இந்தியாவில் தாமதமாகும் சாம்சங் கேலக்சி நோட் 7-க்கு பதில் வேறு என்ன ஸ்மார்ட்போன் வாங்கலாம்?

By Siva
|

உலக அளவில் ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் சாம்சங் நிறுவனத்திற்கு கடந்த சில மாதமாக போதாத காலம் போல.

இந்தியாவில் தாமதமாகும் சாம்சங் கேலக்சி நோட் 7-க்கு பதில் வேறு என்ன ஸ்ம

சமீபத்தில் வெளியான சாம்சங் கேலக்சி நோட் 7 பல நாடுகளில் திடீர் திடீரென வெடித்ததாக வந்த புகாரினால் சுமார் 2.5 சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை சாம்சங் நிறுவனம் திரும்ப பெற்றது. தற்போது அமெரிக்காவில் பாதுகாப்பான சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தாலும், இந்தியாவில் இந்த போன் வெளியாக தாமதாகும் என்று கூறப்படுகிறது.

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் சலுகைகள்!

இந்த ஸ்மார்ட்போன் வரும் தீபாவளி கழித்தோ அல்லது அடுத்த வருட ஆரம்பத்திலோ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதுவரை இந்தியர்கள் அதே ரேஞ்சில் உள்ள எந்த வகை ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்ற நமது பரிந்துரையை கொஞ்சம் படியுங்கள்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ்

ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ்

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவின் முன்னணி இகாமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் விரைவில் நீங்கள் இந்த போனை பிளிப்கார்ட் மூலமே பெற்றுக் கொள்ளலாம். இந்த தகவல் இந்தியர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.

சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த பலர் ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ் போனை வாங்க ப்ளிப்கார்டில் முன்பதிவு செய்து கொண்டிருப்பதாகவும், எனவே இந்த போன் மிகபெரிய வரவேற்பை இந்தியாவில் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ் போனில் அமைந்துள்ள டூயல் பின்கேமிரா, 3D டச் டிஸ்ப்ளே உள்பட ஒருசில நல்ல விஷயங்கள் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பிக்சல் XL

கூகுள் பிக்சல் XL

கூகுள் நிறுவனம் ஏற்கனவே நெக்சஸ் ஸ்மார்ட்போன்களையும் HTC ஸ்மார்ட்போன்களையும் வெளியிட்டு வாடிக்கையாளர்களின் நல் ஆதரவை பெற்றுள்ள நிலையில் அடுத்த கட்டமாக கூகுள் பிக்சல் XL மற்றும் பிக்சல் ஆகிய வகை ஸ்மார்போன்களை அமெரிக்காவில் வரும் அக்டோபர் 4ஆம் தேதியும், இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதியும் வெளியிட உள்ளது.

மேலும் கூகுள் பிக்சல் XL ஸ்மார்ட்போன்கள் இதற்கு முன்னர் கூகுள் வெளியிட்ட ஸ்மார்ட்போன்களை விட சக்தி அதிகம் உள்ளது என்றும், இதில் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர், 4 ஜிபி ரேம் உள்பட பல சிறப்பு அம்சங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போன், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு கலக்கு கலக்கும் என்று கூறப்படுகிறது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மோட்டோரோலா மோட்டோ Z ஃபோர்ஸ்

மோட்டோரோலா மோட்டோ Z ஃபோர்ஸ்

கூகுள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பு ஸ்மார்ட்போனை வெளியிடும் தேதியை அறிவித்தவுடன் அதன் போட்டி நிறுவனங்களில் ஒன்றான மோட்டோரோலா நிறுவனமும் மோட்டோரோலா மோட்டோ Z ஃபோர்ஸ் என்ற புதிய ஸ்மார்ட்போனை வெகுவிரைவில் வெளியிட முடிவு செய்துள்ளாது. மோட்டோ Z மற்றும் மோட்டோ Z ஃபோர்ஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் கூகுள் தயாரிப்புகளுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மோட்டோரோலா நிறுவனத்தின் மற்ற மாடல்களுக்கு இந்தியர்கள் பெரும் ஆதரவு கொடுத்துள்ளதால் இந்த புதிய மாடலும் இந்தியர்களின் மனதை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோனி எக்ஸ்பிரீயா XZ

சோனி எக்ஸ்பிரீயா XZ

ஸ்மார்ட்போன் சந்தையில் சோனி நிறுவனத்திற்கு என ஒரு மரியாதை இருந்து வரும் நிலையில் இந்நிறுவனமும் தனது புதிய தயாரிப்பான சோனி எக்ஸ்பிரீயா XZ என்ற ஸ்மார்ட்போனை இவ்வருடம் வெளியிட உள்ளதாக நேற்று அறிவித்துள்ளது. ரூ.49,990 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் காண்போரை காரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் இகாமர்ஸ் நிறுவனத்தின் மூலம் வரும் அக்டோபர் 10 முதல் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 1 முதலே இந்த போனின் முன்பதிவு ஆரம்பமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சோனி ப்ரியர்களே அக்டோபர் 1ஆம் தேதி உங்கள் போனை முன்பதிவு செய்யுங்கள்

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சியாமி மி 5s ப்ளஸ்

சியாமி மி 5s ப்ளஸ்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் வெளியாகியுள்ள சியாமி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் தான் சியாமி மி 5s ப்ளஸ். இந்தியாவில் சரியாக எப்போது இந்த போன் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனினும், வெகுவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சியாமி நிறுவனத்திற்கு என இந்தியாவில் ஒரு ரசிகர் கூட்டமே இருப்பதால் இந்த புதிய மாடல் போனின் வெளியீடை வெகு ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Samsung has been in the news for all the bad in recent times. The South-Korean giant launched the Galaxy Note 7 back in August, which is now two months, however, issued a recall against the smartphone because of nearly 35 users reported the smartphone catching fire.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X