Home
Mobile

மார்ச் 25 வரை வெயிட் பண்ணுங்க.. வருகிறது இரண்டு Samsung 5ஜி போன்கள்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி (Samsung Galaxy A57 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி (Samsung Galaxy A37 5G) போன்களின் இந்திய அறிவிப்பு தேதி ஆன்லைனில் கசிந்துள்ளது. அதன்படி இந்த இரண்டு போன்களும் வரும் மார்ச் 25-ம் தேதி மாலை 5.30 மணி அளவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் சாம்சங் நிறுவனம் இந்த போன்களின் அறிமுக தேதியை உறுதிப்படுத்தவில்லை.

ஆனாலும் தற்போது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி போன்களின் டீசர் வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. எனவே வரும் மார்ச் 25-ம் தேதி இந்த போன்கள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இப்போது ஆன்லைனில் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மார்ச் 25 வரை வெயிட் பண்ணுங்க.. வருகிறது இரண்டு Samsung 5ஜி போன்கள்..

சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A57 5G Specifications): எக்ஸிநோஸ் 1680 (Exynos 1680) சிப்செட் உடன் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்

அதேபோல் One UI 8.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 6 அல்லது 7 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக 6.7-இன்ச் சூப்பர் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அதுவும் இந்த புது சாம்சங் போனில் Xclipse 550 GPU கிராபிக்ஸ் ஆதரவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் IP67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ளது. 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவும் இதில் உள்ளது. கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

புதிய சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்படும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 6.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ளன. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

photos credit: manilashaker, samsung

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A57 5G and Samsung Galaxy A37 5G India launch date leaked online: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X