ஏலியன்ஸ் என்ன மொழியில் பேசுவார்கள்? நேரில் பார்த்தால் என்ன செய்வது? பதில் இதுதான்.!

|

ஆராய்ச்சியாளர்கள் ஒரு முக்கியமான கேள்விக்கு பதிலளிக்க சர்வதேச நிபுணர்கள் மையத்தை அமைத்திருக்கின்றனர். அது, Aliens நம்மை தொடர்பு கொண்டால் நாம் என்ன செய்வோம்? என்ற கேள்வியாகும்.

அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் கேள்விகள்

அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் கேள்விகள்

தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் எத்தனையோ கட்டங்கள் முன்னேறி இருக்கிறது, முன்னேறி வருகிறது. ஆனால் இந்த காலத்திலும் பதில் கண்டறிய முடியாத பல கேள்விகள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கின்றன. எடுத்துக்காட்டாக சொன்னால், "கோழியில் இருந்து முட்டை வந்ததா முட்டையில் இருந்து கோழி வந்ததா" என்ற கேள்விக்கு பதில் கிடையாது.

hypothetical question என்றால் என்ன?

hypothetical question என்றால் என்ன?

இதுபோன்ற கேள்விகளை பொதுவாக hypothetical question என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது அனுமான கேள்வி என்று குறிப்பிடுவார்கள். hypothetical question என்பது ஒரு கற்பனையான கேள்வி, அனுமானத்தின் அடிப்படையிலானது, உண்மைகள் அல்ல போன்ற விளக்கங்களை குறிக்கிறது.

ஏலியன்ஸ் எந்த மொழியில் பேசுவார்கள்?

ஏலியன்ஸ் எந்த மொழியில் பேசுவார்கள்?

பல்வேறு திரைப்படங்களில் ஏலியன்ஸ் குறித்த காட்சிகளும் அவர்களின் தோற்றங்களும் காண்பிக்கப்பட்டாலும் அது ஊர்ஜிதமான தகவல்கள் கிடையாது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் திரைப்படங்கள் எந்தெந்த மொழியில் வெளியாகிறதோ அந்தந்த மொழியில் பூமியில் உள்ள மனிதர்கள் ஏலியன்ஸ்களிடம் தொடர்பு கொள்வார்கள். ஆனால் இது நிஜத்தில் சாத்தியமில்லை.

சரி, அப்படி ஒருவேளை ஏலியன்ஸ்களை நேரில் பார்த்தால் அவர்கள் எந்த மொழியில் பேசுவார்கள், அவர்களிடம் எப்படி தொடர்பு கொள்வது என்று சிந்தித்தது உண்டா? இதை யோசித்த ஆராய்ச்சியாளர்கள் இதற்கான தீர்வை கண்டுபிடிக்கும் களத்தில் இறங்கி இருக்கின்றனர்.

சர்வதேச ஆராய்ச்சி மையம்

சர்வதேச ஆராய்ச்சி மையம்

இதுகுறித்து செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் ஜான் எலியட் என்பவரின் கூற்றுப்படி, ஒரு புதிய சர்வதேச ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் இதற்குத் தயாராகி வருகின்றனர். மனித குலத்தின் மீதான தாக்கம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். ஆதாரங்கள் குறித்து மதிப்பிடுவதற்கு மட்டுமல்ல சமூகபிரதிபலிப்பைக் கருத்தில் கொள்வதற்கும் ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது என கூறினார்.

மொழியின் கட்டமைப்பாக பூமி

மொழியின் கட்டமைப்பாக பூமி

மேலும் எலியட் இதுகுறித்து கூறுகையில், மனித குலகத்தின் மீதான தாக்கம் குறித்து சிந்திப்பதையும் தாண்டிச் செல்ல வேண்டிய நேரம் இது, ஒரு வேற்றுகிரகவாசியை சந்திக்கிறோம் என்றால் அத்தகைய சூழ்நிலையில் நாம் எவ்வாறு உரையாடுவோம் என்பதை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.

மொழியின் கட்டமைப்பாகக் கருதப்படும் பூமிக்கு அப்பாற்பட்ட இடங்களில் வரும் சிக்னல்களை ஸ்கேன் செய்வது மற்றும் அதன் அர்த்தத்தை அறிவது ஒரு விரிவான செயல்முறையாகும் என தெரிவித்தார். இதுகுறித்த ஆராய்ச்சிகள் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வைரலாகும் ஏலியன்ஸ் புகைப்படங்கள்

வைரலாகும் ஏலியன்ஸ் புகைப்படங்கள்

ஏலியன்ஸ் குறித்த தகவல்கள் அவ்வப்போது செய்திகளாக உலா வருவது வழக்கம். ஆதாரமாக சுட்டிக்காட்டப்படவில்லை என்றாலும் ஒருசில சிசிடிவி காட்சிகளோ வேறு சில புகைப்படங்களோ இதோ ஏலியன்ஸ் என்று வைரலாகும். ஆனால் அதுவும் ஆதாரமான தகவல்கள் கிடையாது என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும்.

UFO என்றால் என்ன?

UFO என்றால் என்ன?

பல யுஎஃப்ஓ குறித்த தகவல்களும் வெளியாகி இருக்கிறது. யுஎஃப்ஓ என்பது அடையாளம் தெரியாத வானில் பறக்கும் பொருட்கள் ஆகும். அடையாளம் குறிப்பிடப்படாத பொருகள் கண்டறியும் போதெல்லாம் புலப்படும் ஒரே வார்த்தை யுஎஃப்ஓ என்பதுதான். காரணம் யுஎஃப்ஓ என்பது ஏலியன்கள் பயன்படுத்தப்படும் விண்கலன்களை குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

சிக்கியது ஏலியன் உருவமா?

சிக்கியது ஏலியன் உருவமா?

எடுத்துக்காட்டாக சொன்னால், அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம உயிரினம் போன்ற ஒரு தோற்றம் சிக்கியது. இதோ ஏலியனுக்கான ஆதாரம் என இந்த புகைப்படம் வைரலானது. டெக்ஸாசின் அமரில்லோ நகரத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், கேமராவில் பதிவான இந்த உயிரினத்தின் புகைப்படம் பகிரப்பட்டது. அமரில்லோ மிருகக்காட்சி சாலையில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் இந்த உயரினத்தின் படம் பதிவாகியுள்ளதாக அதன் பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டது.

அடையாளம் காண முடியாத உயிரினம்

அடையாளம் காண முடியாத உயிரினம்

பதிவிடப்பட்டுள்ள புகைப்படத்தில் மிருகக்காட்சி சாலையின் வேலிக்கு வெளியே இருட்டில் சந்தேகத்திற்கு இடமான தோற்றத்தில் ஒரு உருவம் காணப்படுகிறது. சற்று உயரமாக வித்தயாசமான தோற்றத்துடன் இரண்டு கால்களில் நிற்கிறது, அதன் காதுகள் வழக்கத்திற்கு மாறாக கூரானதாக இருக்கிறது. இந்த உயிரனம் என்ன என்பது அடையாளம் காண முடியாத காரணத்தால், அடையாளம் காணப்படாத அமரில்லோ பொருள் (UAO- Unidentified Amarillo Object) என குறிப்பிடப்பட்டது.

Best Mobiles in India

English summary
What would we do if aliens contacted us? How do we share our information with aliens? Read More this in Gizbot Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X