கேலக்ஸி நோட்-2 அறிமுகம்!

By Super
|
கேலக்ஸி நோட்-2 அறிமுகம்!

கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன். இதனால் கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன் மற்றும் ஐபோன்-5 ஸ்மார்ட்போனை பற்றிய சிறிய ஒப்பீட்டினை பார்க்கலாம்.

கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன் 180 கிராம் எடையினையும் மற்றும் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 112 கிராம் எடையினையும் கொண்டதாக இருக்கும். கேலக்ஸி ஸ்மார்ட்போனையும் விட ஐபோன்-5 ஸ்மார்ட்போன் குறைந்த எடை கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும்.

கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன் 5.5 இஞ்ச் சூப்பர் அமோலெட் தொடுதிரையின் மூலம் தெளிவான தகவல்களை வழங்கும். ஏனெனில் இதில் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரையினையும் 1136 X 640 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் கொடுக்கும்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் கொரில்லா கிளாஸ்-2 ப்ரொட்டெக்ஷன் வசதி வழங்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போனில் எக்ஸினோஸ் 4412 குவாட் சிப்செட் மற்றும் ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் ஆப்பிள் ஏ-6 சிப்செட் வசதியினையும் வழங்கும்.

கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் ஐஓஎஸ்-6 இயங்குதளத்தினையும் பெறலாம். கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போனில் எஸ்-பென் மூலம் சிறந்த வசதிகளை பெறலாம் என்றால், ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் புதிய ஐஓஎஸ்-6 இயங்குதளத்தின் மூலம்

200 புதிய தொழில் நுட்ப வசதிகளை பெற முடியும்.

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 8 மெகா பிக்ஸல் மெயின் கேமராவினை பெற முடியும். ஐபோன்-5வில் 1.3 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போனில் 1.9 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் பெறலாம். ஆனால் கேல்கஸி நோட்-2 ஸ்மார்ட்போனில் இருக்கும் என்எஃப்சி தொழில் நுட்பம், ஆப்பிளின் ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் வழங்கப்படவில்லை.

கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன் 3,100 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியினை கொண்டதாக இருக்கும். ஐபோன்-5 ஸ்மார்ட்போன் லித்தியம் அயான் பேட்டரியின் மூலம் 225 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும், 8 மணி நேரம் டாக் டைமினையும் வழங்கும். அதோடு இன்று நமது நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் கேலக்ஸி நோட்-2ஸ்மார்ட்போன் ரூ. 39,990 விலையினை கொண்டது. இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X