8ஜிபி ரேம் உடன் கேலக்ஸி ஏ32 ஸமார்ட்போன் அறிமுகம்.! விலை?

|

சாம்சங் நிறுவனம் 8ஜிபி ரேம் வசதியுடன் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் ஏற்கனவே 6ஜிபி ரேம் உடன் இந்த சாதனம் விற்பனைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி

அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ32 4ஜி ஸ்மார்ட்போனை ரூ.21,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ32 4ஜி மாடலை ரூ.23,499-விலையில் வாங்க முடியும். வெள்ளை, நீலம், கருப்பு போன்ற நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 299 விலை முதல் 100 ஜிபி டேட்டா வரை கிடைக்கும் Airtel மை வைஃபை திட்டங்கள்.. இது வேற லெவல் ப்ரோ..ரூ. 299 விலை முதல் 100 ஜிபி டேட்டா வரை கிடைக்கும் Airtel மை வைஃபை திட்டங்கள்.. இது வேற லெவல் ப்ரோ..

து 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ்

சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் ப்ரைட்நஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இதுவரை இல்லாத ராட்சத பச்சை நிற அரோரா நெருப்பால் சூழப்பட்ட பூமி.. சூரியனின் வித்தியாச நடத்தை தான் காரணமா?இதுவரை இல்லாத ராட்சத பச்சை நிற அரோரா நெருப்பால் சூழப்பட்ட பூமி.. சூரியனின் வித்தியாச நடத்தை தான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ32 4ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

50எம்பி ரியர் கேமரா மற்றும் தரமான டிஸ்பிளே வசதியுடன் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!50எம்பி ரியர் கேமரா மற்றும் தரமான டிஸ்பிளே வசதியுடன் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

 ஆனது ஆக்டோ-கோர் மீடியாடெக்

சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

வெடித்து சிதறிய OnePlus Nord 2 5G.. பலத்த தீக்காயத்துடன் பயனர் சிகிச்சை.. OnePlus வெடிக்க என்ன காரணம்?வெடித்து சிதறிய OnePlus Nord 2 5G.. பலத்த தீக்காயத்துடன் பயனர் சிகிச்சை.. OnePlus வெடிக்க என்ன காரணம்?

ஸ்மார்ட்போன் மாடல்

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ32 4ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

Vivo V23e இப்படி ஒரு மிரட்டலான அம்சத்துடன் அறிமுகமா? பட்ஜெட் போனில் எக்ஸ்டெண்டட் ரேம் சேவை.!

 கேலக்ஸி ஏ32 5ஜி

குறிப்பாக இந்த கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் சாம்சங் நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் அடுத்த ஆண்டு துவகத்தில் பல 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சாம்சங் நிறுவனம். குறிப்பாக புதிய சாம்சங் சாதனங்களுக்கு நல்லவரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A32 with 8GB RAM Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X