ஜியோவை காலி செய்ய, ஏர்டெல் களமிறக்கிய புதிய திட்டங்கள்!
ஜியோவுக்குப் போட்டியாகவோ அல்லது போட்டியினைச் சமாளிக்கவோ பாரதி ஏர்டெல் நிறுவனம் எதற்கும் தயார் தான் என்ற நிலையில் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ சேவைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவின் பிரபல டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் புதிய திட்டங்களைத் தனது பயனர்களுக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
புதிய சர்வதேச ரோமிங் திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் ஸ்மார்ட்பேக் எனப் பெயரிட்டுள்ளது. புதிய திட்டங்களின் படி இலவச இன்கமிங் கால், டேட்டா மற்றும் குறுந்தகவல் போன்ற சேவைகளை ஏர்டெல் வழங்கும் எனத் தெரிவித்துள்ளது.
எவ்வித ஏர்டெல் சேவைகளைப் பயன்படுத்தும் முன்பும் ரூ.149/- ஆரம்பக் கால ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த ரீசார்ஜ் செய்யாமல் பயனர்கள் சிறப்புச் சலுகைகளை அனுபவிக்க இயலாது.

அன்லிமிட்டெட் எஸ்எம்எஸ்
ஸ்மார்ட்பேக் திட்டத்தின் கீழ் அனைத்து திட்டங்களிலும் அன்லிமிட்டெட் எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அனைத்து வேலிடிட்டி காலங்களிலும் இந்தச் சலுகை வழங்கப்படுகிறது.

கால்பேக்
ஸ்மார்ட்பேக் மூலம் 30 நாட்களுக்கான வேலிடிட்டியுடன் 400 நிமிடங்களுக்கு இலவச வாய்ஸ் கால் வழங்கப்படுகின்றது. இதை கொண்டு பயனர்கள் இந்தியாவிற்கு அழைப்புகளை மேற்கொள்ள முடியும். ஒரு நாள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களில் 100 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால் வசதி வழங்கப்படுகின்றது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அழைப்புகள்
அன்லிமிட்டெட் இன்கமிங் அழைப்புகளையும் ஸ்மார்ட்பேக்கள் வழங்குகின்றன. உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இதனை பயனர்கள் பயன்படுத்த முடியும். ஐக்கிய அரபு நாடுகளில் இருப்பவர்களுக்கு 400 நிமிடங்களும் ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருப்பவர்களுக்கு 100 நிமிடங்களுக்கும் இன்கமிங் அழைப்புகள் வழங்கப்படுகின்றன.

டேட்டா
மேலும் பயனர்கள் 3ஜிபி அளவு 4ஜி டேட்டாவினை ஒரு மாத கால வேலிடிட்டியுடன் பெற முடியும். ஒரு நாள் வேலிடிட்டி கொண்ட பேக்களுக்கு 300 எம்பி டேட்டா வழங்கப்படுகின்றது.

துவக்கம்
சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு ஸ்மார்ட்பேக் கட்டணங்கள் ரூ.499/- முதல் துவங்குகின்றன. அமெரிக்கா, கனடா, ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு இந்த திட்டம் ரூ.649/- முதல் துவங்குகின்றன.
30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பேக்கள் ரூ.2499/- மற்றும் ரூ.4999/- முதல் துவங்குகின்றன.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications