்றுள்ளது.
7. சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி (Samsung Galaxy F06 5G) ரூ.9,499 இல் இருந்து ரூ.12,499 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.3,000 விலை அதிகரிப்பை பெற்றுள்ளது. இவைகளில் சாம்சங் கேலக்ஸி எம்36 மற்றும் எப்36 ஆகிய மாடல்கள்மிகவும் கவனத்தை ஈர்க்கும் கதையை சொல்கின்றன. இரண்டும் ரூ.16,499 (ரூ.1,000 வங்கி தள்ளுபடி உட்பட) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டன, இப்போது அவற்றின் ஆரம்ப விலை ரூ.21,999 ஆகும்.
இது எந்தவித வன்பொருள் மாற்றங்களும் இல்லாமல் ரூ.5,500 அல்லது 33 சதவிகித விலை உயர்வாகும். கேலக்ஸி எம்06 மற்றும் எப்06 மாடல்களின் விலை ரூ.12,000 முதல் ரூ.13,000 வரை உயர்வது, ஒவ்வொரு பிராண்டிலும் உருவாகி வரும் ஒரு போக்கை தொடர்கிறது. முன்பு ரூ.10,000 க்கும் குறைவான விலையில் இருந்த பட்ஜெட் விலை 5ஜி போன்கள், இப்போது அந்த வரம்பை தாண்டிவிட்டன.
முன்னரே குறிப்பிட்டபடி மே 1ஆம் தேதி முதல் ரியல்மி (Realme) மற்றும் ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனங்களை இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்க தூண்டிய அதே மெமரி மற்றும் சிப்செட் விலை அழுத்தங்களே சாம்சங் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கும் காரணம் என்பதில் சந்தேகமே வேண்டாம். மே 1 ஆம் தேதி முதல் எந்தெந்த ஒன்பிளஸ், ரியல்மி ஸ்மார்ட்போன்கள் எவ்வளவு விலை உயர்த்தப்பட்டன என்கிற விரிவான கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும். https://tamil.gizbot.com/mobile/many-oneplus-nothing-redmi-realme-smartphones-price-increased-in-india-check-old-and-new-pricing-068523.html


Click it and Unblock the Notifications