இளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய Samsung 5G போன்? ஆன்லைனில் வெளியான முக்கிய அம்சங்கள்.!

|

சாம்சங் நிறுவனம் விரைவில் சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும் இந்த கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன்.

ஏலியன்ஸ் என்ன மொழியில் பேசுவார்கள்? நேரில் பார்த்தால் என்ன செய்வது? பதில் இதுதான்.!

மேம்பட்ட செயல்திறன் வழங்கும்

மேம்பட்ட செயல்திறன் வழங்கும்

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனில் தரமான ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 1280 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கேமிங் பயன்பாடுகளுக்கு இந்த
சிப்செட் மிகவும் அருமையாக உதவும்.

விஷயம் ரொம்ப சீரியஸ்! உடனே இந்த Settings-ஐ மாத்துங்க.. இல்லனா உங்க WhatsApp அக்கவுண்ட் - கோயிந்தா தான்!விஷயம் ரொம்ப சீரியஸ்! உடனே இந்த Settings-ஐ மாத்துங்க.. இல்லனா உங்க WhatsApp அக்கவுண்ட் - கோயிந்தா தான்!

ஆண்ட்ராய்டு 13

ஆண்ட்ராய்டு 13

அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இணையத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனின் மாடல் எண் SM-A5460 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.11க்கு Samsung Galaxy S22 Ultra வாங்கலாம்: நம்பலனாலும் இதான் நிஜம்! லிமிடெட் ஆஃபர் பாஸ்!வெறும் ரூ.11க்கு Samsung Galaxy S22 Ultra வாங்கலாம்: நம்பலனாலும் இதான் நிஜம்! லிமிடெட் ஆஃபர் பாஸ்!

256ஜிபி ஸ்டோரேஜ்

256ஜிபி ஸ்டோரேஜ்

குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இது வெறும் ஆரம்பம் தான்! சீறிப்பாய காத்திருக்கும் விக்ரம்-எஸ்! இது ஏன் ஸ்பெஷல்?இது வெறும் ஆரம்பம் தான்! சீறிப்பாய காத்திருக்கும் விக்ரம்-எஸ்! இது ஏன் ஸ்பெஷல்?

32எம்பி கேமரா

32எம்பி கேமரா

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

விலைக்கும்.. ஸ்டைல் & லுக்கிற்கும் சம்பந்தமே இல்லாத ஒரு Smartwatch-னா.. அது இதுதான்!விலைக்கும்.. ஸ்டைல் & லுக்கிற்கும் சம்பந்தமே இல்லாத ஒரு Smartwatch-னா.. அது இதுதான்!

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் Super AMOLED ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

கிழிந்தது முகமூடி! ஒவ்வொரு Jio, Airtel யூசரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை.. போட்டு உடைத்த OOKLA!கிழிந்தது முகமூடி! ஒவ்வொரு Jio, Airtel யூசரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை.. போட்டு உடைத்த OOKLA!

கனெக்டிவிட்டி

சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனில் 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth v5.1, GPS/ A-GPS, IR பிளாஸ்டர், USB Type-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன.

 சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி

இணையத்தில் கசிந்த தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.20,000-க்குள் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A54 5G to be launched soon at a budget price with 25 Watts fast charging facility: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X