Home
Mobile

சிங்கம் களம் இறங்கிடுச்சு.. ரூ.20000 பட்ஜெட்ல புது Samsung 5G போன்.. 5000mAh பேட்டரி, 50MP கேமரா.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் பிளாக்ஷிப் பிரியர்கள் எல்லோரும் அடுத்த கேலக்ஸி அன்பேக்டு ஈவென்ட்டிற்கும் (Next Galaxy Unpacked Event), அந்நிகழ்வில் அறிமுகமாகும் கேலக்ஸி இஸட் ஃபோல்டு 8 (Galaxy Z Fold 8), கேலக்ஸி இஸட் ஃபிளிப் 8 (Galaxy Z Flip 8), புதிய கேலக்ஸி ஃபோல்ட் வைட் (Galaxy Fold Wide) ஆகிய ஸ்மார்ட்போன்களின் மீதும் ஆர்வத்தை செலுத்தி வருகின்றனர். இந்நுகழ்வு ஜூலை 22 நடக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் சர்ப்ரைஸ் ஆக சாம்சங் நிறுவனமானது, மிட்-ரேன்ஞ் பிரியர்களுக்கான 2 புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவைகள் - சாம்சங் கேலக்ஸி எம்47 (Samsung Galaxy M47) மற்றும் கேலக்ஸி எப்70 ப்ரோ (Samsung Galaxy F70 Pro) மாடல்கள் ஆகும்.

சிங்கம் களம் இறங்கிடுச்சு.. ரூ.20000 பட்ஜெட்ல புது Samsung 5G போன்!

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாகவே, அறிவிக்கப்படாத இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் பிஐஎஸ் (BIS) என்கிற இந்திய தர நிர்ணய அமைப்பின் (Bureau of Indian Standards) இணையதளத்தில் வெளிவந்துள்ளன. கூடவே கேலக்ஸி எம்47 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களும் ஆன்லைனில் லீக் ஆகி உள்ளன.

பிஐஎஸ் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்47, கேலக்ஸி எப்70 ப்ரோ: SM-M476B/DS மற்றும் SM-E476B/DS என்கிற மாடல் எண்களுடன், அறிவிக்கப்படாத இரண்டு சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் பிஐஎஸ் இணையதளத்தில் காணப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் அவற்றின் அதிகாரப்பூர்வ பெயர்கள் வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும், முந்தைய கீக்பென்ச் (Geekbench) மற்றும் ஐஎம்இஐ (IMEI) தரவுத்தள பதிவுகள், SM-M476B/DS என்பது கேலக்ஸி எம்47-ஐயும், SM-E476B/DS என்பது கேலக்ஸி எப்70 ப்ரோவையும் குறிப்பதாக தெரிவிக்கின்றன.

மேலும் இந்த மாடல் எண்கள், கேலக்ஸி எம்47 மற்றும் கேலக்ஸி எப்70 ப்ரோ ஆகிய இரண்டுமே டூயல்-சிம் ஆதரவை கொண்டிருப்பதை உணர்த்துகின்றன. இந்த போன்கள் மே 15 அன்று சான்றிதழ்களை பெற்றன. பொதுவாக பிஐஎஸ் தளத்தை கடந்த ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் உடனடி அறிமுகத்தை காண்பது வழக்கம்.

சாம்சங் கேலக்ஸி எம்47 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது என்ன விலைக்கு வரலாம்? எக்ஸ் தளத்தில் டிப்ஸ்டர் சஞ்சு சௌத்ரி (@saaaanjjjuuu) வழியாக வெளியான விவரங்களின்படி, கேலக்ஸி எம்47 ஸ்மார்ட்போன் - இந்திய சந்தையில் ரூ.20,000 முதல் ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்

மேலும் இது சாம்சங் கேலக்ஸி ஏ27 மாடலில் உள்ள அம்சங்களை பகிர்ந்து கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கேலக்ஸி எம்47 ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.7-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் உடன் இயங்கலாம். பேட்டரியை பொறுத்தவரை இது 25W சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5,000mAh பேட்டரியுடன் வெளியாகலாம். கேமராக்களை பொறுத்தவரை, கேலக்ஸி எம்47 மாடலில் 50-மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவற்றை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்காக, 12-மெகாபிக்சல் முன்பக்க கேமரா இருக்கலாம். கடைசியாக சாம்சங் நிறுவனம் இந்த போனுக்கு ஆறு வருட சாஃப்ட்வேர் அப்டேட்களையும் வழங்கக்கூடும். சாம்சங் கேலக்ஸி எம்47 உடன் சேர்ந்து பிஐஎஸ் தளத்தில் காணப்பட்ட சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்த விவரங்கள் இல்லை.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M47 New 5G Phone Price Between Rs 20000 to Rs 25000 Launching soon in India Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X