மலிவு விலையில் சாம்சங் கேலக்ஸி A30s | சாம்சங் கேலக்ஸி A50s அறிமுகம்!
சாம்சங் கேலக்ஸி A30s மற்றும் சாம்சங் கேலக்ஸி A50s ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் பற்றிக் கடந்த சில வாரமாக ஏகப்பட்ட லீக்ஸ்களும், தகவல்களும் வெளியாகியது.

ஒரு வழியாக சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் இந்தியச் சந்தையில் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.

4 நிறங்களில் A50s மற்றும் A30s
இதற்கு முன்பு வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி A50 மற்றும் சாம்சங் கேலக்ஸி A30 ஆகின ஸ்மார்ட்போன்களின் மேம்பட்ட வெர்ஷனாக வேறு சில மாறுபாடுகளுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி A30s மற்றும் சாம்சங் கேலக்ஸி A50s என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களும் ப்ரிஸம் க்ரஷ் பிளாக், ப்ரிஸம் க்ரஷ் ஒயிட், ப்ரிஸம் க்ரஷ் கிரீன், மற்றும் ப்ரிஸம் க்ரஷ் வயலட் என்ற 4 நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலைப் பட்டியல் மற்றும் விற்பனை
சாம்சங் நிறுவனம் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியச் சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இந்த ஸ்மார்ட்போன்களின் விலைப் பட்டியல் மற்றும் எப்பொழுது இது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் என்ற தகவல்களை இன்னும் சாம்சங் சரியாகத் தெரிவிக்கவில்லை.

குறைவான விலையில் சாம்சங் கேலக்ஸி A30s
முன்பு அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி A30 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருந்த ஸ்கிரீன்களை விடக் குறைந்த ரெசல்யூஷன் ஸ்கிரீன்களை தற்பொழுது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி A30s ஸ்மார்ட்போனில் வழங்கியுள்ளது. இதனால் இதன் விலை முன்பு அறிமுகம் சாம்சங் கேலக்ஸி A30 இன் விலையை விடக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகமாகும் சாம்சங் கேலக்ஸி A50s விலை
சாம்சங் அறிமுகம் செய்து உள்ள புதிய சாம்சங் கேலக்ஸி A50s ஸ்மார்ட்போனில் ஹையர் ரெசல்யூசன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதனால் இதன் விலை முன்பு அறிமுகம் செய்யப்பட்டசாம்சங் கேலக்ஸி A50 ஸ்மார்ட்போன் மாடலை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி A50s சிறப்பம்சங்கள்
- 6.4' இன்ச் முழு எச்.டி சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி U டிஸ்பிளே
- ஆக்டா கோர் பிராசஸர்
- 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி மற்றும் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு வேரியண்ட்
- 512 ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்.டி கார்டு சேவை
- 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
- 8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா
- 5 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமரா
- 32 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
- USB Type-C போர்ட்
- இன்-டிப்பிலே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 15W சார்ஜிங்
- 4000 எம்.ஏ.எச் பேட்டரி
- 6.4' இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே
- ஆக்டா கோர் பிராசஸர்
- 3 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி, 64 ஜிபி மற்றும் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு வேரியண்ட்
- 512 ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்.டி கார்டு சேவை
- 25 மெகா பிக்சல் கேமரா
- 8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா
- 5 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமரா
- 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
- USB Type-C போர்ட்
- இன்-டிப்பிலே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 15W சார்ஜிங்
- 4000 எம்.ஏ.எச் பேட்டரி



Click it and Unblock the Notifications








