நான் ரெடிதான் வரவா.. புது Wide Fold உட்பட 3 புது Samsung போன்கள் Launch-க்கு தயார்.. என்ன மாடல்கள்? எப்போது?
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் அடுத்த கேலக்ஸி அன்பேக்டு ஈவென்ட் (Next Galaxy Unpacked Event) எப்போது நடக்கலாம்? அந்த நிகழ்வில், தென்கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், என்னென்ன புதிய கேலக்ஸி தயாரிப்புகளை அறிமுகம் செய்யும்? என்கிற விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகி உள்ளன.
இதுகுறித்து சாம்சங்கிடம் இருந்து அதிகாரப்பூர்வ தேதி குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை, ஆனால் ஒரு புதிய லீக், இந்நிகழ்விற்கான சாத்தியமான தேதியை சுட்டிக்காட்டுகிறது. கூடவே, அந்நிகழ்வில் சாம்சங், அதன் புதிய போல்டபிள் ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து தனது முதல் ஸ்மார்ட் கிளாஸையும் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

லீக் ஆன தேதி: தொழில்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி, சியோல் எகனாமிக் டெய்லி (Seoul Economic Daily) ஆனது, சாம்சங் நிறுவனம் தனது அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை வருகிற ஜூலை 22 ஆம் தேதி அன்று லண்டனில் நடத்தும் என்று தெரிவிக்கிறது.
இந்த புதிய லீக், முன்பு கணிக்கப்பட்ட அட்டவணைகளுடன் ஒத்துபோகிறது. நினைவூட்டும் வண்ணம் சாம்சங் நிறுவனம் தனது முந்தைய கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வுகளை அமெரிக்கா அல்லது தென்கொரியாவில் நடத்தியது. கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 7-இன் வெளியீடு கடந்த ஆண்டு நியூயார்க்கின் புரூக்ளினில் நடைபெற்றது.
என்னென்ன அறிமுகமாகும்? இந்த நிகழ்வின் போது, சாம்சங் நிறுவனம், கேலக்ஸி வாட்ச் 9 சீரீஸ் (Galaxy Watch 9 series) உடன் கேலக்ஸி இஸட் ஃபோல்டு 8 (Galaxy Z Fold 8) மற்றும் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 8 (Galaxy Z Flip 8) ஸ்மார்ட்போன்களையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கேலக்ஸி ஃபோல்ட் வைட்: சாம்சங் நிறுவனம் தனது நெக்ஸ்ட் ஜெனரேஷன் போல்டபிள் சீரிஸில் ஒரு புதிய மாடலை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் நம்பப்படுகிறது, இதற்கு தற்காலிகமாக "ஃபோல்ட் வைட்" (Fold Wide) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள போல்டபிள் போன்களை விட அகலமான கிடைமட்ட வடிவமைப்பை கொண்டிருக்கக்கூடும். விரிக்கப்பட்ட நிலையில், இது டேப்லெட் போன்ற தோற்ற விகிதத்தை வழங்கவும் வாய்ப்புள்ளது.
ஆப்பிள் VS சாம்சங்: ஆப்பிள் நிறுவனம் தனது முதல் போல்டபிள் ஐபோனை வருகிற 2026 செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே வெளியிட தயாராகி வருவதால், போல்டபிள் ஸ்மார்ட்போன் சந்தையில் தனது முன்னிலையை வலுப்படுத்துவதற்கான சாம்சங்கின் பரந்த உத்தியாக கேலக்ஸி ஃபோல்ட் வைட் ஸ்மார்ட்போனின் வெளியீடு கருதப்படுகிறது.
முதல் ஸ்மார்ட் கிளாஸ்: ஜூலை 22 ஆம் தேதி நடக்கும் நிகழ்வில், சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் கிளாஸ் ஆன "கேலக்ஸி கிளாசஸ்" (Galaxy Glasses) அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் - போல்ட் வைட் ஸ்மார்ட்போனிற்கு அடுத்தபடியாக - இது கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சமாக இருக்கும்.
கேலக்ஸி கிளாசஸ்-க்காக, ஸ்பெக்ஸ் மேக்கர் ஆன ஜென்டில் மான்ஸ்டர் உடன் சாம்சங் இணைந்து செயல்படுவதாக கூறப்படுகிறது. இது கூகுளுடன் இணைந்து உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு எக்ஸ்ஆர் ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கக்கூடும் என்றும், கூகுள் ஜெமினி ஆதரவையும் உள்ளடக்கி இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
அறிமுகத்திற்கு பின்னர், கேலக்ஸி கிளாசஸ் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வாங்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு ஏஐI-வார்டு பெற்ற அசிஸ்டென்ட் ஆக செயல்பட ஸ்பீக்கர்கள், மைக்ரோஃபோன்கள் மற்றும் ஒரு கேமராவையும் கொண்டிருக்கும். இந்த கிளாஸஸில் பில்ட்-இன்டிஸ்ப்ளே இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. கேலக்ஸி கிளாசஸ் மூலம், ஸ்மார்ட் கிளாசஸ் பிரிவில் மெட்டா மற்றும் ஷாவ்மீ சியோமி போன்ற போட்டியாளர்களுடன் சாம்சங் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications