Home
Mobile

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ப்ரைம்+ ஸ்மார்ட்போனின் ஐந்து முக்கிய தகவல்கள்

By Siva

கொரிய நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி நோட் 7 தோல்வி அடைந்ததால் உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் இழக்கும் நிலை ஏற்பட்டது.

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ப்ரைம்+ ஸ்மார்ட்போனின் ஐந்து முக்கிய தகவல்கள்

இந்நிலையில் இழந்த மார்க்கெட்டை மீண்டும் தூக்கி நிறுத்தும் வகையில் விரைவில் தனது மாடலான சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ப்ரைம்+ என்ற வகை ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளது.

ஜியோவை காலி செய்ய, ஏர்டெல் களமிறக்கிய புதிய திட்டங்கள்!

இந்திய மதிப்பில் ரூ.10,000க்கும் கீழ் தான் இந்த மாடலின் விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த போனின் ஐந்து சிறப்பம்சங்கள் குறித்து தற்பொது பார்ப்போம்.

எத்தனை கலரில் வருகிறது தெரியுமா?

எத்தனை கலரில் வருகிறது தெரியுமா?

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ப்ரைம்+ மாடல் ஸ்மார்ட்போன் நடுத்தர வர்க்கத்தை குறி வைக்கும் வகையில் குறைந்த பட்ஜெட்டில் வருவதோடு மூன்று நிறங்களில் வெளிவரவுள்ளது. கருப்பு, வெள்ளை மற்றும் பிங்க் நிறங்களில் வரும் இந்த போன் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும்.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலில் பெரிய வித்தியாசம் இருக்காது என்றும் நார்மலான கேலக்ஸி மாடலில்தான் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்ப்ளேவில் மாற்றம் இருக்குமா?

டிஸ்ப்ளேவில் மாற்றம் இருக்குமா?

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ப்ரைம்+ மாடல் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் வழக்கமான டிஸ்ப்ளேதான் இருக்கும் என்றும் அதில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றே கருதப்படுகிறது. மேலும் கொரில்லா கிளாஸ் மற்றும் பாதுகாப்பிற்கான மேல் கவர் இருக்காது என்றே கூறப்படுகிறது.

இருப்பினும் மெடியா டெக் MT3737T குவாட்கோர் பிராஸசர் உடன் 1.5 ஜிபி ரேம் மற்றும் 5 இன்ச் IPS (540x960 pixels) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பல ஸ்டோரேஜ் கெப்பாசிட்டியில் கிடைக்கும்

பல ஸ்டோரேஜ் கெப்பாசிட்டியில் கிடைக்கும்

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ப்ரைம்+ மாடலில் மூன்று வகையான ஸ்டோரேஜ் கெப்பாசிட்டியில் கிடைக்கும். அவை 8GB, 16GB, மற்றும் 32GB ஆகும். அதுமட்டுமின்றி மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 256GB வரை ஸ்டோரேஜை நீட்டித்து கொள்ளும் வசதியும் உண்டு.

கேமிராவில் நாம் எதிர்பார்க்கும் அம்சங்கள் இருக்குமா?

கேமிராவில் நாம் எதிர்பார்க்கும் அம்சங்கள் இருக்குமா?

புதியதாக வெளிவர இருக்கும் சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ப்ரைம்+ மாடல் ஸ்மார்ட்போனின் பின் கேமிரா 8 எம்பி திறன் கொண்டதாகவும், செல்பி கேமிரா என்று கூறப்படும் முன் கேமிரா 5 MP திறன் கொண்டதாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி LED ப்ளாஷ் வசதியும் உண்டு.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷாலோ அம்சங்களுடன் 2600mAh பேட்டரியும் இந்த மாடலில் உள்ளது.

அதெல்லாம் சரி, ஜியோ சிம் சப்போர்ட் செய்யுமா?

அதெல்லாம் சரி, ஜியோ சிம் சப்போர்ட் செய்யுமா?

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ப்ரைம்+ ஸ்மார்ட்போனி 4G LTE கனெக்டிவிட்டி ஆப்சன் இருப்பதால் நிச்சயமாக ரிலையன்ஸ் ஜியோ சிம் சப்போர்ட் செய்யும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Here are the 5 key features of Samsung Galaxy Grand Prime+. Take a look!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X