Vivo V23e இப்படி ஒரு மிரட்டலான அம்சத்துடன் அறிமுகமா? பட்ஜெட் போனில் எக்ஸ்டெண்டட் ரேம் சேவை.!

|

Vivo V23e அதன் V-சீரிஸில் நிறுவனத்தின் சமீபத்திய மாடலாக அறிமுகமானது. ஏப்ரல் மாதத்தில் Vivo V21 5G மற்றும் Vivo V21 உடன் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo V21e ஸ்மார்ட்போன் மாடலுக்கு மேம்படுத்தப்பட்டதாக புதிய Vivo போன் மாடலாக இது வருகிறது. Vivo V23e ஆனது 20:9 டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ புதிய ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா சென்சார் வழங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் இந்த சாதனத்தின் சிறப்பம்ச விபரங்களை முழுமையாகப் பார்க்கலாம்.

எக்ஸ்டெண்டட் ரேம் சேவையா? அப்படி என்றால் என்ன?

எக்ஸ்டெண்டட் ரேம் சேவையா? அப்படி என்றால் என்ன?

Vivo V23e ஸ்மார்ட்போன் மாடல் நீட்டிக்கப்பட்ட ரேம் 2.0 தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது எக்ஸ்டெண்டட் ரேம் என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இது டிஃபால்ட் ரேமுக்கு உள்ளமைக்கப்பட்ட சேமிப்பகத்தை ஒதுக்குவதன் மூலம் மல்டி டாஸ்கிங் அம்சத்திற்குக் கூடுதல் 4GB நினைவகத்தை உருவாக்கிக் கொடுக்கும் ஆற்றல் கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் பட்ஜெட் விலை பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.

Vivo V23e ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Vivo V23e ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Vivo V23e ஸ்மார்ட்போன் ஒற்றை வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய Vivo V23e ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பக ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வெறும் VND 8,490,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி, இது தோராயமாக ரூ. 27,800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் தற்போது Vivo Vietnam இணையதளத்தில் கருப்பு மற்றும் ப்ளூ ரோஸ் நிறங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. மற்ற சந்தைகளில் அதன் கிடைக்கும் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தினமும் வந்த 'குட் மார்னிங்' மெசேஜ்.. 5.91 லட்சம் அபேஸ்.. உஷார் மக்களே.. இந்த தப்ப நீங்க செய்யாதீங்க..தினமும் வந்த 'குட் மார்னிங்' மெசேஜ்.. 5.91 லட்சம் அபேஸ்.. உஷார் மக்களே.. இந்த தப்ப நீங்க செய்யாதீங்க..

Vivo V23e ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

Vivo V23e ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

Vivo V23e ஸ்மார்ட்போன் சாதனம் டூயல் நானோ சிம் கொண்ட அம்சத்துடன், Vivo V23e ஆனது ஆண்ட்ராய்டு 11 இல் Funtouch OS 12 உடன் இயங்குகிறது. இந்த புதிய Vivo V23e ஸ்மார்ட்போன் 6.44' இன்ச் முழு HD பிளஸ் கொண்ட 1,080 x 2,400 பிக்சல்கள் உடைய AMOLED டிஸ்ப்ளேவை 20:9 விகிதத்துடன் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G96 சிப்செட் உடன் செயல்படுகிறது. முன்பே தெரிவித்தது போல், இது 8 ஜிபி ரேம் கொண்ட ஒற்றை வேரியன்ட் மாடலாக மீடியாடெக் ஹீலியோ G96 சிப்செட் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

Vivo V23e ஸ்மார்ட்போனின் கேமரா விபரம்

Vivo V23e ஸ்மார்ட்போனின் கேமரா விபரம்

Vivo V23e ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம் பற்றி பார்க்கையில், இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் எஃப்/1.79 லென்ஸ், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் கொண்ட 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்பி எடுப்பது மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக இந்த புதிய Vivo V23e ஸ்மார்ட்போனில், f/2.0 லென்ஸுடன் முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

JioPhone Next எதிர்பார்த்த விலையில் வராததற்கு இதான் காரணமா? EMI விலை கம்மியாக இருந்தும் தயக்கம் ஏன்?JioPhone Next எதிர்பார்த்த விலையில் வராததற்கு இதான் காரணமா? EMI விலை கம்மியாக இருந்தும் தயக்கம் ஏன்?

Vivo V23e ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் விபரம்

Vivo V23e ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் விபரம்

ஸ்டோரேஜ் மற்றும் இதர அம்சங்கள் பற்றி பார்க்கையில், இந்த புதிய Vivo V23e ஸ்மார்ட்போன் சாதனம், 128 ஜிபி கொண்ட உள் சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. கூடுதல் ஸ்டோரேஜ் சேவைக்காக இந்த புதிய ஸ்மார்ட்போனில் ஒரு பிரத்தியேக microSD கார்டு ஸ்லாட் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் வழியாக ஸ்டோரேஜ்ஜை நீங்கள் விரிவாக்க முடியும். இணைப்பு விருப்பங்களில், இது 4G LTE, Wi-Fi, Bluetooth v5.2, GPS/ A-GPS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரை ஆதரிக்கிறது.

Vivo V23e ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் எப்போது?

Vivo V23e ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் எப்போது?

Vivo V23e ஆனது 44W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,050mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கருப்பு நிற மாறுபாட்டிற்கு ஃபோன் 160.87x74.28x7.36mm அல்லது ப்ளூ ரோஸ் விருப்பத்திற்கு 160.87x74.28x7.41mm அளவைக் கொண்டுள்ளது. தவிர, இதன் எடை 172 கிராமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும்,விவோ நிறுவனத்தின் முக்கிய சந்தையாகத் திகழும் இந்தியச் சந்தையில் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெகு விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா? யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? யாரெல்லாம் பயனடையலாம்?LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா? யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? யாரெல்லாம் பயனடையலாம்?

விவோ வி21இ 5ஜி மீது அதிரடி விலை குறைப்பு

விவோ வி21இ 5ஜி மீது அதிரடி விலை குறைப்பு

அமேசான் தளத்தில் விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 27,990 ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் இப்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ. 24,990 விலையில் வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Vivo V23e With Triple Rear Cameras 44W Fast Charging Launched Know Price And Specification : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X